ADS 468x60

15 June 2019

பல்கலைக்கழகம் ஒரு வரம்!

நண்பர்கள் ஒன்றாகக் கூடி
நடந்தவை ஒன்றல்ல கோடி
எல்லாமே எமக்கங்கு படி
இருந்தாலும் இனிக்கின்ற நொடி

சிரித்தோம் சிறந்தோம்
சிறகடித்துப் பறந்தோம்
இருந்தோம் கிடந்தோம்
நடந்தோம் திரிந்தோம்


பல்கலைக்கழகம் ஒரு வரம்
அதில் வளரும் அறிவே உரம்
சமுகத்தில் அவர்களே சிரம்-நல்ல
சேவையே அவர்களுக்கு தரம்

ஞாபகங்களை மட்டும் எடுத்து
நா பங்கங்களை உள்ளே விடுத்து
பசுமையான அந்தப் பொழுதுகளுடன்
நண்பர்களை பார்க்க கிடைத்தால்
அது இறைவன் தந்த வரம்!

இருந்தாலும் பாழாய்ப் போகும்- எம்
சமுகத்தைப் பார்த்தும் போகவா
இங்கு உருவாகினீர்கள்!

சமுகத்தின் சிரமென்றேன்!
வாலாய் இருக்கலாமா!
வாருங்கள் தோழர்களே!
உங்களைத் தவிர வேறு யாரை
மீட்பர்களாக அழைப்பேன்!

0 comments:

Post a Comment