
நீரும் நிலமும் காடும் மலையும்
கிழக்கின் ஆதாரமே
மட்டு மண்ணில் மீனும் பாடும்
இல்லை சேதாரமே
இயற்கை தானே எங்களின் வாழ்க்கை
வைக்க வேண்டாம் உங்களின் கையை
கொடுப்பதில் சிறந்தநாம்
கேட்டால் தருவோம் பிடுங்காதே!
வெற்றி நமதே சொந்த தேசம் நமதே
எதையும் வெல்லும் தயிரியம் கொண்டு
எழுந்து வாருங்களேன்
சிதையும் வளத்தை காத்திட நின்று
சீறிப் பாயுங்களேன்
வாடும் மக்கள் எங்களை நம்பி
வருந்தும் வேதனை தீர்ப்போம் தம்பி
காலங்கள் மாறலாம்
கனவு மட்டும் மாறாது!
வெற்றி நமதே சொந்த தேசம் நமதே!
0 comments:
Post a Comment