
நமது அன்றாட வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒரு பொருளாக இந்த எரிபொருட்கள் இரண்டறக்கலந்துள்ளன அதனால் இவை இல்லாத வாழ்க்கையினை நாம் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. இது எமது நாளாந்த வாழ்வில் உபயோகிக்கும் அனைத்து விடயங்களையும் வெகுவாகப் பாதிக்கும் என்பது வெளிப்படை. நாளாந்தம் கடினமாக வேலை செய்து அன்றாட உணவுக்காக உழகை;கும் மக்களின் நிலையினை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள், நிச்சயம் ஏற்கனவே நலிவுற்ற மக்களை இன்னும் ஒரு படி மேலாக சென்று வலுவிழக்கச் செய்யும் என்பதில் இல்லை ஐயம்.
மக்கள் எதிர்கொள்ளும் பாதக விளைவுகள்
இந்த அதிகரிப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பாதகமான மாற்றங்களை போக்குவரத்து, ஆட்டேமொபைல், ஆடைத்தொழிற் துறை, மின்சாரம், மனுபக்சரிங் என்ற பெரிய துறைகளில் ஏற்படுத்தும் ஒரு நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த விலை அதிகரிப்பு நாளாந்தம் கிடைக்கும் வருவாயில் அரைவாசிக்கும் அதிகமாக தமது உணவுத் தேவைக்காக செலவிடும் வறியவர்களின் நாளாந்த வாழ்க்கையினையே அதிகம் பாதிக்கும் ஒரு துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
இருமாதத்துக்கு ஒரு தடைவ மாறும் சூத்திரம் என்ன அமைச்சருக்கு மாத்திரமா முடியும், நாங்களும் ஒரு சூத்திரத்தினை உருவாக்கியே ஆகவேண்டும் என வரிந்துகட்டிக்கொண்டு வருகிறார்கள் பஸ் வண்டிச் சொந்தக்காரர்கள். இது நேரடியாக போக்குவரத்து துறையுடன் சேர்ந்த சேவைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நிலை காணப்படுகின்றது. இதனால் கொண்டு செல்லப்படும் பொருட்கள் அனைத்தினது விலையும் அதிகரிக்கும் நிலையில், மக்களின் பொக்கட்டில் உள்ள பணம் மெது மெதுவாகக் கரைய ஆரம்பிக்கும். இந்த நிலை மக்களை சுமுகமாக வாழ முடியாத சமுகமாக மாற்றிவிடும் ஒரு நிலை காணப்படுவதாக அனைவரும் முணுமுணுத்துக் கொள்ளுகின்றனர்.
இந்த நச்சு வட்டத்தில் அதிகம் ஏற்கனவே நடுத்தர மற்றும் அதற்கு கீழுள்ள நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையினையே இன்னும் பரிதாப நிலைக்கு இட்டுச் செல்லும். ஆத்துடன் முச்சக்கர வண்டிச் சாரதிகள் நிச்சயமாக தமது மீற்றரை மூடிவிட்டு இந்தச் சுமையை மக்கள்மீது போட்டுவிடுவார்கள்! அதுபோல் வியாபார சமுகத்தினரும் தங்கள் பக்கத்துக்கு சுமையை வாடிக்கையாளர்கள் மீது திருப்ப அந்த நச்சுவட்டத்தில் மேலுள்ளவர்கள் தப்பித்துக்கொள்ள பொதுசனங்கள் மாட்டிக்கொள்ளுகின்றனர்.
விலைக்கெதிரான மாற்றுயோசனைகள்
ஆக நாம் பொதுவாக அவதானித்த வகையில், எம்மிடம் பெற்றோல் வளம் இல்லாத காரணத்தினாலும், சர்வதேச விலை அதிகரிப்பு, தேவையுடன் ஒப்பிடும் அளவுக்கு குறைவாகவே இறக்குமதி, அதிக வாகன இறக்குமதி அதுபோல் நாளுக்கு நாள் குறைந்துவரும் எமது நாணய மதிப்பு போன்ற இன்னோரன் காரணங்களினால் நாம் அரசாங்கத்தினை கடிந்துகொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை.
அதற்கு பதிலாக மக்களாகிய நாம்தான் முடிவெடுக்கவேண்டும்.
நாம் சொந்த வாகனங்களை பாவிப்பதனை குறைத்து, பொது போக்குவரத்தினை நாளாந்தம் வேலைக்கு செல்ல, சந்தைக்கு செல்ல மற்றும் ஏனைய தேவைகளுக்காக பாவிக்கலாம். அதபோல் அதிக கொள்ளளவு கொண்ட வாகனங்களான புகையிரதம், கப்பல்கள் போன்றவற்றினை சேவைக்கு அதிகம் பாவிக்கலாம், அதற்கு அரசாங்கமும் உதவவேண்டும்.
அருகில் செல்வதற்காக சாதாரன பைசிக்கிள்களைப் பாவிக்கலாம், றபிக்கில் அதிக நேரம் நிற்கவேண்டிவந்தால் அந்த நேரத்தில் எஞ்சினை நிறுத்திவைக்கலாம் போன்றவற்றினை நாம் செயற்படுத்தி மாற்றத்தினை ஏற்படுத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணலாம்.
அதுபோல் அரசாங்கம் இந்த சக்திக்கு மாற்றீடான சோளார் சக்தியைப் பயன்படுத்தலாம், அதுபோல் உயிர்வாயு பாவனை என்பனவற்றினை அறிமுகப்படுத்தலாம் அத்துடன் அவற்றை ஊக்குவிக்க எல்லா வகையிலும் அரசாங்கம் வசதிகளை அளித்தால் அதுபோல் பாரிய பொருட்களை கொண்டு செல்வதற்கான மார்க்கங்களை அபிவிருத்தி செய்தால் மாற்றம் நிச்சயம் கிடைக்கும்.
சக்தி வளம் அருமையானது அவை குறைந்துகொண்டு போகின்ற ஒன்று அதனால் நாம் அவற்றை உணர்ந்தவர்களாக அவற்றை பாவிக்க வேண்டும அதுவே நாம் எமது எதிர்கால சந்ததிக்கு இட்டுச் செல்லுகின்ற எச்சமாக இருக்கும். அதுவே நிலைபேறான அபிவிருத்திக்கான ஒரு வழியாகவும் இருக்கும். யாரோ ஒருவர் சொன்னதுபோல் இந்த இயற்கை வளங்களை நாம் எமது தாய் தந்தையரிடம் இருந்து பெற்றுக்கொள்ளவில்லை எமது குழந்தைகளிடம் இருந்தே கடனாகப் பெறுகின்றோம்.
விலை அதிகரிப்பு பட்டியல்
0 comments:
Post a Comment