தேனகத் தீவின் பெண்ணே!
தேவதை நீயடியோ! நீ
மீன்மகள் பாடிட ஆடும்-
மேனகை ஊர்வசியோ!
திரும்பிடும் போதொரு போதை- வன
வாகரைத் தேனல்லோ- நீ
துரு துரு துரு எனப் பேசும்
பைங்கிளி நீயல்லோ!
சல சல சல என ஓசை
நெல்மணி உன் கொலிசு
கல கல கல என வீசும்- குளிர்
கார்த்திகை தென்றலடி
இயற்கையின் அழகினில்
இளமையின் அரங்கத்தில்
இயல் இசை நாடகம் நீ
நாடகத்தினிலே உன்னை விரும்பும்
நாயகன் நான் தானே
வளையுது நெழியுது வாவி- உன்
மெல்லிடை போலாடி
மழையது பொழியிது மார்பில்- நீ
மழைதரும் மலையோடி
காவியப் பாடலும்
களரியில் ஆடலும்
கலை தரும் ஓவியம் நீ
ஓவியத்தினிலே உயிராய் வளரும்
ஓருயிர் நான்தானே!
தேவதை நீயடியோ! நீ
மீன்மகள் பாடிட ஆடும்-
மேனகை ஊர்வசியோ!
திரும்பிடும் போதொரு போதை- வன
வாகரைத் தேனல்லோ- நீ
துரு துரு துரு எனப் பேசும்
பைங்கிளி நீயல்லோ!
சல சல சல என ஓசை
நெல்மணி உன் கொலிசு
கல கல கல என வீசும்- குளிர்
கார்த்திகை தென்றலடி
இயற்கையின் அழகினில்
இளமையின் அரங்கத்தில்
இயல் இசை நாடகம் நீ
நாடகத்தினிலே உன்னை விரும்பும்
நாயகன் நான் தானே
வளையுது நெழியுது வாவி- உன்
மெல்லிடை போலாடி
மழையது பொழியிது மார்பில்- நீ
மழைதரும் மலையோடி
காவியப் பாடலும்
களரியில் ஆடலும்
கலை தரும் ஓவியம் நீ
ஓவியத்தினிலே உயிராய் வளரும்
ஓருயிர் நான்தானே!
0 comments:
Post a Comment