உன்னைப்போல் பிறரை நேசி என்பதற்கிணங்க, பிறரால் நேசிக்கப்படாமல் விடப்பட்டவர்களை நோக்கி ஒரு அன்புப் பயணத்தினை எனது மனைவியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மேற்கொண்ட போது!. முதியோர் வாரம் நெருங்கும் இந்த நேரத்தில் இந்த நிகழ்வினை அவர்களுடன் இணைந்து மகிழ்ந்துகொண்ட தருணம் மறக்கமுடியாதது.
இலங்கையில் 60 வயதுக்கு மேற்ப்பட்ட வயோதிபர்களின் எண்ணிக்கை 12.5 இலிந்து 16.7 ஆக 2020 ஆம் ஆண்டில் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.சுமார் 250 மேற்ப்பட்ட முதியோர் இல்லங்கள் நிறுவப்பட்டுள்ளபோதும், அவற்றில் இன்னும் கொண்டு சேர்பபதற்கான கேள்வி நாளாந்தம் அதிகரிக்கும் ஒரு வித்தியாசமான மனப்பாங்கான சமுகத்தில் நாமிருப்பதை இட்டு கவலையடைகின்றேன்.
முதியவர்கள் சிறுபிள்ளைத் தன்மையுடையவர்களாகவும், பிடிவாத குணமுள்ளவர்களாகவும் மாறுகின்றனர். சிலர் தங்களது தனிமையை நினைத்து மனந்தளர்வு அடைகின்றனர். ஒரு சிலர் முதிர்வயதிலும் உழைத்து உழைப்பாளியாக இருக்கவே விரும்புகின்றனர். இது வரவேற்கத்தக்க விடயம்.
எமது நாட்டை பொறுத்த வரை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முதியோர் பராமரிப்பு, முதியோர் கொடுப்பனவு பங்களிப்புகள் இருந்தாலும் அவை அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு போதுமானவையாக இல்லை. வயது முதிர்ந்த பெற்றோர் தமது பிள்ளைகளின் நிழலில் வாழவே விரும்புகின்றனர்.
நாமும் முதியோரின் சுதந்திரம், பாதுகாப்பு, சுகாதாரம், தேவைகள் குறித்து அவதானம் செலுத்தல் வேண்டும். அத்துடன், அவர்களை மதித்து, கெளரவித்து அவர்களின் உரிமைகளை விருப்பங்களை அறிந்து அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுத்தப்பட வேண்டும். அவர்களின் நற்கருத்துகளுக்கு மதிப்பளித்து அவர்களின் உள்ளத்தை மகிழ்வித்தல் வரவேற்கத்தக்க செயற்பாடாகும்.
இவர்கள் ஒட்டுமொத்த அனுபவத்திரட்டு, எமது வாழ்க்கைக்கான விடிவெள்ளிகள், எமது முன்னேற்றத்தின் ஏணிப்படிகள்! இவர்களது ஆசீர்வாதம் மாத்திரமே எம்மை நல்வழிப்படுத்தும் மறந்துவிடாதீர்கள்!

0 comments:
Post a Comment