ADS 468x60

10 September 2018

வறுமையில் அம்மணமாகும் மட்டக்களப்பு மக்கள்

வறுமையில் அம்மணமாகும் எமது சமுகத்தினைப் பார்த்தால், எமது மக்களுக்கான உத்தியோகத்தர்கள் வேலை செய்கிறார்களா? இல்லை அரசாங்கத்தின் சிஸ்ட்டத்தில் வேலை இல்லையா? ஒன்றுமே புரியவில்லை! எங்கோ தப்பு நடக்குது பாருங்க. நான் ஒரு தடைவ #வாகரையில் உள்ள #மதுரங்குளம்பக்கம் சென்றேன் அங்கு பல குடும்பங்களை சென்று நேரில் பார்க்கக்கிடைத்தது. இங்குள்ள குடும்பங்கள் வறுமையின் இலக்கணத்துக்கு சற்றும் பிசகாத உதாரணமாகத் திகழ்கின்றனர்.

குடிநீர் வசதி, ஒழுங்கான, பாதுகாப்பான வீடுகள், சுகாதாரம், கல்வி, நாளாந்த உணவு வேலைவாய்ப்பு ஐயோ எதை எடுத்தாலும் குறையாகவே இருக்கின்றது.

கிராமத்துக்கு கிராமம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவகர், கமநல உத்தியோகத்தர், சுகாதாரப் பரிசோதகர், சமுத்தி உத்தியோகத்தர், பொலிஸ் இன்னும் எத்தனையோ பேர் நியமிக்கப்பட்டும் இந்தச் சமுகத்தை ஏன் எடுத்தேத்த முடியவில்லை. வங்கிகளில் வறுமைக்குட்பட்டோரின் வாழ்வாதாரத்தினை உயர்த்த இலகு தவணைக்கடன்கள் மாட்டுக்கடன், வீட்டுக்கடன், விவசாயக்கடன் வாழ்வாதாரக்கடன் எக்கச்சக்கம் ஆனால் இவற்றையெல்லாம் இவர்கள் அனுபவிக்கிறார்களா? அது அவர்களுக்கு தெரிகின்றதா? ஆதை யாராவது இவர்கள் பெறுவதற்கு உதவி புரிக்pன்றனரா?

அடேய் இந்தச் சமுகத்தை கூலிக்குகூட அன்றாடம் வேலையில்லாமல், அண்டண்டைக்கு உணவு இல்லாமல் ஆக்குவதற்க்கா அரசாங்கம் உங்களை சேவையில் அமர்த்தியுள்ளது? தப்பு நடக்கிறது, தட்டிக்கேட்க்கும் அறிவுள்ளவர்கள் மத்தியில் மாத்திரம் இச்சேவைகள் எல்லாம் ஒழுங்காக நடைபெறுகின்றது, ஆனால் அந்த அறிவினைப் பெறாத சமுகமாக வைத்திருக்கவே எல்லோரும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனரா என கேட்க்கத்தோணுகின்றது.

இவற்றை தட்டிக்கேட்க்கத்தான் மக்கள் தமக்கு வேண்டாம் என்றாலும் வீடு தேடிவந்து கிடைக்கும் வாக்குரிமைகளை பயன்படுத்தி அவர்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர், செயற்படுகின்றனரா? பார்த்தா தெரியலயே! சரி புரியுது இவங்க விளையாட்டுப்போட்டிகளோ, தடபுடலான வரவேற்குகளையோ செய்ய திராணியற்றவர்கள் அதனாலா நீங்கள் இவர்களை கவனியாமல் வைத்திருக்கிறீர்கள்?

எங்கோ தப்பு நடக்கிறது. இவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள், தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாகவும் வழி நடத்துவதாகவும் கூறிக் கொண்டே தமிழ் மக்களுக்குத் மேற்படி பேரவலங்களைத் தேடித் தந்தவர்கள், ஐந்தைந்து ஆண்டுகள் வந்து அரைச்சதத்துக்கும் லாயக்கில்லாத மக்கள் நலம் சார்ந்த தூரநோக்கு, வினைத்திறன், இலட்சியம் இல்லாத பிரதிநிதிகள் எம்மினத்தின் மீழுருவாக்கத்தினை அமுல்ப்படுத்த இதைவிட நல்ல சந்தர்ப்பத்தினை பெறமுடியாது.

தமிழ்ச்சமூகம் சிந்தித்துச் செயற்பட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதேவேளை இன்று ஆரோக்கியமான ஜனநாயகத்தன்மையுள்ள கருத்தப்பரிமாற்றம் மிகமிகத் தேவையானது. சுதந்திரமாகச் சிந்திக்கிறவர்களை அவமதிக்கிற போக்குக்கள் இவ்வளவு காலமும் தமிழ் மக்களின் ஒற்றுமை, விடுதலைப் போராட்டம் என்ற பேர்களில் அடக்கி வைக்கப்பட்ட கேள்விகள் ஒவ்வொன்றாக முன் வருகின்றன.

பேசக்கூடாதவை என்று ஒதுக்கப்பட்டிருந்த சமூக முரண்பாடுகள் பற்றிய கேள்விகள் வேகமாக மேலெழுகின்றன. இனி என்ன செய்வது என்ற கேள்விக்குரிய விடைதேட இதுவரை என்ன செய்யப்பட்டது, அவற்றின் விளைவுகள் என்ன, போராட்ட வரலாறு கூறும் பாடங்கள் என்ன என்ற கேள்விகட்கு விடை தேட வேண்டும். எழுகிற கேள்விகளைத் தட்டிக் கழிக்காமல் பதில் கூற எந்தத் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இயலாமலுள்ளது. கடந்த காலத்தை விசாரிக்கவும் சரி பிழைகளை இனங் காணவும் இயலாத எந்தத் தலைமையாலும் எதிர் காலத்திற்கான பாதையைச் சரியாக இனங்காண முடியாது.

0 comments:

Post a Comment