இவைகள் இலகுவில் ஏமாறக்கூடிய முகங்கள்! ஏங்கித் தவிக்கும் முகங்கள், பசியில் வாடிய முகங்கள், பாசத்துக்கு ஏங்கும் முகங்கள் இல்லலையா! ஆம், பாதுகாப்பால், பணத்தால், இடத்தால், வசதியால் கல்வியால் மிகவும் பின்தங்கிய குழந்தைகள், மிக்க நலிவுற்றவர்கள் எதிலும் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்கள்... இதனால்தான் இவா்களை இலவில் மதமாற்றிக் கொள்ளுகிறார்கள், திருமணம் செய்து இடையில் விட்டுச் செல்லுகிறார்கள், இவர்களது வியர்வை சிந்திய உற்பத்தியை கண்ணைப் பொத்தி களவாடுகிறார்கள், இவா்களது ஆட்டையும் மாட்டையும் அடாத விலைக்கு ஆட்டைபோடுகிறார்கள், அஞ்சிக்கும் பத்துக்கும் நிலத்தை சுவீகரிக்கிறார்கள் பாவம்.
குறிப்பாக சொல்லப்போனால், இவா்கள் நான் இருக்கும் கிராமத்தில் (தேத்தாத்தீவு) இருந்து ஒரே மாவட்டத்துக்குள் கிட்டத்தட்ட 90 கி.மீ தொலைவில் வாழுகின்ற மக்கள். இது வந்தாரை வாழவைக்கும் இயற்கை வளமார்ந்த #வாகரையில் உள்ள #தோணிதாட்டமடு என்னும் எல்லைக்கிராமம். இவர்கள்தான் ஒருநாள் #திடகாத்திரமான#தலைவர்களாக வரத்தகுதியானவர்கள்.. அத்தனை துன்பங்களையும் எதிர்நோக்கி வாழப்பழகியவர்கள், இருந்தும் எமது அபிவிருத்திநோக்கிய முன்னகர்வு, இன்னும் சுயநலம் கலந்ததாகவே இருக்கின்றது. அதனால்தான் என்னவோ, அவனவன் படித்துவிட்டு அவனவனைப் பார்த்துக்கொண்டு வாழும் நகரவாசிகளை, முழு சுயநலக்காரா்களை இந்த கடின உழைப்பாளிகளின் வாிக்காசில் சிருஸ்டித்துக்கொண்டிருக்கிறோம் என ஐயப்படுகின்றேன்.
ஒன்றுபட்ட அபிவிருத்தியில் அதிகூடிய முக்கியத்துவத்தினை இப்போன்ற குழந்தைகளின் கல்விக்கு கொடுக்கவேண்டும். அதுதான் இவா்களை எடுத்தேத்தும் மிகப்பொிய கருவியாக இருக்கும். குறிப்பாக இவர்களை இந்த நலிவுற்ற வர்க்கத்திலிருந்து வேறுபடுத்தும் செயற்பாட்டை இளைஞர்களின் தொண்டான்மை கலந்த திட்டத்துடன் அமுலாக்கவேண்டும, ஏனெனில் அவர்கள்தான் எங்களை பாதுகாக்கும் வேலிகள். அந்த வேலிகளை பலப்படுத்தும் வழிகாட்டிகளை உருவாக்குங்கள் இல்லாவிட்டால் இருப்பவர்களை பலப்படுத்துங்கள்
நிலத்தை நீ இழந்து விட்டாய்-நீர்
புலத்தை நீ இழந்து விட்டாய்
உயிரை நீ இழந்து விட்டாய்- சொந்த
உறவை நீ இழந்து விட்டாய்
சொந்த கடலில் மீன்பிடியை இழந்தோம்-
நெடும் காடு வீடுகளை இழந்தோம்
பசு மாடுக் கூட்டங்களை இழந்து
பள்ளிக் கோயில் சுகங்களை இழந்து
வெல்லும் வீரம் இருந்தும் மானமும் இழந்தோம்
ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே!
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா!
0 comments:
Post a Comment