ADS 468x60

02 September 2018

மேசன் வேலைக்கு படித்துவிட்டு வைத்திய தொழில் புரியலாமா!

Image result for agriculture officersஇன்று ஒரு நண்பருடன் மிக நீண்ட சேரம் உரையாடக் கிடைத்தது. அருமை எமது பிரதேசம் எப்படிடா முன்னேறும் என்று கேட்டார். ஏன் அதற்கு என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் பாருங்க, "வைத்தியருக்கு படித்தவரை மேசன் வேலை பார்க்க வைக்கிறார்கள்!" புரியலவே என்றேன்.
எமது மாவட்டத்தில் வேலைத்தளங்களில் பல்கலைக்கழகங்களில் உதாரணத்திற்கு நாடகம் பாடத்தில் பட்டத்தை முடித்தவர்கள் மொழி பெயர்பாளர்களாகவும், நுகர்வோர் உற்பத்தி அதிகாரிகளாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் இருக்க, விவசாயப்பட்டதாரிகள் ஆரம்ம பாடசாலை ஆசிரியராகவும், வங்கி கணக்காளராகவும், நிருவாக உத்தியோகத்தராகவும் அமர்த்தப்பட்டுள்ள கொடுமை எங்குமே பார்க்க முடியாதுங்க.

எப்படிங்க பைனாட்ஸ் காரங்க நாடக அரங்கேற்றம் கூத்து போன்ற கலை வளா்ப்பதை பற்றி சிந்திப்பதை விடுத்து வேறொன்றை பற்றி சிந்திப்பது சாத்தியமாகும்? இப்படி எல்லாரும் எல்லா வகையான வேலைகளையும் செய்யலாம் எனில் பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைவருக்கும் ஒரு பட்டத்தினை வழங்கி வையுங்கள்!. ஆங்கில அறிவு சற்றும் இல்லாத பட்டதாரிகளை மொழிபெயர்ப்பாளராக நியமித்துள்ளதனை நினைத்து நினைத்து அழத்தோணுது.
அதே போன்று இவா்களை உருவாக்கும் ஆசான்களை கேட்கவிரும்புகிறேன் குறிப்பாக உலகப் பொதுமொழியான ஆங்கில அறிவு இல்லாதவா்கள் இன்னொரு வளர்ந்த நாட்டின் அனுபவங்களை, புதிய புதிய விடயங்களை அந்த நூல்களை படிக்கும் திறன் அறிவில்லாது, உங்களது மாணவர்களுக்கு எப்படி அவற்றை பரிமாறிக் கொள்ள இயலும்!!? அந்த மாணவர்களை வெறும் குறுகிய வட்டத்துக்குள் வைத்து வளா்த்து அவர்களது வாழ்க்கையை வெளியில் வந்ததும் மந்தைகள் போல் யாருக்கும் வேண்டப்படாத பண்டங்களாக்காதீர்கள்!!
நீங்கள் தேடி அவர்களையும் தேட வையுங்கள். புதிய சந்தைக்கு தயார்படுத்துங்கள், சந்தையில் என்ன கேள்வி இருக்கிறதோ அதை நிரம்பல் செய்யுங்கள். நம்மட பாசையில சொன்னா வெண்டி பயிரிட்டால் எல்லோரும் வெண்டியைப் பயிரிட்டு மலினமாக்கி அந்த பொருளுக்கு மார்கட் இல்லாமல் செய்து விடுகின்றனர், ஆனால் வெங்காயம், மிளகாய் அதிகமாக தேவைப்பட்டாலும் அதை உற்பத்தி செய்து கொடுப்பதில்லை.
இதே மனோ நிலை தான் தங்களை மாற்றிக்கொள்ளாத ஆசிரிய சமுகத்திடம் நிரம்பி வழிகிறது. தயவு செய்து புதிய பாதை, புதிய விடயங்கள், பதிய தேடல்களை மாணவர்களிடம் தூண்டி அவர்களை எதிர்கால சந்தைக்கு உருவாக்குங்கள். மாறாக உங்களது எதிர்காலத்துக்கு அவர்களை பயன்படுத்தாதீர்கள்.
நாடகம் படித்தவனை நாடகம் போடுற வேலைக்கு விடுங்க அவன் கலையை வளா்க்கட்டும், விவசாயம் படித்தவனை விவசாயத்தை முன்னேற்ற தயார்படுத்துங்கள். பொருத்தமில்லாத வேலைக்கு அல்லாது லாயக்கில்லாத வேலைக்கு விடுவதனால் ஒட்டு மொத்த உற்பத்தியும் வினைத்திறன் இல்லாது போவதுடன், மக்களுக்கான வேவையை சரியான முறையில் இவர்களால் செய்ய முடியாது அவர்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் ஒரு கூட்டத்தை வைத்திருந்து சமுகத்துக்கு பயனற்றவா்களை சம்பளம் கொடுத்து வைத்துள்ளீா்கள். இந்த பொருத்தமற்ற செயற்பாட்டை கொள்கை ரீதியில் மாற்ற வேண்டும. பல்கலைக்கழகத்தில் செலவிடும் நான்கு வருடங்களில் அதற்கான சரியான பலனை அறுவடை செய்யும் வெளியீடுகளை இந்தப் போட்டிச் சந்தைக்கு தயார்படுத்துங்கள், இல்லாது விடின் "கச்சானை நாட்டி கள்ளியை அறுவடை செய்வது போலாகிவிடும்"

0 comments:

Post a Comment