ADS 468x60

05 September 2018

தண்ணீரை வணிகப் பொருளாக மாற்றி எம்மை வரலாற்றின் கொடிய பற்றாக்குறைக்கு அழைத்துச் செல்லத் துடிக்கும் தனியார் முதலைகள்!

எமது பகுதியில் திரும்பத் திரும்பத் தண்ணீரைப் பற்றிப் பேசக் கூடியவர்களால்  ' நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவரின் வாக்கு அடிக்கடி சொல்லப்படுகிறது. இங்கு சொல்வது நல்ல நீரைப் பற்றி, உப்பு நீரைப் பற்றி அல்ல என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், அந்த நன்நீரைப் பற்றிய விவரங்கள் நமக்கு அதிகம் தெரியாது. இவ்வாறு ஒரு முக்கிய வளம் எமக்கு கிடைத்த ஒரு சொத்து அந்த வளத்தின்மேல் பிறருக்கு உள்ள அக்கறை, அதன்மூலம் எதிர்கொள்ள இருக்கும் பாதக விளைவுகள் மற்றும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிவகைகள் என்பனபற்றி இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

நமக்கெல்லாம் தெரியும் இப்போ வெயில் காலம் வந்துவிட்டது. அதனால் பல கிராமங்களில், பல மைல் தூரம் ஒரு குடம் தண்ணீருக்காக நடக்க துவங்கிவிட்டனர். இத்தனை நாள், இது எங்கோ கிராமத்தில் இருக்கும்,  நமக்கு சம்மந்தம் இல்லாத மக்களின் பிரச்னை என்று பேசிவந்தோம். ஆனால், இனி நாம் அப்படி மாற்றான் பிரச்னையாக கருத முடியாது. ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் ஆபத்து வந்துவிட்டது. இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகள் அதன் பத்து வயதில் தண்ணீருக்காக பிச்சை எடுக்க கூட நேரலாம். 

இஸ்மாயில் செராஜெல்டின் என்ற உலக வங்கியின் துணைத் தலைவர் சொன்னது 'எண்ணை வளத்தை மையப்படுத்திய போரை தொடுத்து ஓய்ந்துவிட்ட நிலையில் அடுத்த நூற்றாண்டின் யுத்தங்கள் தண்ணீருக்காக நடக்கும்' என்றார். அவர் மேலும் கூறுகையில் 'குடிநீரை உலக வியாபாரமாக்க நாங்கள் முடிவு செய்துவிட்டதால் யுத்தங்கள் நடத்தி திணிப்போம்' என்ற மனநிலை உருவாகியுள்ளது என்பதுதான் அவர் கருத்து. 
இதுபோலவே மனிதயுத்தம் நடாத்தி எம்மை நலிவுறச் செய்த நிலையில் நமது பிரதேசங்களுக்கிடையே தண்ணீருக்கான அரசியல் மோதல்களை தொடங்கவுள்ளனரென மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர். இது மக்களை பிளவுபடுத்தும் ஒரு இறுக்கமான சூழலை அவை தோற்றுவிக்கின்றன என்பது மட்டும் உண்மை. 

உங்களுக்கு தெரியுமா, உலகில் இருக்கும் தண்ணீரில் 97.5மூ கடல் தண்ணீர். மீதமுள்ள 2.5மூ நல்ல தண்ணீரில் மூன்றுக்கு இரண்டு பங்குக்கும் மேல் ஆர்க்டிக், அண்டார்க்டிக் பகுதிகளிலும், இமயமலை போன்ற பனிமலைகளிலும் உறைந்துகிடைக்கிறது. மீதமுள்ள பங்கில் பெரும் பகுதி நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீர். கிடைக்கும் தண்ணீரில் 0.26மூ மட்டுமே ஏரிகளிலும் குளங்களிலும் நீர்த்தேக்கங்களிலும் ஆறுகளிலும் இருக்கிறது என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

எதிர்கொள்ளும் சவால்கள்!
இது இவ்வாறு இருக்க, இன்று நாம் ஊடகங்கள் ஊடாக அடிக்கடி கேட்கின்ற சொற்பதங்கள் 'நீர் பற்றாக்குறை' றயவநச ளஉயசஉவைல மற்றும் 'காலநிலை மாற்றம்' உடiஅயவந உhயபெந என்பனவாகும். இவை துரதிஷ்ட்டவசமான உண்மையாகும். குறிப்பாக சுத்தமான நீரின்மையால் வருடத்துக்கு 1.2 பில்லியன் மக்களை இழக்கின்றோம், அந்த நீரினால் வரும் நோய்களால் மாத்திரம் வருடத்துக்கு 5 மில்லியன் சிறார்களை இழக்கின்றோம், ஆறுகள் தொடர்ந்து வற்றிவருகின்றன, வரட்சி காரரணமாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகின்றது. இவை எல்லாம் மட்டக்களப்புக்கு ஒன்றும் விதிவிலக்கல்ல. 

எமது நீர் வளம் எமக்கே போதாத நிலையில் பிறருக்கான நீர்வழங்கலை எமது பிரதேசத்தில் இருந்து எவ்வாறு கொடுப்பது? அப்படியென்றால் எமது எல்லாவற்றாலும் நலிவுற்ற மக்களை தண்ணீர்ப்பிச்சை கேட்கும் மக்களாக மாற்றவா திட்டங்கள் தீட்டப்படுகின்றது என்ற கேள்வி பாமரன் முதல் படித்தவன்வரை எழத்தொடங்கியுள்ளமை அதிசயமல்ல. இவ்வாறு வளங்களைச் சுரண்ட நினைப்பது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இருக்கின்றது.

உண்மையில் நாம் முடிவடையக்கூடிய வளங்களைக்கொண்டுள்ள அதே நேரம் மறுபுறத்தில் அவற்றுக்கான கேள்வி அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதுபோல் வருடா வருடம் எமது சனத்தொகை அதிகரித்து வருகின்றது. இந்த முடிவடையக்கூடிய வளங்களின் பட்டியலில் முதலில் உள்ளது தண்ணீராகும், இவற்றை மேலதிகமாக பெறுவதற்கு மட்டக்களப்பு மாவட்டம் ஒன்றும் ஈரவலயத்தில் அமைந்திருக்கவில்லை. அத்துடன் விவசாயம், உட்கட்டுமான அபிவிருத்தி, புதிய குடியேற்றங்கள் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு ஏனைய நாடுகளைப்போல் மழை குறைவடைந்து காலநிலை மாற்றம் எனும் நச்சுவட்டத்துள் சிக்கித்தவிக்கின்றோம். 

இவற்றையெல்லாம். பல திட்டங்கள் மூலம் இங்குள்ள நீர் நகர்புறங்களுக்கு வழங்கப்படுகின்ற நிலையில், மட்டக்களப்பு மேற்கு வரட்சியான கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அங்குள்ள தூய்மையற்ற குளங்குட்டைகளிலேயே ஆடு மாடுகளுடன் ஒன்றாய் குளித்து குடித்து பாவித்துவருகின்றமையை பலர் வெளிப்படுத்தியுள்ளமை அனைவருக்கும் தெரியும். ஆக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்போலத் தண்ணீர் கிடைப்பதிலும் எமது பிரதேசத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன.

மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் உள்ள நீர் நகர்புற மக்களின் தேவைக்கு மாத்திரமா வழங்கப்படுகின்றது? சொந்த வளத்தைப் பயன்படுத்தக்கூட அந்த நில மக்களுக்கு உரிமை கிடையாதா? அல்லது அதை பெற்றுக்கொடுக்க தெம்பில்லாதவர்களா இவர்களை ஆழுகின்றனர்? மற்றும் நிருவகின்றனர்? என்கின்ற கேள்விகள் எம்மத்தியில் எழுகின்றது. 

உதாரணத்துக்கு மட்டக்களப்பு படுவான் கரையில் உள்ள உன்னிச்சை குளத்தில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டு வவுணதீவு சுத்திகரிப்பு நிலையதில் சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டக்களப்பு எழுவான் கரைக்கு கொண்டு வரப்படுகிறது. காத்தான்குடி முதல் ஏறாவுர் வரை இந்த குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக இந்த விநியோகம் மட்டக்களப்பு படுவான் கரை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்காது இத்திட்டம் சில அரசியல் வாதிகளின் சாமர்த்தியம் காரணமாக காத்தான்குடி, ஏறாவுர், போன்றற இன்னும் ஒரு சில இடங்களுக்கு மாத்திரம் அனுப்பப்பட்டுள்ளது. 

ஆனால் உங்களிளுக்கு தெரியும் படுவான்கரை பகுதியில் மக்களின் அயராத வேண்டுகோளுக்கு அமைய நீர் வினியோக குழாய்கள் பொருத்தப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது எனினும் நீர் வினியோகம் இடம்பெற்றபாடில்லை.

அவர்களது விவசாயம் முதல்கொண்டு அன்றாட தேவைக்கு வரட்சிகாலங்களில் நீர்தட்டுப்பாடு நிலவிவருகின்றமை யாரும் அறியாத விடயமல்ல. அவ்வாறு இருக்க, இந்த இடங்களில் சென்று தண்ணீர் தொழிற்சாலை அமைத்தால் நிமிடத்திற்கு 55 லீற்றர் நிலத்தடி சூநீர் உறிஞ்சப்படும், நாளொன்றுக்கு 80 ஆயிரம் லீற்றர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும், இதனால் அப் பிரதேசத்தை அண்டியுள்ள குளங்களும் ஏரிகளும் வற்றும் அத்துடன் விவசாய நிலங்கள் பாலைவனமாகும்.

விவசாயம் செய்ய நீர் இல்லாமல் போகும் அதுபோல் கால்நடைகள் நீரில்லாமல் இறக்கலாம். இப்படி பல பிரச்சினைகள் வந்தாலும் இதனால் பாதிக்கப்படப்போவது எமது அடுத்த சந்ததிக் குழந்தைகளேயாகும். 

அதுபோல் மட்டக்களப்பு நகரமயமாகும்போது தண்ணீரின் தேவையும் அதிகமாகிறது. விவசாயத்துக்கு உபயோகிக்கப்படும் நீரின் அளவு குறைந்தாலும், நகரங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு நீங்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அண்டை மாவட்டங்கள் முன்னேறும்போது அவர்களது தேவைகளும் அதிகரிக்கும். எனவே, நாம் தண்ணீருக்கு மற்றைய வழிகளைத் தேட வேண்டிய அவசியம் இருக்க இந்த குடிநீர் பேட்டை அவசியமா?

என்ன செய்ய வேண்டும்?

இந்த அரிய வளத்தை சுரண்டி மக்களை மடுவில் தள்ளும் முறைக்கு எதிராகச் செய்யவேண்டியது போராட்டம் மடடுமே!. ஆம் தண்ணீர் தனியார் மயமாக்கப்படும் போக்கினை எதிர்த்து உலகம் பூராவும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மாற்று செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பொலிவியா நாட்டின் கோச்சபம்பா நகர மக்கள் அமெரிக்காவின் பெக்டெல் நிறுவனத்தின் தண்ணீர் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்;. மக்கள் பிரதிநிதிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் அடங்கிய கூட்டு நிர்வாகம் தண்ணீர் விநியோகத்தை மேற்கொண்டது.

கானா நாட்டின் சவேலேகு பகுதியில் தேசிய தண்ணீர் பயன்பாட்டு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு, அது தண்ணீரின் விலை, விநியோகம், தண்ணீர் குழாய்களை பராமரித்தல் போன்ற அனைத்து வேலை களையும் மேற்கொண்டதால் பாதுகாப்பான குடிநீர் 74 வீதம் குடும்பங்களுக்கு (2002ல்) உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு பல தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டங்கள் மூலம் தங்களது வளம் பாதுகாக்கப்பட்டு அதை அவர்களே அனுபவித்த வரலாறுகள் எமக்கு படிப்பினையாக இருக்கின்றது.

நாம் விழித்துக்கொள்ள வேண்டும் இந்த சுரண்டல்களுக்கு எதிராக அதற்கு சோரம் போய் எம்மை விற்றுப்பிழைப்பவர்களுக்கு எதிராக திரண்டெழுந்து எமது ஐனநாயக எதிர்பிபினை வெளிப்படுத்த வேண்டும்.

தொடங்கப்பட்ட நீர் விநியோகத் திட்டத்தின் பின்னடைவினை மாவட்ட அபிவிருத்திக்கூட்டத்தில் பேசி வழி காணவேண்டும் இல்லா விடின் பாராளுமன்ன அபிவிருத்திக் கூட்டங்களின்போது சம்மந்தப்பட்ட அமைச்சிடம் இதற்கான காரணங்களை அறிக்கையாக கேட்டு அவற்றினை துரிதப்படுத்தவேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் ஒருபோதும் எமது வழங்களை சுரண்டாதவாறான மாவட்ட ரீதிழயான ஒருங்கிணைந்த திடமான எழுத்துமூல அறிக்கையினை உhயி அதிகாரிகளுடன் உருவாக்கி அவற்றை ஆவணப்படுத்தி அந்த மக்களின் வளத்தினை அவர்கள் பயன்படுத்தும் உரிமையினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

மக்கள் மத்தியில் இவ்வாறான சட்டரீதியற்ற வேலைத்திட்டத்துக்கு எதிரான செயற்பாட்டை அறியப்படுத்த வேண்டும்.

தண்ணீர் சம்பந்தமான அரசின் கொள்கை வெறும்குடிநீர் அளிப்ப தோடு மட்டும் தொடர்புடையது அல்ல. உணவு பாதுகாப்பு, மக்களின் உடல் நலன், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு என்பதோடும் தொடர் புடையதாகும். ஆகவே, அதை விற்பனைப் பொருளாக எப்பொழுதும் மாற்றக்கூடாது. ஆகவே, அதை மாவ்தே பார்லோ சில கருத்துக்களை தன்னுடைய நீலத்தங்கம் புத்தகத்தில் முன்வைக்கிறார்.

தண்ணீர் இந்த பூவுலகு மற்றும் அதன் ஜீவராசிகளின் உடைமை.
அது எங்கே எப்படி இயற்கையோடு இணைந்து இருக்கிறதோ அதை புரிந்து கொண்டு பாதுகாக்க வேண்டும்.
அதனை எக்காலத்திலும் சேமித்து பாதுகாக்கவும் வேண்டும்.
அதனை எக்காலத்திலும் பயன்படுத்தப்பட வேண்டும்.
மாசுபட்ட நீர் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும்.
இயற்கையான ஆற்றுப் பள்ளத்தாக்கு பிரிவுகளில் தண்ணீர் பாதுகாப்பு சிறப்பானதாக இருக்க வேண்டும்.
நீர் மக்களின் நம்பிக்கைக்குரிய பொது சொத்து அரசு இதை பாதுகாக்க வேண்டும்.
போதுமான சுத்தமான தண்ணீர் அடிப்படை மனித உரிமை.
உள்ளூர் சமூகங்களும், மனிதர்களும் தான் தண்ணீரை நிர்வகிக்கும் திறன் கொண்டவர்கள்.
தண்ணீரை பாதுகாக்க மக்கள் அரசாங்கங்களோடு சம அளவில் நின்று பணியாற்ற வேண்டும்.
பொருளாதார உலகமயம் தண்ணீரை பாதுகாக்கும் தன்மை கொண்டதல்ல.

ஒன்றாய் இணைவோம் உரிமையை வெல்வோம்


0 comments:

Post a Comment