நம் நாடு பல பிரச்சினைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சந்தித்து வருகின்றது. 2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பற்றாக்குறை அல்லது துண்டுவிழும் தொகை 7 வீதம் என மதிப்பிடப்பட்ட ஒரு சவாலான பொது நிதி நிலைமையில் அது ஆக்கப்பட்டுள்ளது. அத்தோடு இது 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வருவாயில் அதிகூடிய குறைப்பைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுவதனால் அதற்கான பல ஊக்கத்தொகைகளை தயார்பண்ணவேண்டிய ஒரு சங்கடத்தில் இருந்து வருகின்றது எமது நாடு. இத்தனை பிரச்சினைகளுக்கும் அப்பால் புதிதாக வந்துள்ள அரசு 150,000 பேரினை அரச துறையில் இணைத்துக்கொள்ளவும் எத்தணித்து வருவது எமது திறைசேரி அல்லது கஜானாவில் உள்ள பணத்தொகையுடன் ஒப்பிடும்போது பாரிய சவாலாகவும் தலையிடியாகவும் அரசுக்கு மாறி இருக்கின்றது இன்று.
13 February 2020
12 February 2020
அரச ஊழியர்களின் சேவைகள் சுதந்திரமானதாக வழங்க இடமளிக்கவேண்டும்.
எமது நாட்டில் அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன, அதனால்தான் அவற்றைச் செய்வதற்கு அவர்களின் நேர்மை மிக முக்கியமானது. இன்று ஒரு பொது அதிகாரி பொது நலனுக்காக எழுந்து நின்று அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை எழுப்புவதும், நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தாவுக்கு பதிலளிப்பதும் இந்த வாரம் சமுக ஊடகங்கள் முழுவதும் வைரலாகியது. இது அடிக்கோடிட்டுக் காட்டுவது என்னவென்றால், அரசியல்வாதிகள் எடுக்கும் கேள்விக்குரிய முடிவுகளையும் கொள்கைகளையும் எதிர்கொள்வதற்கும், இந்த நிலைமையை மாற்ற வேண்டியதன் அவசியத்திற்கும் இந்த நாட்டில் பொது அதிகாரியின் அதிகாரங்கள் எவ்வளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதனையே.09 February 2020
இலங்கை 2030 அளவில் எதிர்கொள்ள இருக்கும் பொருளாதார நெருக்கடிகள்.
இனிவரும் அடுத்த பத்து வருடங்கள் இலங்கையின் பொருளாதாரம் எவ்வாறான நிலையில் இருக்கப்போகின்றது என நினைத்துப்பார்தால் அது ஆபத்தானது என பல பொருளியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதற்கு பல அகப் புறக்காரணிகள் செல்வாக்குச் செலுத்தியும், செலுத்தப்பட்டும், செலுத்தப்பட இருப்பதும் கருத்தில் கொள்ளவேண்டும். மாறிவரும் காலநிலை அதனால் ஏற்படும் அனர்த்த இழப்புகள், சனத்தொகை வளர்சி, வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, திறனுடைய தொழில்நுட்பமாற்றம், திடீர் திடீர் என ஏற்படும் வைரஸ் அச்சுறுத்தல்கள், சர்வதேச பொருளாதாரப் போட்டிகள் என்பன பாரிய அழுத்தங்களை எமது பொருளாதாரத்தில் ஏற்படுத்தாமல் இல்லை.
இவற்றுக்கு அப்பால் குறிப்பாக பின்வரும் காரணிகளின் மாற்றம் எந்த வகையில் தாக்கத்தினைக் கொண்டுவரும் என்பதனை நாம் கருத்தில் கொள்ளவேண்டிய தருணம் இது.
04 February 2020
நாம் பூரண சுதந்திரம் பெற்றவர்களா?
இன்று எமது நாட்டில் 72வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது. இற்றைக்கு 72 வருடங்களுக்கு முன்னர் எமது நாட்டை தம்வசப்படுத்தி, எம்மையெல்லாம் அடக்கி அடிமைகளாக, ஒடுக்கி ஒன்றுமில்லாதவர்களாக தமது ஆட்சிக்கு கீழ் ஆங்கிலேயர்கள் எம்மைக் கட்டி ஆண்டு வந்தனர். அந்த அடிமை விலங்கை உடைக்க அல்லும் பகலும் போராடி பல உயித்தியாகங்களை செய்து நமது முன்னோர்கள் பின்னர் எமது நாட்டை நாங்களே ஆள திருப்பி சுதந்திரமாகப் பெற்றுக்கொண்ட தினம். இருப்பினும், நம்மில் பலர் இன்று தமக்கு தாமே கேட்டுக்கொள்ளும் கேள்வி, சுதந்திரம் என்றால் என்ன? இந்த சுதந்திரம் எப்படிக் கிடைத்தது? என்பதை எல்லாம் அறியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திர தினம் ஒரு விழாவாகவே கடைபிடிக்கப்பட்டு, மற்ற விடுமுறை நாட்களைப்போல் இதுவும் ஒரு விடுமுறைநாளாக மட்டும் மாற்றப்பட்டுவிட்டது.
01 February 2020
ஈர அருவி ஓடும் இனிமையான தேசம்!
ஈர அருவி ஓடும்- ஒரு
இனிமையான தேசம்
மலையோரம் குளிர் வீச
வயல்கள் ஆடும் வீடு
கூடி அலைகள் மோதும்- கடல்
கோடி அழகு சேர்க்கும்
தமிழ் அன்னை அரசாண்ட
தலைமை கொண்ட நாடு
உயிரிலும் மேலான தமிழை வளர்த்த தாய்
உறவுகள் சீராக உயிரைக் கொடுத்த தால்
ஈகை பெருகும் ஈழமண்
இனிமையான தேசம்
மலையோரம் குளிர் வீச
வயல்கள் ஆடும் வீடு
கூடி அலைகள் மோதும்- கடல்
கோடி அழகு சேர்க்கும்
தமிழ் அன்னை அரசாண்ட
தலைமை கொண்ட நாடு
உயிரிலும் மேலான தமிழை வளர்த்த தாய்
உறவுகள் சீராக உயிரைக் கொடுத்த தால்
ஈகை பெருகும் ஈழமண்
25 January 2020
திறமையை வளர்த்து வறுமையை ஒளித்தல்: ஒரு ஆய்வு பார்வை.
அறிமுகம்.
எமது நாட்டைப்போன்று உலகில் வளர்ந்துவரும் நாடுகள் எதிர்நோக்கும் முக்கிய இருபெரும் பிரச்சனைகளாவன கொடிய வறுமையும், பெருமளவு வேலையின்மையும் ஆகும். இவைகள் ஒன்றோடொன்று தொடர்புடையன. மக்களுக்கு வேலையின்மை காரணத்தினால், வருமானம் ஈட்ட முடியாமல் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்துவருகின்றனர். வேறுசிலர் வேலை செய்தும் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர். பல நூற்றாண்டுகளாக இலங்கையில்; வறுமைநிலை நிலவி வருகிறது. அரசு கொண்டுவந்த பல நல்ல திட்ட காலங்களில்; வறுமை குறைப்பு முக்கியமான இலக்குகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த ஏழை, எளிய மக்களைப் பற்றியும், அவர்களது சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளைப் பற்றியும் நாம் அறிந்திருத்தல் வேண்டும். அப்பொழுது தான் அரசு திறமையான வறுமை ஒழிப்பு கொள்கைகளை மேற்கொள்ள முடியும்.
19 January 2020
கிழக்கு தமிழர் தை திருநாள் கொண்டாட்டம் 2020
இன்று பலராலும் அறியப்பட்ட தமிழர்களின் வருடப்பிறப்பு தைத்திருநாள்தான் என்பது, பலருக்கு தெரியாமலேயே கொணடாடப்பட்டு வருகின்றது. இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழர்களின் தாயக மண்ணில் பலப் பல இடப்பெயர்வு, உயிர் உடமை இழப்பு போன்ற யுத்தத்தின் முப்பது வருடக் கோரத்தாண்டவம், மற்றும் காலநிலை மாற்றத்தினால் கிடைத்த சுனாமி வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த அழிப்புகள், அத்துடன் காட்டுவிலங்குளான யானை, பறவைகள் மற்றும் ஏனைய மிருங்களுடனான போராட்டங்கள் இத்தனையுடனும் போராடிப் போராடி எமது கலாசாரத்தினைக் கூட கட்டி காத்துவர முடியாத நிலையில் எம்மில் பல குடும்பங்கள் ஆக்கப்பட்டுவிட்டனர்.
17 January 2020
எமது நாட்டில் தொழிலதிபர்களாகும் பெண்கள் எதிர்நோக்கும் இடர்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் முடிவுற்றதன் பின் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும், குடும்பச்சுமையை இறக்கி வைக்கவும், சகோதர சகோதரிகளை கல்வி கற்பிப்பதற்கும், நாளாந்த பசியைப் போக்கிக்கொள்ளவும் அத்துடன் குடும்ப வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதற்காகவே பெண்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைக்கு செல்கின்றனர். அது மாத்திரமல்ல வீட்டில் இருந்தவாறே வேதனமில்லாது வேலை செய்வதில் 20.4% விகிதமானவர்கள் பெண்களாகவும் வெறும் 3% விகிதமானவர்களே ஆண்கள் எனவும் தரவு கூறுகின்றது.







