ADS 468x60

25 June 2019

மட்டக்களப்பு கிராமத்து மக்களும் அபிவிருத்தியாளர்களும்

எத்தனை தான் வசதிகள் நகரங்களில் இருந்தாலும், இன்னொருவரை பார்ப்பதற்கும், உறவாடவும் வசதியில்லாத நரகவாழ்க்கைதான் நகர வாழ்க்கை. கனகாலம் கண்டு தம்பிய இஞ்சால வாருங்கோ, மத்தியானம் சாப்பிட்டுத்துப்போங்கோ, இளணீர் ஒன்று குடிப்பமா, எருமைப்பால் இருக்கிறது போடவா, சோளத்த முறிச்செடுங்க தம்பி அப்பப்பா எத்தனை உபசரிப்பு, விருந்தோம்பல் வினாக்கள் எம் கிராமத்து மக்களின் வெள்ளை மனங்களின் வரவேற்பில்.

மரத்துக்கு கீழ பாயை தட்டி பணிய இருக்கச் சொல்லி, செம்பில தண்ணியக்கொண்டு செய்யும் சேமம் இருக்கே! அட 5 ஸ்டார்கொட்டலிலும் கிடையாது போங்க.

24 June 2019

எமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதனை மறந்துவிடுகின்றோம்.

சரியானவற்றையே செய்யுங்கள், உங்களால் அதிகபட்சம் செய்யக்கூடிய நல்லவற்றை வழங்குங்கள், எப்பொழுதும் பிறர் மீது அக்கறையுடன் இருங்கள். என ஒரு பெரியவர் கூறினார். நமக்கு சரியானவற்றினை செய்யக்கூடியவர்கள் தேவை. சரியான செயற்பாடுகள் மாத்திரமே நல்ல மாற்றங்களை எம்மத்தியில் ஏற்படுத்தும். கடந்த 7,000 ஆண்டுகளில் சிறிய கிராமங்கள் பேரூர்களாகவும், பேரூர்கள் நகரங்களாகவும், நகரங்கள் பெரு நகரங்களாகவும் மாறின. அவ்வாறு நிகழ்கையில், சோலைகள் அழிந்து நகரங்களாகி, நகரங்கள் நரகங்களாகிவிட்டன. எல்லாம் தத்தமது வசதி கருதியே நடக்கின்றன.

22 June 2019

இந்த முகங்களில் நீங்கள் எதை படித்துக் கொள்ளுகிறீா்கள்!

இவைகள் இலகுவில் ஏமாறக்கூடிய முகங்கள்! ஏங்கித் தவிக்கும் முகங்கள், பசியில் வாடிய முகங்கள், பாசத்துக்கு ஏங்கும் முகங்கள் இல்லலையா! ஆம், பாதுகாப்பால், பணத்தால், இடத்தால், வசதியால் கல்வியால் மிகவும் பின்தங்கிய குழந்தைகள், மிக்க நலிவுற்றவர்கள் எதிலும் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்கள்... இதனால்தான் இவா்களை இலவில் மதமாற்றிக் கொள்ளுகிறார்கள், திருமணம் செய்து இடையில் விட்டுச் செல்லுகிறார்கள், இவர்களது வியர்வை சிந்திய உற்பத்தியை கண்ணைப் பொத்தி களவாடுகிறார்கள், இவா்களது ஆட்டையும் மாட்டையும் அடாத விலைக்கு ஆட்டைபோடுகிறார்கள், அஞ்சிக்கும் பத்துக்கும் நிலத்தை சுவீகரிக்கிறார்கள் பாவம்.

21 June 2019

கல்முனைக் கலவரம்: செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்.

எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து. என ஆபிரஹாம் லிங்கன் அவர்கள் சொன்னார். உண்மை, நாம் நம்பி வாக்களித்த நம்பி இருந்த தலைவர்கள் எங்கே போய் ஒளிந்துகொண்டார்களோ தெரியவில்லை. 

ஆனால் நாம் இன்று நம்பாமல் இருந்த சிங்கள மதகுருமார்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோர், எமது குறைந்தபட்ச உரிமையையாவது பெற்றுத்தர முன்வந்து இருப்பது பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. அவர்களின் அர்பணிப்பு அளப்பரியதாக இருக்கின்றது. இதனை தமிழர்;களாகிய நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். இது எமது போராட்டத்துக்கு வலுவான பெறுமதி சேர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

15 June 2019

பல்கலைக்கழகம் ஒரு வரம்!

நண்பர்கள் ஒன்றாகக் கூடி
நடந்தவை ஒன்றல்ல கோடி
எல்லாமே எமக்கங்கு படி
இருந்தாலும் இனிக்கின்ற நொடி

சிரித்தோம் சிறந்தோம்
சிறகடித்துப் பறந்தோம்
இருந்தோம் கிடந்தோம்
நடந்தோம் திரிந்தோம்

12 June 2019

தேனகத் தீவின் பெண்ணே!

தேனகத் தீவின் பெண்ணே!
தேவதை நீயடியோ! நீ
மீன்மகள் பாடிட ஆடும்-
மேனகை ஊர்வசியோ!

திரும்பிடும் போதொரு போதை- வன
வாகரைத் தேனல்லோ- நீ
துரு துரு துரு எனப் பேசும்
பைங்கிளி நீயல்லோ!

சல சல சல என ஓசை
நெல்மணி உன் கொலிசு
கல கல கல என வீசும்- குளிர்
கார்த்திகை தென்றலடி

இயற்கையின் அழகினில்
இளமையின் அரங்கத்தில்
இயல் இசை நாடகம் நீ
நாடகத்தினிலே உன்னை விரும்பும்
நாயகன் நான் தானே

09 June 2019

புரட்சியை ஏற்படுத்துமா! புதிய தலைமைக்கான எதிர்பார்ப்பு. 02

தொடர்ச்சி.....

சுதந்திரத்துக்கு பின்னான சர்வாதிகார ஆட்சி

அநேகமாக சுதந்திரத்தின் பின் சுத்தமான ஐனநாயக ஆட்சி இடம்பெறாது சர்வாதிகாரம் கலந்த ஆட்சியே இடம்பெற்று வருவதாக விமர்சிக்கின்றனர். இதை ஒரு முழுமையான சர்வாதிகாரம் என்றுகூட அழைக்க முடியவில்லை. ஏனெனில் அது ஜனநாயகத்தின் பேரில் அதைப் பயன்படுத்தி செய்யப்படும் சர்வாதிகார ஆட்சியேயாகும்.

ஒரு சுதந்திர இலங்கையில் குடிமகனின் உரிமைப்படி பார்த்தால், அவருக்கு சுதந்திரமாகச் சிந்திப்பதற்கு, அதனை வெளிப்படுத்துவதற்கு, ஒன்று கூடுவதற்கு, சொத்துக்களைச் சேர்ப்பதற்கு மற்றும் தனக்கு பிடித்தமானவரை வாக்களித்து தெரிவு செய்வதற்கு அதுபோல் அனைவரையும் சமமாக நடாத்துவதற்கும் இலங்கைச் சட்டம் பரிந்துரைத்துள்ளது.

07 June 2019

புரட்சியை ஏற்படுத்துமா! புதிய தலைமைக்கான எதிர்பார்ப்பு. 01

மக்கள் எதிர்பார்கும் தலைமை

இன்று எம்மிடையே யாரிடமாவது தற்போது இலங்கையை ஆளுவதற்கான ஒரு பலமான தலைமை தேவையா? எனக் கேட்டால், ஆம் எனத்தான் பதில் வருகின்றது. 

இன்று நாங்கள் சுறுசுறுப்பாக ஓடியாடிக் கொண்டிருக்கும் தலைவர்களைப் பார்த்தால் உற்சாகம் பிறக்கிறது எமக்கு. பல பிரதேசங்களுக்கும் சுற்றி வருபவர்கள் என்றால், 'எல்லாமும் தெரிந்தவர்' என்பது போல் ஒரு மரியாதை பிறக்கிறது. அலுவலகமாக இருந்தாலும் , நாட்டை ஆளும் ஆட்சியாளர்களாக இருந்தாலும், அவர்கள் 'சிறந்த பேச்சாளார்களாக' இருந்து விட்டால் உச்சி மோர்ந்து கொண்டாடத் தொடங்கி விடுகிறோம்.

03 June 2019

கிழக்கின் தாகம்.


நாமும் ஒரு சிறுபான்மையினர், இதையெல்லாம்விடவும் எத்தனையோ கெடுபிடிகளை அனுபவித்து இழந்து இறந்து இன்னும் ஒரு கொடுமையின் நினைவில் வாழ்ந்து வருகின்றோம். இதனால் பல்லாயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நீதியின்றி சிறையிலும், காணாமற்போனோர் பெற்றோர் கண்ணீரிலும், நிலமும், நீரும் பார்த்திருக்க பறிபோய்க்கொண்டிருக்கும் ஆபத்தினைவிட வேறெதுவும் முன்னுரிமையான பிரச்சனையாக இருக்கின்றதா?

02 June 2019

பொறுப்பில்லாத தலைவர்களும் அடையாளம் இழக்கும் தமிழர்களும்.

சாதாரண அரச உத்தியோகத்தர் ஒருவர் அரசாங்கத்தில் வெறும் 30 ஆயிரம் தொடங்கி 50 ஆயிரம் வரை சம்பளம் எடுக்ப்பதற்கு வாராந்த, மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த என்ற வகையில் முன்னேற்ற அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். அரசில் மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு சேவை செய்பவர்கள் பொறுப்புள்ள முறையில் வகைகூற என AR மற்றும் FR என பல சட்டதிட்டங்கள் இருக்கின்றன. 

ஆனால்; அரசியல்வாதிகளில் அதிகமானோர் மக்கள் இவற்றை அறியாதவாறு மூளைச் சலவை செய்யப்பட்டுவருகின்றனர். நான் ஒரு சவாலை விடுகின்றேன் அது முடியுமானால் ஐந்து வருடத்தில் அல்லது கடந்த தசாப்தத்திலாவது தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்ட, குறிப்பாக கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் அவர்களுடய முன்னேற்ற அறிக்கையினை எமது மக்களுக்கு காட்ட முடியுமா? 

"Won the toss Loss the Test" இலங்கையணி எப்போ வெற்றிபெறும்?

ஒரு காலத்தில் இலங்கை வீரர்களின் கிரிக்கெட் என்றால் அலாதிப்பிரியம். அப்போது உள்ள அனைத்து வீரர்களின் பெயரும் எமக்கு தெரியும் அளவுக்கு அவர்கள் உலகில் சிறப்பான வீரர்களாக இருந்து எம்மை மகிழ்ச்சிப்படுத்தினர். உலகக் கோப்பையினை போராடி வென்று எமக்கு பெருமை சேர்த்துத்தந்தனர்.

அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அவர்களின் குழுவலிமை, ஒற்றுமை என்பனவற்றுடன் இன, மொழிகடந்து அனைத்து இனத்தினையும் பிரதிபலிக்கும் வீரர்கள் இருந்தனர். அத்துடன்  அனைவரையும் அரவணைத்து உற்சாகப்படுத்தும் தலைமைத்துவம், நிதானமான உணர்ச்சிவசப்படாத வீரர்கள் என அடுக்கிக்கொண்டு போகலாம்.