ADS 468x60

11 September 2018

மாற நினைத்தால் மாறலாம்!


Image result for jealous at home india
பாருடா இவன, இப்ப நல்ல வேலை ஒன்று கிடைச்சிருக்காமே!, ம்ம்ம்ம் இவர் கிடந்த கிடை எங்களுக்கு தெரியாதா! அந்தக் காலத்தில கழிசன் போடயும் காசில்லாம கெடுடந்ததுகளுக்கெல்லாம் டை கோட்ஸ் வேற, அப்பாக்கா கறல்புடிச்ச சயிக்கிளில திரிஞ்சதுகளுக்கு காறு ஒரு கொற, கிடுகு மட்டைக்க கிடந்தவங்களுக்கு ஓட்டு வீடு ஒரு கேடு, கொலர்சிப் பாசிபண்ண வைச்சி என்னத்த புடுங்கப்போறாவோ ஏதோ அவ ஏதோ படிச்சிக் கிழிச்ச மாதிரி.

இப்படியே இன்னொருவரின் சின்ன வளர்சியையும் ஏற்றுக்கொள்ளமுடியாத மனப்பாங்கு பொறாமை என்று சொல்லுகின்றோம்.  இவ்வாறு ஒரு மனநிலையில் இருந்தால் நிச்சயமாக அவன் அல்லது அவள் நம்ம நாட்டுக்காரங்களாத்தான் இருப்பாங்க. மாறாக பாரு அவன் இப்படி படிச்சி நல்ல வேலையில இருக்கிறான். நல்ல வீடு கட்டி இருக்கிறான் என மற்றவர் எப்படியெல்லாம் முன்னேற்றமடைகின்றார்களோ அப்படியெல்லாம் நாமும் வரனும் என்று ஒரு மனோ நிலை இருந்தால், நிச்சயமாக அவர்கள் ஏதோ ஒரு அபிவிருத்தியடைந்த நாட்டில் இருந்து வந்தவர்கள்; என்று அர்த்தம்..

றோட், பாலம், வைத்தியசாலை இவற்றை அபிவிருத்திசெய்ய முன் மனப்பாங்கினை மாற்றமடைய வைத்தால் அனைத்தும் வளர்ச்சியடையும். உதாரணத்துக்கு இந்த சமுக வலைத்தளங்களைப் பார்தீர்களானால், அவை நல்லவற்றை செய்வதற்கே உருவாக்கப்பட்டன ஆனால் அவை இன்று இன்னொரு மனிதனை கிண்டல் பண்ணுவதற்கும், நக்கல் பண்ணுவதற்கும், ஒருவரின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தவும் பேரினை மறைத்து பேக் ஐடி தொடங்கியும், தங்கது சமுக வலைத்தளங்களிலும், பயனற்ற பதிவுகளையிட்டு தாம் திருப்தியடைவதை நாளாந்தம் பார்க்கின்றோம் அதற்கு லைக் கொமணட் என்று வேற. இவற்றைப்பயன்படுத்தி பல நல்ல விடயங்களை செய்யலாம் ஆனால் அவை அவ்வாறு நடைபெறுவதில்லை காரணம் இவர்களிடம் உள்ள மனப்பாங்கு.

இவை சிறிதாகத் தெரியலாம் ஆனால் இந்தச் சிறிய சிறிய மாற்றம்தான் எமக்கு அவசியமான தேவையாக இருக்கிறது. மாற நினைத்தால் மாறலாம்

0 comments:

Post a Comment