ADS 468x60

07 June 2019

புரட்சியை ஏற்படுத்துமா! புதிய தலைமைக்கான எதிர்பார்ப்பு. 01

மக்கள் எதிர்பார்கும் தலைமை

இன்று எம்மிடையே யாரிடமாவது தற்போது இலங்கையை ஆளுவதற்கான ஒரு பலமான தலைமை தேவையா? எனக் கேட்டால், ஆம் எனத்தான் பதில் வருகின்றது. 

இன்று நாங்கள் சுறுசுறுப்பாக ஓடியாடிக் கொண்டிருக்கும் தலைவர்களைப் பார்த்தால் உற்சாகம் பிறக்கிறது எமக்கு. பல பிரதேசங்களுக்கும் சுற்றி வருபவர்கள் என்றால், 'எல்லாமும் தெரிந்தவர்' என்பது போல் ஒரு மரியாதை பிறக்கிறது. அலுவலகமாக இருந்தாலும் , நாட்டை ஆளும் ஆட்சியாளர்களாக இருந்தாலும், அவர்கள் 'சிறந்த பேச்சாளார்களாக' இருந்து விட்டால் உச்சி மோர்ந்து கொண்டாடத் தொடங்கி விடுகிறோம்.

இருப்பினும், இவையெல்லாம் ஒரு நாட்டையோ அல்லது அலுவலகத்தினையோ நிர்வகிக்கும் தலைவருக்கு தேவையானது அல்ல. ஆக பிரச்சனைகளை எப்படி அணுகுவது? அதற்குரிய தீர்வுகளை எப்படி கண்டறிவது? என்ற சிந்தனையாளார்கள் தான் நிறுவனங்களுக்கும், நாட்டிற்கும் இப்போதைய தேவையாக இருக்கின்றது.

தவிர மிகபலமாக, ஆளுவதற்கான மனவுறுதி, தொலைநோக்குப் பார்வை, திட்டமிடும் திறன், ஆழுமைப் பண்புகள், ராஜதந்திரம் ஆகிய திறனுடைய சட்டத்தினை நிலைநிறுத்தக்கூடிய, ஒழுக்கக் கட்டுப்பாட்டினை நிலைநாட்டக்கூடிய ஒருவர் தேவையாக உள்ளது என  மக்கள் கூறுகின்றனர். அதுபோலவே பெரும்பாலும் இப்பண்புகள் இல்லாத ஏனைய ஆட்சியாளர்களை மக்கள் வெறுத்து வருவதனைக் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனவே இவை சார்ந்து பல விடயங்களை இக்கட்டுரை ஆழமாக ஆராய்ந்துள்ளது. 

தலைமைத்துவ ஆளுமைகள் சில எடுத்துக்காட்டு

தலைவர் என்பது வெறுமனே தனது பதவியினை அலங்கரிப்பவர் அல்ல, மாறாக மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருந்து அவற்றை நிறைவேற்றி கடவுளுக்கு வகைகூறுகின்றவர் என சொல்லப்படும் ஒரு பெரி பொறுப்புள்ள பதவி இது.

அந்தவகையில், இலங்கையில் உள்ள பலருக்கு எடுத்துக்காட்டாக ஒரு பலம்மிக்க, ஒழுக்கத்தினையும் சட்டத்தினையும் அதிகாரத்தினூடாக அமுலாக்கி அபிவிருத்தியை அதிசயிக்கும்படி கொண்டுவந்த தலைவராக எமது அண்டைய சிங்கப்பூரின் முதல் பிரதமராக இருந்து முதல் மூன்று தசாப்தமும் ஆட்சிபுரிந்த லீ குவான் யூ அவர்களே உள்ளார்.

1960களில் சிங்கப்பூர், இயற்கை வளங்களே இல்லாத சிறிய நாடு. வறுமையும், வேலையிலாத் திண்டாட்டமும் தாண்டவமாடிய தாழ்ந்த தேசம். அடிப்படைச் சுகாதார வசதிகளே இல்லாத குடிசைகள், திருட்டுக்கள், குற்றங்கள் பெருகி, குப்பைகள் கொட்டிக் கிடக்கும் தெருக்கள், தொழில் திறமையும், அர்ப்பணிப்பும் இல்லாத ஊழியர்கள் என நாடே நலிவுற்றுக் நலங்கெட்டுக் காணப்பட்டது. ஆனால் இன்று, சிங்கப்பூர் உலகப் பொருளாதார வல்லரசுகள் பட்டியலில் முன்னணியில் நிற்கிறது ஏன்! 

'பளிச்' தெருக்கள், ஊழல் இல்லாத நிர்வாகம், ஒழுங்கு, கட்டுப்பாடு, தரமான கல்வி, நல்ல வாழ்க்கைத்தரம், வலுவான பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இலக்கணம் வகுக்கும் நாடும் மற்றும் மக்களும் உள்ளதேசம். யுhரால், எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்? இதற்கு ஒரே பதில், 1959 முதல் 1990 வரை சிங்கப்பூர் தேசத்தின் தந்தையாகவும் பிரதமராகவும் இருந்த, லீ குவான் யூ அவர்களின் ஆளுமை மிக்க தலைமைத்துவமே என வரும்.

ஏனெனில் இவர் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி படிப்படியாக ஒரு பிரமாண்டமான ராஜ்ஜியத்தினை கட்டி முடித்த ஒரு கதாநாயகன்;. அவருடைய ஆட்சிக்காலத்தில் எதுவித தனிப்பட்ட மற்றும் குடும்ப அபிலாசைகளை எல்லாம் கடந்து தனது பணியினை நாட்டின் முன்னேற்றத்தினை மாத்திரம் கருத்தில்கொண்டு செய்தவர்.

இதுபோல் பல உதாரணங்கள் இருக்கின்றன. இதில் இன்னுமொரு தலைவரைப் பார்க்கலாம். இராணுவ அடக்குமுறைகளை கையாண்டு தலமை தாங்குவதனை யாரும் விரும்புவதில்லை. ஆனால் நேர்மையான வாக்களிப்பின் மூலம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கவேண்டும் என்பதே ஜனநாயகப் பண்பு. இது ஜேர்மனில் அடொல்ப் கிட்லர் என்பவரினால் 1933இல் தேர்தல் மூலம் பரீட்சித்து அதிக வாக்கினைப் பெற்றவராக இவர் பார்க்கப்பட்டுள்ளார். அவ்வாறே உண்மையில் அவர் ஒரு பலம்வாய்ந்தவராகவும் இருந்து நாட்டில் பல விடயங்களை நடாத்திக் காட்டினார்.

சட்டத்துக்கு கட்டுப்படாத குடிமக்கள்

இப்போது நாடுபூராகவும் சட்டத்துக்கு கட்டுப்படாத ஒழுக்கமின்மையானது ஒரு புற்றுநோய்போல் அனைவரிலும் தொற்றி வருவதனைக் காணுகின்றோம். ஒரு சமுகத்தின் ஒழுக்கக்கேடானது அவர்களது சமுகக் கட்டுப்பாட்டினைத் தாண்டிய அல்லது அதற்கு கட்டுப்படாத மனப்பாங்கு மாற்றத்தினை எடுத்துக்காட்டுகின்றது.

எமது சமுகம் ஒரு பன்முகத்தன்மை வாய்ந்தது, அதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயலாற்றவேண்டும், அத்துடன் ஒரு சமுகத்துடன் இன்னொரு சமுகம் சேர்ந்தியங்கும் நிலை உருவாக்கப்படவேண்டும். ஆனால் இலங்கையில் அதிகமாக 'கோபம்கொண்ட மனப்பாங்குடைய' குடிமக்கள் அதிகம் விரவிக் காணப்படுகின்றமை இவ்வாறான ஒழுக்க மீறலுக்கான காரணங்களுள் ஒன்றாகும்.

இன்று பாருங்கள் மக்கள் தாங்களே முன்னின்று வாக்களித்த பல பிரதிநிதிகள், ஒரு நாட்டின் உயரிய சபையில் நின்று ஆளுக்காள் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகிப்பதனை அவதானித்து வருகின்றோம் அவற்றை பா.ம சபாநாயகர் கண்சாட்டில் இருந்து அகற்றிவிடும்படி கேட்கும் அளவுக்கு மோசமானதாக இருக்கின்றது.

பல சந்தர்ப்பங்களில் அதற்கு ஒரு படிமேல் சென்று ஒருவருக்கொருவர் அடித்து உடல்ரீதியான வன்மங்களில் குதித்துள்ள கடுமையான சம்பவங்களும் இல்லாமல் இல்லை.

அதே போல் இன்று நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நாளாந்தம் நாம் கேள்வியுறும் விடயம், புதிய மாணவர்கள்மீதான கணிஸ்ட்டமாணவர்களது பகுடிவதை. இதனை அவர்கள் சரியானதெனவே நினைக்கின்றனர். அதற்கு எதிராக நிருவாகம் ஏதாவது நடவடிக்கை எடுக்க முயன்றால், அதற்கு எதிராக பாதைகளில் இறங்கி ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதனையும் நாம் காணாமல் இல்லை. 

அவர்கள் சாதாரண பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வண்ணம் பாதைகளை இடைமறித்து அவர்களது ஆர்பாட்டங்களை, அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க முன்வந்த நிருவாகத்தினருக்கெதிராக முன்னெடுத்து குழப்பத்தினை உண்டுபண்ணுவதனையும் காண்கின்றோம்.

சரி மாணவர்கள்தான் இவ்வாறு செய்கின்றனர் என நாம் பார்த்தால், உயர்வாக மதிக்கின்ற வைத்தியர்களும் அவர்களுடன் சம்மந்தம் இல்லாதவற்றுக்கு கூட பாதையில் ஆர்பாட்டம் என இறங்கி வருவதனையும் காணுகின்றோம். ஆக மாணவர்கள், சாதாரண பொதுமக்கள் ஆண் பொண் சிறுவர்கள் என முரண்பாடுகளைத் தீர்பதற்கு வன்முறையினை கையாழுவதனையே நாம் அவதானித்து வருகின்றோம்.

அதேபோல் பாதையில் வாகனம் செலுத்துபவர்கள்கூட சட்டத்துக்கு முரணனாக ஏனைய வாகனங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்திவிட்டு இதை செய்வதற்கு தமக்கு உரிமை உண்டு என்பதுபோல் தப்பிச்செல்லும் ஒழுக்கம் கெட்ட சாரதிகளை அன்றாடம் காணுகின்றோம்.

அவ்வாறானவர்கள் வாகனங்கள் ஓட்டுவதனை நிறுத்துவதற்கான பலத்த தண்டப்பணம் அறவிட்டு அவர்கள்; வாகனம் செலுத்துவதனை நிறுத்தப்படுதல் வேண்டும். இவ்வாறான ஓட்டுனர்கள் பாதையில் ஒழுக்கத்தினை மீறுகின்றனர் அவர்களுக்கு விரும்பியவகையில். இவர்களும் தாம் விரையாக அல்லது லாவகமாகச் செல்லவேண்டும் என்பதற்காக விதிமுறைகளை மீறுவதனை சரியென எண்ணுகின்றனர், இவர்களும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பவர்கள் மீது வன்முறை மூலமே தீர்வினைப் பெற முயலுகின்றனர்.

இவற்றையெல்லம் இல்லாதொழித்து நல்ல ஒழுக்க நெறியுள்ள சமுகத்தினை மீள் உருவாக்க வேண்டி சமுகத்தினால் அழுத்தமாக வேண்டப்படுகின்றது. அதற்கு உண்மையில் ஒரு பலம்மிக்க ஒரு தலைவரினை நாம் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தத்தில் நிற்கின்றோம்.

சர்வாதிகார முறைமையினை வேண்டி நிற்போர்.

1960 களில் இவ்வாறான நிலையினைக் கருத்தில்கொண்டு சர்வாதிகாரி ஒருவரை நியமி;த்தால்தான் இந்த நாட்டை சரியான பாதையில் கட்டுப்படுத்தி முன்னேற்றமடையச் செய்யமுடியும் என அந்தக் காலத்தில் மிகவும் செல்வாக்காக இருந்த ஒரு பௌத்தத் துறவி முன்மொழிந்திருந்தார். எமது பண்டைய மக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து பல வேலைத்திட்டங்களைச் செய்து இந்த நாட்டை நாலாபாகத்திலும் அதிசயிக்கச் செய்யும் வண்ணம் பல வேலைகளை அரசனின் ஆணைக்கு பணிந்து செய்திருந்தனர். அதனால் மதிப்பு மிக்க சமுகமாக அவர்கள் வாழ்ந்தும வந்தனர்.

ஆனால் இன்று அவ்வாறில்லை, மக்கள் சோம்பேறிகளாக மாறி விட்டனர். இதனால்தான் இவர்களை அதிகாரத்தினைப் பயன்படுத்தி அபிவிருத்தி செய்யவைக்க ஒரு பலம்கொண்ட சிறந்த தலைமை தேவையாக இருக்கின்றது.

இன்று ஜனநாயக முறையின் கீழ் இவற்றை சாதிக்க முடியாதுள்ளது ஏனெனில் மக்க இவ்வாறு காட்டம் இல்லாத தலையையினையே வாக்களித்து தேர்ந்தெடுக்கின்றனர்.


ஜனநாயகத் தோற்றமும் தேவையும்

ஜனநாயகம் பண்டைய கிரேக்கத்திலும் மற்றும் இந்தியாவிலும் சமகாலமான கி.மு 5ம் நூற்றாண்டிலேயே பிறப்பெடுத்திருந்தது. இங்கு மக்கள் தாங்களை ஆள தாங்களே ஈடுபட்டு வந்துள்ளனர். இந்தியாவின் லிச்சவியல் என்கின்ற நகரத்தில் இளைஞர்கள் இந்த மன்றில் ஒன்றாக அமர்ந்து தீர்மானத்தினை எடுத்துள்ளனர். ஆனாலும் அவர்கள் எலைட் எனப்படும் உயர்குடியில் உள்ளவர்கள் மாத்திரமே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனால் அது உண்மையான ஜனநாயகப் பண்பினை உள்வாங்கி இருக்கவில்லை என காட்டமாக விமர்சிக்கப்பட்டன.

ஆக இந்த 200 வருடங்களுக்குள்தான் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் ஜனநாயகத்தின் ஓரளவு தோற்றம் எமக்கு கிடைத்துள்ளது எனலாம்.

இந்தவகையான ஜனநாயகம் சோக்ரடிஸ் மற்றும் அரிஸ்டோட்டில் ஆகியோரினால் விமர்சனத்துக்குள்ளாகி இருந்தது. அதிக ஜனநாயகப் பலத்தினைக் கொண்டு ஆட்சி அமைப்பவர்கள் வழங்கிய அரசாங்கத்தில் ஆட்சி மற்றும் நீதி அவர்களது புத்திசாதுரியத்தினால் நடாத்தப்பட்டிருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் புத்திஜுவிகளாகவோ அதிக நேரம் உடையவர்களபகவோ இருந்ததில்லை. அதனால் அவர்கள் நினைப்பதினையே தீர்ப்பாக வழங்கினர். என சோக்கிரட்டில் இந்த நம்பகமற்ற ஜனநாயகத்தினை சாடுகின்றார்.

அத்துடன் தாங்களை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களுக்கு சார்பாகவே அதிக அக்கறையுடன் ஆட்சி நடாத்தும் ஒரு நிலையும் இங்கு செறிந்து காணப்படுகின்றது. என விமர்சிக்கின்றமை உண்மையன்றி வேறில்லை. இவை ஊழலுக்கு வழிவகுக்கும் எனவும் விமர்சிக்கப்படுகின்றது.

அரிஸ்டோட்டில் ஜனநாயகம் மூலம் வருகின்ற ஒரு ஆட்சியாளர் ஒரு கட்டத்தில் அந்த பலத்தினைப் பயன்படுத்தி கொடுங்கோல் ஆட்சிக்கு செல்லுவதனை நாம் அவதானிக்காலாம். அத்துடன் இவர்கள் ஜனநாயத்தின் மூலமே குழுக்களுக்கிடையே பல முரண்பாடுகளையும் ஏற்படுத்தி நாட்டை நலிவுறுத்தி விடுகின்றனர் என கூறுகின்றார்.

19ம் நூற்றாண்டில் ஐனநாயகப் பண்பு அரசி அமைப்பதனில் வேறுபட்டதொன்றாகவே பார்க்கப்பட்டு பாராட்டப்பட்டது. அமெரிக் ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கன் ஜனநாயப் பண்பு பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார். 'மக்களுக்காக மக்களால் உருவாக்கப்படும் அரசாங்கம்' ஒன்றே ஜனநாயகப் பண்பு கொண்டதாகும். இங்கு மக்கள் எல்லா வகையான செயற்பாடுகளிலும் உள்ளீர்க்கப்பட்டு அவர்களின் பங்களிப்பு நிச்சயிக்கப்படனும் என்றார்.

ஆனால் முன்பு கூறிய அதே விமர்சன்ம் இங்கும் வைக்கப்பட்டது. அதாவது, இங்கும் அங்கம் வகிப்பவர்கள் எலைட் அதாவது அரசிக்கு உகந்தவர்களே அங்கு மக்கள் சார்பில் இருப்பார்கள். இவர்கள் முதலாலித்துவக் கொள்ளையினைக் கொண்டு தாங்கள் இந்த பலத்தினை பாவித்து அவர்கள் தங்களை முன்னேற்றும் வேலையினையே செய்துகொண்டு வருகின்றனர் அத்துடன் இவர்களே சமுகத்தில் பலம்வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள் என விமர்சிக்கின்றமை முற்றிலும் உண்மையானது.

ஆக இந்த ஜனநாயக முறை என்பது பலம்வாய்ந்த சிறு குழுக்கள் மோதிக்கொள்ளும் ஒரு போர்க்களம் என சொல்லுகின்றனர். ஆகவே இவ்வாறான நிலையில் இருந்து மீள ஒரு தனித்துவமான பலம்வாய்ந்த சர்வ அதிகாரமும் கொண்ட ஒரு தலைவரே இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் என பலர் முன்மொழிகின்றனர்.

கடின உழைப்பாளிகளின் தேவை.

இன்னும் இந்த ஜனநாய முறை மிகவும் பலகீனமானது இதற்கு அப்பால் ஒரு சிறந்த தலைமையினாலேயே சோம்பல் இல்லாத கடினமாக உழைக்கும் நாட்டு மக்களைக் உருவாக்கி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். ஆனால் இவை சட்டத்தினை மதிக்கின்ற மக்களுக்கு இவை கடினமாகவும் அதனை மீறுபவருக்கு உகந்ததாகவும் அமைவதனையும் காணலாம். 

இன்று லெட்சக்கணக்கில் வேலையாட்கள் எல்லா மட்டங்களிலும் தேவைப்படுகின்றனர். குறிப்பாக கட்டிட நிர்மாணத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை, சுற்றுலாத்துறை, சுகாதாரத்துறை என முன்னணி வகிக்கும் தொழில் துறைகளில் பல வேலை வாய்ப்புக்கள் குவிந்து கிடந்தும், இன்னும் இலங்கையில் வேலையின்மை 4.2 விகிதமாகவும், முச்சக்கர வண்டிச் சாரதிகள் 1.2 மில்லியனாகவும் இருப்பது எமது மக்கள் உழைப்பால் உயர விருப்பம் இல்லாதவர்கள் என்பதனையல்லவா காட்டுகின்றது.

ஆகவே இந்த கடின நிலையினை உணர்ந்த தொழில் தருணர்கள் வெளிநாடுகளில் சலிப்பின்றி வேலை செய்யும் ஊழியத்தினை இறக்குமதி செய்துவருகின்ற துர்ப்பாக்கிய நிலையினை நாம் காணுகின்றோம்.

எது எப்படி இருந்தாலும் குற்றமிழைப்போருக்கு தண்டனை தரக்கூடிய, கட்டளைகளைப் பிறப்பித்து சட்டத்தினையும் ஒழுக்கத்தினையும் சமுகத்தில் நிலைநாட்டும் ஒரு தலைவன் தோன்றினால் அவனை மக்கள் மனதார வரவேற்க இன்று தயாராக உள்ளனர்.

பாகம் இரண்டில் சுவாரசியமான விடயங்கள் தொடரும்.........


சி.தணிகசீலன்
S.T.Seelan

References



0 comments:

Post a Comment