ADS 468x60

02 June 2019

"Won the toss Loss the Test" இலங்கையணி எப்போ வெற்றிபெறும்?

ஒரு காலத்தில் இலங்கை வீரர்களின் கிரிக்கெட் என்றால் அலாதிப்பிரியம். அப்போது உள்ள அனைத்து வீரர்களின் பெயரும் எமக்கு தெரியும் அளவுக்கு அவர்கள் உலகில் சிறப்பான வீரர்களாக இருந்து எம்மை மகிழ்ச்சிப்படுத்தினர். உலகக் கோப்பையினை போராடி வென்று எமக்கு பெருமை சேர்த்துத்தந்தனர்.

அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அவர்களின் குழுவலிமை, ஒற்றுமை என்பனவற்றுடன் இன, மொழிகடந்து அனைத்து இனத்தினையும் பிரதிபலிக்கும் வீரர்கள் இருந்தனர். அத்துடன்  அனைவரையும் அரவணைத்து உற்சாகப்படுத்தும் தலைமைத்துவம், நிதானமான உணர்ச்சிவசப்படாத வீரர்கள் என அடுக்கிக்கொண்டு போகலாம்.


ஆனால் இன்று இலங்கையணி என்றால் வொன் த டொஸ் லொஸ் த டெஸ்ட் "Won the toss Loss the Test" என்பது எமக்கு வாய்ப்பாடமாய் போய்விட்டது. யார் என ஒரு பெயரைக்கூட எனக்கு தெரியாது மலிங்கவை விட. அரசியலைப்போலவே இந்த அணிகளில் உள்ளவர்கள் என்ன சாதனை படைத்தார்கள் என்பது கேள்விக்குறி!. அர்ஜீனா ரணதுங்க என்றால் எமக்கு அப்படியொரு விருப்பம் அப்போ, இப்போ அமைச்சராக இருந்தும் அந்த நாளில் இருந்த அர்ஜீனாவை காணமுடியவில்லை. 

மதிப்புக்குரிய ஒரு அணித்தலைவர் என்றே அவரை சந்தித்த போது ஒரு புகைப்படத்தினை எடுத்துக்கொண்டேன்.

நம்ம இலங்கையணி எப்போ பெட்டி கட்டும்? எனவே எல்லோரும் கேட்கின்றனர். இங்கு மறுசீரமைப்பு வேண்டும்.  20% விகிதத்துக்கு அதிகம் வாழும் தமிழர்களிடையே ஒருவரையாவது இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை என்பது வருத்தமே. இது ஒன்றும் இராணுவ அணியில்லைத் தானே?. .

பெயர் சொல்லக்கூடிய தலைமை ஒன்றை தெரிவு செய்ய வேண்டும், அரசியல் விளையாட்டில் கலப்பதனை முற்றாக நீக்கி உண்மையில் திறமையானவர்கள் அணியில் சேர்க்கப்படவேண்டும், அவை, இனம், மதம் மொழி கடந்து அனைவரையும் பிரதிபலிப்பதாய் இருக்க வேண்டும்.

அவை கொழும்புக்குள்ளும், அரசியல் சொல்வாக்கிற்குள்ளும் சுருங்காமல் இலங்கை பூராகவும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.

அப்போது நிச்சயம் நாம் எமது காலத்தில் ஆசையுடன் பார்த்த விறுவிறுப்பான விளையாட்டைப் பார்க்கலாம், இல்லாது போனால் நாம் எல்லாம், ஆப்கானிஸ்த்தான் மற்றும் வங்க தேச இளம் வீரர்களுக்கு இரசிகர்கள் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

0 comments:

Post a Comment