எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து. என ஆபிரஹாம் லிங்கன் அவர்கள் சொன்னார். உண்மை, நாம் நம்பி வாக்களித்த நம்பி இருந்த தலைவர்கள் எங்கே போய் ஒளிந்துகொண்டார்களோ தெரியவில்லை.
ஆனால் நாம் இன்று நம்பாமல் இருந்த சிங்கள மதகுருமார்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோர், எமது குறைந்தபட்ச உரிமையையாவது பெற்றுத்தர முன்வந்து இருப்பது பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. அவர்களின் அர்பணிப்பு அளப்பரியதாக இருக்கின்றது. இதனை தமிழர்;களாகிய நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். இது எமது போராட்டத்துக்கு வலுவான பெறுமதி சேர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
நாட்டின் நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்கசபைக்கும் போட்டியேற்பட்ட போது சட்டத்தின் மூலம் சவால் விடுக்கும் அளவுக்கு இந்த அரசை பழுதுபடாமல் கொண்டு செல்லும் எமது தமிழ் ஜாம்வான்களால் கிழக்கில் தமிழ்மக்கள் காலாகாலமாக எதிர்நோக்கிவருக்pன்ற மிக மிகச் சிறிய ஒரு சவாலை, வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையா அல்லது அதற்கான மனமில்லையா என்பது எமக்கு புரியாத புதிராக உள்ளது.
இன்று கௌரவ மட்டக்களப்பு பா.ம உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் தமிழ் தே.கூட்டமைப்பில் இருந்து சுயமாக வேறுபட்டு இயங்காது விட்டிருந்தால் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள யாருமே இருந்திருக்க முடியாது என மக்கள் நம்பத் துவங்கியுள்ளனர். அதேவேளை உயிருக்கு போராடி வரும் உத்தமர்களை பார்க்காவிடினும் ஒரு வார்த்தை அவர்களுக்கு ஆதரவாகப் பேசியிருக்கலாம் எமது தமிழ் மக்களின் வாக்கில் அதே உரிமையை மூலாதாரமாக வைத்து முன்னுக்கு வந்தவர்கள். அதுவும் இல்லை.
ஆனால் 'இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள இங்கு மூன்றாம் நபர் வேண்டாம்' எனவும், 'அரசிக்கு ஆதரவு தருவதனை யோசிக்க வேண்டும்' எனவும் முழக்கமிடும் சிலர் கூறுகின்றனர். அதேபோல் 'எமக்கு தேவையான காலம் இன்னும் இருக்க, ஏன் அவசரம் எனவேறு கேள்வி எழுப்புவதும் கேலிக்குரியதாகவே இருக்கின்றது. இவர்களுக்கு ஷேக்ஸ்பியர் சொல்லி வைத்திருப்பதனை நினைவுபடுத்த விரும்புகின்றேன் அது 'நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்' என்பதே. ஆந்த ஆபத்தான நிலையினைத்தான் இன்று தமிழ் மக்கள் கிழக்கில் எதிர்நோக்கிவருகின்றனர்.-
எமக்காக ஆகாரம் இன்றி போராடும் அறவான்களை இறக்கும் மட்டும் நீங்கள் புதினம் பார்க்கவா சொல்லுகின்றீர்கள். உங்களுக்கு முப்பது வருடம் போதாதா பேச்சுவார்த்தை நடாத்த? இன்று மக்களின் பிரச்சினைகளை மக்களே தீர்க்கும் ஒரு நிலை இந்நாட்டில் உருவாகி இருப்பதற்கு காரணம் எமது அரசியல்வாதிகளே! இவர்களுக்கு உன்மையில் நல்ல மனசு கிடையாது. இவர்களைப் போன்றவர்களுக்கு சுவாமி விவேகானந்தர் கூறுகின்றார் 'உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்.' என.
நான் பல சமுகத்துடனும் இறங்கி வேலை செய்கின்றவன் அதனால் எல்லா சமுகத்திலும் நல்ல நண்பர்களும் தெரிந்தவர்களும் இருக்கின்றார்கள். ஆக சாதாரண மக்களை விட அவர்களை தூண்டிவிட்டு பிரிக்க நினைக்கம் அரசியல் வாதிகளையே நான் இங்கு குறை கூறவேண்டியுள்ளது. சாதாரண மக்கள் அனைத்து மக்களுடனும் ஒன்றாக ஏனையோரது கலாசாரம், மத அனுஷ்டானங்களுக்கு மதிப்பளித்து வாழவே விரும்புகின்றனர் மாற்றுக்கருத்தில்லை.
இன்று இலங்கையில் அதிலும் குறிப்பாக வடகிழக்கில் பல இடங்களில் நிலத்தொடர்புடனான அல்லது அவைகள் அற்ற எ;ல்லை நிர்ணயத்துடன் பல பிரதேச செயலகங்கள் இருக்கின்றன. இங்கு உள்ள இனரீதியான பெரும்பாண்மைக்கும் தனித்துவத்துக்கும் முக்கியம் வழங்கப்பட்டு அவர்கள் தனித்தனி பிரதேச செயலகங்களை உருவாக்கி இருக்கின்றனர்.
இவ்வாறிருக்க கல்முனை எனும் மாநகர சபையின் எல்லைக்குள் அதுவும் ஒரே இனமாக வாழும் மக்களிடையே, பிரிக்க முடியாத நிலத்தொடர்புடன் மாறுபடாமல் இருக்கும் சாய்ந்தமருது முஸ்லிம் மக்கள் தமக்கு பிறிதான மாநகர சபை ஒன்றை கல்முனை மாநகர சபையில் இருந்து வேறாகக் கோரும் பொழுது கல்முனை வடக்கில் அதிகமான தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற ஒரு சமுகம் தமது நிலம் நிர்வாகத்தினை பரிபாலிக்க என ஏற்கனவே இஸ்தாபிக்கப்பட்ட அவர்களுக்கான பிரதேச சபையொன்றை கோருவதில் என்ன தவறு இருக்கின்றது?
கிழக்கின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் முழங்குவுது புதினமாகவே இருக்கின்றது. இது மாத்திரமல்ல இன்னும் பல பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே இருக்கின்றது அவற்றையெல்லாம் வாய்மூடி கைகட்டி மௌனியாக இருந்து அவற்றை தர மறுக்கும் அரசாங்கத்துக்கு எல்லாவகையிலும் பாதுகாப்புக்கொடுத்து எம்மை ஏமாற்றுகின்றீர்கள். அது எமக்கு புரியாத அளவுக்கு கல்வியறிவு இல்லாதவர்கள் இங்கு கிடையாது.
அது போக கிழக்கில் உங்களை நம்பி வாக்களித்து அமோக வெற்றிபெற வைத்தனர். அதனால் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டார்கள்;. ஆனால் இறுதியில் ஏதேதோ கதை பேசி எம்மை ஏமாற்றிவிட்டீர்கள். நாம் இந்த நிலையில் ஒருசில ஒரு சில வரப்பிரசாதத்தினையாவது எமது கிழக்குவாழ் தமிழ் மக்கள் அனுபவிக்க விடாமல் தாரைவார்த்து தத்துவம் பேசினீர்கள்.
இங்கு பல இன்னல்களால் தொழில் இழந்து துவண்டுபோயுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை கொடுக்க என தொழிற்சாலைகளை உருவாக்கச் சொல்லவில்லை இருக்கின்ற தொழிற்சாலைகளையாவது திருத்தி அதில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுக்க முடியாத தலைமைத்துவம் இல்லாது விடய அறிவும், தொடர்பாடல் அறிவும் இல்லாது ஒரு வேலையை செய்து முடிக்க முடியாத எமது பிரதிநிதிகளை நினைத்து வெட்கமடைகின்றோம்.
எமது அரசியல் கைதிகள் ஆயள் கைதிகளாக இன்னும் சிறையில் வாடுகின்றனர். பேசிகின்றோம் பேசிகின்றோம் என்கின்றீர்கள் முடிவு ஒன்றும் இல்லை. ஆகவே இவை போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. இப்போது அரசாங்கத்துக்கான ஆதரவு வாவஸ்பெறப்படும் என ஐந்தாண்டு முடிவில் அனைத்தையும் பெற்றுக்கொண்டு அடுத்த எலக்சன் வருவது ஞபகம் வருகிறதோ?
ஆகவே திரும்பவும் முன்னுக்கு வருகின்றேன். ஒருவரையும் நம்பாமல் இருப்பதும் ஆபத்து என்பது இன்று நடந்தேறுகின்ற சம்பவங்கள் காட்டி நிற்கின்றன.
0 comments:
Post a Comment