ADS 468x60

22 September 2018

இலங்கை தற்கொலை செய்து இறப்பவர்களின் நாடுகளின் பட்டியலில் முன்னணியில்


உலகின் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளில் முக்கால்வாசி தற்கொலைகள் அல்லது அதற்கான முயற்சிகள் நடுத்தர அல்லது ஆகக்குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிடையே இடம் பெற்று வருகின்றது. அவை கிட்டத்தட்ட ஆண்டொன்றுக்கு 800,000 என உலக சுகாதார நிறுவகம் தெரிவித்துள்ளது. இது மொத்தமாக வேறு காரணங்களால் இறக்கின்றவர்களில் இருந்து 1.4 விகிதமாகும். இலங்கையின் சமுக வலைத்தளங்கள், இணையத்தளங்கள் மூலமான செய்திகளினடிப்படையில் இந்த தற்கொலை அல்லது அதற்கான முயற்சி அதிகரித்துக்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது.


இறுதியாக உ.சு. ஸ்த்தாபனத்தினால் வெளியான அறிக்கையின் பிரகாரம், இலங்கை உலகில் தற்கொலை அதிகம் செய்கின்ற நாடுகள் வரிசையில் 22 ஆவது இடத்தில் முன்னிலையில் உள்ளதென்றும், அது 100,000 பேரில் 17.1 வீதத்தினர் ஆண்டுக்கு இறக்கின்றனர் எனவும் தெரிவிக்கின்றது.
இன்னும் நாங்கள் பாதுகாப்பாக இல்லை என்பதனையே இது சுட்டிக்காட்டுகின்றது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், அதன் தாக்கம் இன்னும் சூடு குறையவில்லை. அது பல பல வடிவிலான அனர்த்தங்களை இன்னும் அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களிடையே அதிகம் அதிகம் ஏற்படுத்திக்கொண்டிருப்பதனை தகவல் காட்டுகின்றன.
இதனோடு இணைந்து இந்த மக்கள் அதிகம் நலிவுற்று அதனால் வறுமைக்குட்பட்டு, வேலையற்று, கல்வியில் சாதிக்க முடியாமல் இடைவிலகி, நுண்கடன்களை அதிகம் பெற்று, பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாகி பல நிலையில் பாதிக்கப்பட்டு, மழை நின்றாலும் தூவாணம் நிக்காத நிலையாக இவர்கள் விரக்தியின் விழிம்பில் வாழ்ந்து வருவது மிக முக்கியமான காரணமாக அமைகின்றன.
இந்த நிலையில் இவர்கள் தங்களிடம் இருந்து இழக்க அவர்களது வாழ்க்கையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்ற நிலையில் அதை இழக்கின்ற துர்பாக்கிய சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவதனைக் காணலாம்.
கடந்தவருடம் மாத்திரம் காவல்த்துறைத் தகவல்ப்படி மொத்தமாக 3263 பேர் இறந்துள்ளதாகவும், இதில் 2586 பேர் ஆண்களாக இருப்பது நம்பமுடியாத ஒன்றாக இருக்கின்றது. இந்த தொகையில் 320 பேர் 70 வயதுக்கு அதிகமானவர்கள் எனக் கூறப்படுகின்றது. அடுத்த 300 பேர் 26 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனச் சொல்லப்படுகின்றது.

தற்கொலைகளுக்கு என்ன காரணம்?
தற்கொலை (ளுரiஉனைந) என்பது விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பென்சோடையசிபைன்கள் பயன்பாடு போன்ற பல காரணங்களில் ஒன்றோ அல்லது பல காரணங்களோ ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம் பொருளாதாரச் சிக்கல்கள், அடாவடியாக கொடுமைக்கு ஆளாதல், உறவுகளின் பிரச்சினைகள் போன்ற மன அழுத்தக் காரணங்களும் ஒருவரை தற்கொலைக்குத் துண்டலாம். தற்கொலை முயற்சியில் ஒருமுறை ஈடுபட்ட ஒருவர் எதிர்காலத்தில் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி மேற்கோள்ளூம் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. துப்பாக்கி வகைகள், மருந்துகள் மற்றும் நஞ்சுப் பொருட்கள் முதலானவற்றை எளிதில் கிடைக்கச் செய்யாமல் தடுப்பதும் தற்கொலையை தடுக்கும் ஒரு முறையாகும். 
மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளித்தல் பொருகளை தவறாகப் பயன்படுத்துதலை தவிர்த்தல் முறையான செய்தி ஊடக அறிக்கையால் விழிப்புணர்வூட்டுதல் மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துதல் போன்றவையும் தற்கொலைகளை குறைக்கும் வழிமுறைகளாகும் ஜ2ஸ. நெருக்கடியான சூழல்கள் தற்கொலைக்குப் பொதுவானவை என்றாலும், அவற்றின் செயல்திறன் குறைவாகவே உள்ளது. என வி;க்கிப்பீடியாவில் தெழிவாக சொல்லப்பட்டுள்ளன.
மேலும் அவமானம், துரோகம், பணம், இழப்பு, தாங்வொண்ணா உடல்வலி, தோல்வி என்று எத்தனையோ காரணங்கள்! உண்மையில், தோல்வி என்று எதையும் நினைக்கத் தேவையில்லை. தோமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பில் ஒளிரும் இழைக்காக இரண்டாயிரம் வௌ;வேறு மூலப்பொருள்களைப் பயன்படுத்திப் பார்த்தார். எதுவும் வேலை செய்யவில்லை.
'எல்லாம் வீண்' என்று சலித்துக் கொண்டார் அவருடைய உதவியாளர்.
'இல்லை. மின்சார பல்புக்கு உதவாது என்று இரண்டாயிரம் மூலப்பொருட்களைப் பற்றி நாம் கற்றிருக்கிறோம்' என்றார் எடிசன்.
வாழ்வை எதிர்கொள்ள நம் ஒவ்வொருவருக்கும், இப்படிப்பட்ட தெளிவுதான் தேவை!
யாராவது உலகில் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புவதில்லை. அப்படி இருக்க ஏன் இவர்கள் இறப்பதற்கு முயற்சி எடுக்கின்றனர்? மேற்கூறிய காரணங்களினால் இவர்களுக்கு ஏற்படுகின்ற மன உழசை;சல்தான் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கின்றது. இவை தவிர உறங்கும் பழக்கத்தில் ஏற்படும் மாற்றம், நாளாந்த செயற்பாடுகளில் குறையும் விருப்பம், மனநிலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம், தங்களை தாங்களே கொல்லுவது பற்றி அடிக்கடி பேசிக்கொள்ளுவது மற்றும் தமது உடமைகளை பிறருக்கு விட்டுக்கொடுத்தல் ஆகியன போன்ற இன்னோரன்ன காரணிகளை வைத்து ஒருவர் தற்கொலை முயற்சிக்கு தயாராகுவதனை அறிந்துகொள்ளலாம்.
அதில் இருந்து மீழுவதற்கான உபாய மார்க்கங்கள்
இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சிப்பவர்களை உறவினர்களும், ஏனையவர்களும் புறக்கணித்து, ஒதுக்கிவைத்து நடாத்துவதனைக் காணலாம். இது அவர்களை மீண்டும் தற்கொலை செய்துகொள்ள பலமாகத் தூண்டுகின்றது.
ஆனால், தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உயிரை நீங்கள் மாய்த்துக் கொள்வது, ஒரு சிசுவின் உயிரை நீங்கள் பறிப்பதற்கு ஒப்பாகும். ஆம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ, எதிர்க்கவோ முடியாத ஒன்றைத் தாக்குவது எப்படித் துணிச்சலாகும்?
அவரவர் உயிரை மாய்த்துக் கொள்வதோடு அல்லாமல், அப்படி மாய்த்துக் கொள்ளும் நேரத்தில், தம்மோடு சேர்த்து, இன்னும் பல உயிர்களையும் அவர்கள் காவு வாங்குகிறார்கள். வெறுப்பு, காழ்ப்பு இவற்றைக் கொண்டு தங்கள் அமைப்பை இயக்குபவர்கள், இறைவன் பெயரைச் சொல்லி மற்றவரை அழிப்பதற்கு, தங்கள் உயிரைவிடவும் தயாராக இருக்கிறார்கள்.
உங்களுடைய உயிராக இருந்தாலும் சரி, அடுத்தவர் உயிராக இருந்தாலும் சரி, அந்த உயிரை நீங்கள் உருவாக்கவில்லை. அது உங்களுக்குச் சொந்தம் இல்லை. உங்களுக்குச் சொந்தமில்லாத ஒன்றை அழிப்பதற்கு உங்களுக்கு ஏது உரிமை?
இலங்கையில் உள்ள அதிகமான பொது வைத்தியசாலைகளில் உள நல பிரிவினையும் அதற்கான உத்தியோகத்தர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் அவர்கள் அதற்கு பொருத்தமான தகுதிகளைக் அந்த உத்தியோகத்தர்கள்; கொண்டுள்ளனரா என்பதே பிரச்சினையாகும். இலங்கையின் உளநல சங்கத்தின் தலைவர் வைத்தியர் சாமல குமாரின் தகவல்படி பதிவு செய்யப்பட்ட உள நலத்துறை வல்லுனர்கள் என வெறும் 30 தொடக்கம் 40 வரையானவர்களே இருக்கின்றனர் என சுட்டிக்காட்டுகின்றார். எது எவ்வாறு இருப்பினும் இவ்வாறான உள நல வசதிகள் கொழும்பை அண்டியே அதிகம் உள்ளதெனவும் அவற்றைத்தாண்டி உண்மையில் அதிகம் தற்கொலைகள் காணப்படும் இடங்களில் அவை குறைவாகவே உள்ளதெனவும் கூறப்படுகின்றது.
தனிமையில் பல காரணங்களினால் ஏற்படும் ஏமாற்றங்கள், பிரச்சினைகள், தொல்லைகள் காரணமாக தங்களை மாய்த்துக்கொள்ள முனைபவர்களை ஏனையவர்கள் புரிந்துகொண்டு அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும், அல்லது அதற்கான உத்தியோகத்தர்கள், சேவை வழங்குணர்கள் ஆகியவர்களை அணுகி அவர்களை மீட்டெடுக்கலாம். குறிப்பாக 40 வருடகாலமாக இயங்கி வருகின்ற 'சுமித்திரையே' என்கின்ற ஸ்த்தாபனத்தினர் ஆற்றுப்படுத்துகின்ற உதவியினை தொலை பேசி மூலமாகவோ, நேரிலோ அல்லது இணையத்தளம் மூலமாகவோ வழங்கி வருகின்றனர். ஆகவே அவர்களை அணுக வைக்க யாராவது அவர்களை நெறிப்படுத்த வேண்டும். இந்த தற்கொலை சிந்தனையுடன் உழவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வாழுகின்றவர்களுக்கு ஆறுதலான நெறிப்படுத்துதல் வேண்டும் என உதுமான் அவர்கள் கூறுகின்றமை உண்மையாகும்.
இந்த உலகில், தங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற்று நிம்மதியாக வாழ, சாதாரண மண்புழுவில் இருந்து மாபெரும் யானை வரை கடைசிவரை போராடத் தயாராக இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட மிக மிகப் புத்திசாலித்தனமான மனிதன் மட்டும், தனக்குத் தேவையானது கிடைக்காவிட்டால் உடனே நம்பிக்கை இழக்கிறான். தன்னை மாய்த்தும் கொள்கிறான்.
'உங்கள் உடலையும், மனதையும் மேலும் திறம்படப் பயன்படுத்துவது எப்படி' என்பதை அறிவதற்கான புதிய வாய்ப்பாகவே, உங்கள் தோல்வியை எதிர்கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் தற்கொலை ஆதரிக்கப்படுவதில்லை. இயற்கையின் அமைப்பில், தற்கொலை என்பது மாபெரும் தவறு. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும், அதை அடுத்த கட்டத்திற்கான முதல் படியாக நினைத்து, தாண்டிச் செல்ல வேண்டுமே தவிர, உயிரைப் போக்கிக் கொள்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

உங்கள் உயிரை நீங்கள் மாய்த்துக் கொள்வது, ஒரு சிசுவின் உயிரை நீங்கள் பறிப்பதற்கு ஒப்பாகும்.

0 comments:

Post a Comment