ADS 468x60

03 September 2022

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உலகிற்கு 10 லட்சம் ரூபாய் கடனாளியாகிவிட்டனர்.

நமது தலைவர்களின் ஆட்சியால், இன்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உலகிற்கு 10 லட்சம் ரூபாய் கடனாளியாகிவிட்டனர். நாளை பிறக்கும் குழந்தையின் கடன் சுமை எவ்வளவு என்று சொல்ல முடியாது. நம்மைப் போன்ற எநத ஒரு நாடும் கடன் மற்றும் உதவி இல்லாமல் காலூன்றி நிற்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. ஆகவே இங்கு பிரச்சனை கடன் அல்ல. இது கடன் மூலம் கிடைக்கும்  நன்மையுடன் தொடர்புடையது. கடனுடன் மேற்கொள்ளப்படும் திட்டமானது வட்டி மற்றும் கடனை செலுத்தக்கூடியதாக இருக்கின்றமை பயனுள்ள நிதி மேலாண்மை என்று அழைக்கப்படுகிறது. இற்கு ஒரு நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் முறையான நிதி கட்டுப்பாடு மற்றும் நிதி ஒழுக்கம் இருக்க வேண்டும். இல்லை என்றால், 'மண் சரிந்து, மலையின் கீழே விழுவது' போல, நாடு அதள பாதாளத்தில் விழுந்து நாசமாகிவிடும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியில் பெறப்பட்ட ஒருதொகை கடனுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட பலகோடி நிதியில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்கள் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை என கணகாய்வறிக்கையில் தெரியவந்துள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படாமல் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் கடன் தவணையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிப்பதாக அவை கூறுகிறது. 

இந்த நாட்டின் பல பண்டைய கல்வெட்டுகள், நாட்டை ஆள்பவன் நாட்டின் பொறுப்பாளனே தவிர, சொந்தக்காரன் அல்ல என்று கூறுகின்றன. இப்படித்தான் ஒவ்வொரு காலட்டத்தின் ஆட்சியின் பொறுப்பு உருவானது. அந்த மேம்பட்ட ஆட்சியாளனின் வழிகாட்டுதலால் வானிலிருந்து விழும் ஒரு துளி நீர் கூட வீணாகக் கூடாது என்று அந்த மண்ணோடும் மக்களோடும் இணைந்த பற்றுறுதியான நிலமையை பண்டைய அரசர்கள் உருவாக்கினர். அந்த மேம்பட்ட நாகரீக சக்தியின் தூண்டுதலால் உலகில் மிளிரும் நாடுகளில் ஒன்றாக மாற்றப்பட்டோம்.

எனவே நடது நாடு கடந்த காலம் அப்படித்தான் இருந்தாலும், இந்த நாட்டின் பொதுப் பணம் அதன் நிர்வாகம் தொடர்பான தற்போதைய கதை மிகவும் பரபரப்பானது வேறுபட்டது. இந்த பொறுப்பற்ற நிலையின் விளைவு என்னவென்றால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இன்று உலகிற்கு 10 லட்சம் ரூபாய் கடனாளியாக மாறியமைதான். ஆகவே நாட்டின் பெருமைக்குரிய குடிமகன், அவனது கடனை அடைக்க முடியாத நாட்டில் ஒரு பிச்சைக்காரன் என்ற நிலைக்கு உலகின் முன் கேலி செய்யப்படுகிறான் இன்று.

பண்டைய சமூகம் பொதுச் சொத்தை அரசு சொத்தாகக் கருதியது. எனவே, அவர்கள் பொதுப் பணத்தைத் திருடி அந்த பொதுப் பணத்தை வீணடிக்க ஆசைப்படவில்லை. ஆனால் இன்றைய ஆழும் வர்க்கம் வேகமாக மாறிவிட்டது. முடிந்தவரை திருடவும் சுரண்டவும் மற்றும் அபகரிக்கவும் தூண்டும் தீய மனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் உருவான நாட்டின் அடமானக் கடனின் விதி ஒரு உதாரணம் மட்டுமே.

இன்று இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் எதிர்காலத்தை நினைத்து பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். நமக்கு கடன் கொடுக்க உலக நாடுகள் கூட உலகில் இல்லாத பொல்லாத நிபந்தனைகளை போடுகின்றன. ஆகவே இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பெருமையும் ஆபத்தில் உள்ளது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கதவுகள் நம் நாட்டுக் குழந்தைகளுக்கு டொலரைக் கொடுக்க முடியாமல் மூடப்படுகின்றன. நமது நாட்டின் குடிமக்கள் இதுபோன்ற வெட்கித் தலைகுனியும் அவமானங்களுக்கு ஆளாகக் கூடாது. ஆனால் அது நடக்கிறது. இந்நிலைமை தானாக உருவாக்கப்படவில்லை என்பது எப்பொழுதும் புலனாகும். எனவே இதுபோன்ற கணக்காய்வறிக்கைகளை மட்டும் வெளியிடாமல், தவறு செய்தவர்களை தண்டிக்கும் பொறிமுறையும் விரைவில் மாற்றப்பட வேண்டும்.


0 comments:

Post a Comment