ADS 468x60

24 September 2018

மக்களின் பலமே நல்லாட்சிக்கான இதயத்துடிப்பாக இருக்கின்றது

Related imageஜனநாயகத்துக்கான பலம் எப்பொழுதும் மக்களினாலே உருவாக்கப்படுகின்றது. இதுதான் யார் தமக்கான தலைவன் தீர்மானிப்பதுடன், நாம் என்ன வகையான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் அதுபோல் எந்தெந்த கொள்கைகளை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பனவற்றினை நிர்ணயனம் செய்கின்றன. இவையெல்லாம் இருந்தும் ஒரு ஜனநாயக நாட்டில் அந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு பலமான பக்கச்சார்பற்ற நிறுவனம், யாவரையும் உள்வாங்கும் ஒரு நடைமுறை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லையெனில அவை நல்லாட்சியல்ல அது மக்களின் ஒருங்கிணைந்த பலமும் அல்ல. மாறாக  மக்களின் பலமே நல்லாட்சிக்கான இதயத்துடிப்பாக இருக்கின்றது.


இந்த மக்கள் சக்தியே ஆரம்பகாலத்தில் இருந்து அவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மன்னர்களின் முடியாட்சியில் கூட இந்த மக்கள் சத்தி ஆட்சியினை கொண்டு செல்ல, புரட்சிகளை ஏற்ப்படுத்தி இந்த எலைட்களின் ஒரு நல்லாட்சிக்கு சந்தர்பங்களை கொடுக்கும் அளவுக்கு அது பிரபல்யம் வாய்ந்த ஒன்றாக பேசப்பட்டது. இருப்பினும் இந்த சக்தி மதிப்பிழப்பதும் பேசப்படுவதுமாக இருந்தது. இந்த முடியாட்சியாளர்கள் நூற்றாண்டு காலமாக மக்கள் சக்திக்கு எதிராக பல வடிவங்களில் நீதியற்ற முறையில் அவர்களது சட்டங்களை அமுல்படுத்தி ஊழல் மற்றும் பாரபட்சமான செயற்பாடுகளை அரங்கேற்றினர்.

அரசியல் தலைவர்கள் மக்களின் தோழ்பலத்தினால் அதிகாரத்தினை கைப்பற்றி ஆட்சியமைத்த அதே நேரம், அவர்கள் வேண்டாதபோது அந்த மக்கள் சக்தியினாலேயே தூக்கி வீசவும்பட்டனர். இவற்றை அறிந்தும் கூட தலைவர்கள் தமது திட்டங்களுக்கு இணங்க மக்களை புறக்கணித்து பொருளாதார நெருக்கடி, அதிர்ப்தி போன்றவற்றுடன் ஆட்சியை கொண்டு சென்றனர். இவ்வாறான ஒரு சூழலில் மக்கள் அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டிருந்தனர்.

அதனால் மக்கள் சக்தியுடனான கண்டன ஆர்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் அரசுக்கு எதிராக ஆரம்பித்திருந்தனர். இந்த அடிப்படை இயக்கங்கள் உள்நாட்டு ஒத்துழையாமை மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போன்ற செயற்பாடுகளை செய்திருந்தனர். இந்த ஒத்த செயற்பாட்டினையே அரபு வசந்தத்துக்காகவும் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமையில் மக்களின் சக்தி மாற்றத்துக்கான ஒரு முக்கிய கருவியாக இருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை தேர்தல் நெருங்குகின்ற போது பல கட்சியினருக்கு மக்கள் சக்தி இயக்கம் பல ஒரு முக்கியத்துவமான கருவியாக இருந்துள்ளது. இந்த சக்தி இல்லாமல் இயங்க முடியாத நிலைதான் பல அரசியல்வாதிகளுக்கு கிடைத்திருக்கின்ற விடையாகும். அதே சமயம் அரசியல்வாதிகளால் இந்த மக்கள் இயக்கத்தினை பிரித்து அவர்களை பலமிழக்கவும் செய்ய முடியும் என்பதே உண்மை.

மக்கள் ஜனநாயகம் சார்ந்து ஆற்றவேண்டிய வகிபாகம் நிறையவே உள்ளது. அந்த பலத்தினை அவர்கள் சரியாகப் பயன்படுத்தாததன் விளைவுகள் அவர்களுக்கு பாரதூரமாக அமையும் என்பதனில் ஐயமில்லை. மக்களுக்கு உள்ள ஜனநாயகக் கடமை முடிவற்ற போராட்டம். அது அவர்கள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, மாற்றங்களை எடுத்துரைக்க, பின்தங்கிய மக்களின் உரிமைகளை பாதுகாக்க என்பவற்றுக்காக பயன்படுத்தப்படும் சக்தியே உண்மையான சக்தியாகும். ஆக மக்கள் எப்பொழுதும் ஒரு பலமான அமைப்பு அவற்றை நல்லவற்றுக்கு பயன்படுத்த முனையவேண்டும்.

0 comments:

Post a Comment