ADS 468x60

01 September 2022

இடைக்கால வரவுசெலவுத்திட்டம் - மூன்று விடயம்தான் உள்ளது!

இடைக்கால வரவு செலவு திட்டம் தொடர்பான சில முக்கிய விடயங்களை கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன். மத்திய வங்கியின் ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்டபடி, கடன் கோரும் ஒரு நாடு அதற்குப் பொருத்தமான பட்ஜெட்டை சமர்ப்பிக்க வேண்டும். 

மூன்று அடிப்படை பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இடைக்கால வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்;. முதலாவது: அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தை ஒரு சிறந்த இடத்திற்குக் கொண்டு வருதல். அரசின் செலவினங்களைக் குறைத்து வருவாயைப் பெருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாவது: உலகப் பொருளாதார செயல்முறைக்கு இணங்கக்கூடிய தேசிய பொருளாதார திட்டத்தை தயாரிப்பதற்கான முயற்சி. இது நீண்ட காலப் பொருளாதாரச் செயல்பாட்டின் முதல் படியாக அறியப்படுகிறது. மூன்றாவது: பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தபோதிலும் ஏழை சமூகத்திற்கு நிவாரணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் ஒன்று ஏழை சமூகத்திற்கு நிவாரணத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது.

எனவே இந்த நிலையில் உலகிற்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும், அதற்கு அப்பால் அரசு செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்ற வாதம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. ஆனால், அரசியல் ரீதியாக இது ஒரு ஆரோக்கியமான முடிவு அல்ல. இதனால், ஆட்சியாளர்கள் பொதுச் செலவைக் குறைக்காமல், அதிகபட்ச செலவை கொண்டு வர முயற்சி செய்துள்ளனர். இதனால், அரசு நிறுவனங்கள் முடங்கின. தேசிய பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியாத நிலையில் அரச துறையில் ஊழியர்களின் எண்ணிக்கை இருந்த போதும் புதிய ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மற்றொரு முறையற்ற நடவடிக்கை நாட்டினுடைய வரி வருவாய் இழப்பு ஆகும். எனவே இந்த வட்ஜெட்டில் இவற்றை சரிசெய்து நிலையான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான கொள்கை கட்டமைப்பு இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடுமையான நிதிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. பொதுத்துறையில் ஊழல், விரயம், திறமையின்மை ஆகியவை சாமானியர்களால் கூட கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. ஆகவே இந்த நோக்கத்திற்காக இரண்டு உத்திகளைக் குறிப்பிடலாம். அரசின் செலவினங்களைக் குறைக்க நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதே முதல் உத்தி. இரண்டாவது மூலோபாயம், பொதுத்துறை நிதிகளை மேற்பார்வையிட ஒரு சிறப்பு நிறுவனத்தை நிறுவுவது. இதனால், அரச துறையின் நிதி விவகாரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படும். அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான கழிவுப் பொருட்களை அகற்றுவதுடன் எதிர்காலத்தில் வாகனங்களை கொள்வனவு செய்யும் போது மின்சார வாகனங்களை மாத்திரம் பொதுப்பணித்துறையில் சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளது.

நாட்டின் விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில் துறைகளில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் அரச தலைவர் கவனம் செலுத்துகிறார். விவசாயத்தை திரும்பிப் பார்க்கும்போது உரம் மற்றும் பூச்சிக்கொல்லிப் பிரச்சனைகள், விவசாயக் கடன் பிரச்சினைகளும் முக்கியமானவை. இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் சில வகையான தீர்வுகள் உள்ளன. உணவு பாதுகாப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய உணவு நெருக்கடிக்கு தீர்வு காண்பதே இதன் நோக்கம். மறுபுறம் குழந்தை பருவ ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்திப்பதிலும் முக்கியம் செலுத்தப்பட்டுள்ளது. சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழில்துறை அதிக நம்பிக்கையுடன் செயல்படுத்துவது,  தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப பயிற்சிக்கான வசதிகளை வழங்குவது அதன் சிறந்த அம்சங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.

மிக நலிவுற்ற சமூகத்தை விட்டு வெளியேறாமல் எந்தப் பொருளாதாரக் கொள்கையையும் செயல்படுத்த முடியாது. இங்கு உண்மையான ஏழை சமூகத்தை அடையாளம் காண்பது அரசியல் இலாபங்களுக்கு அப்பால் செய்யப்பட வேண்டும். ஜனாதிபதியின் கூற்றுப்படி, நாட்டில் 61,000 ஏழ்மையான குடும்பங்கள் உள்ளன. அவர்கள் வாழ்வதற்கு வசதிகளை மேம்படுத்தித் துணையாக இருக்க வேண்டும். சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிக்கவும் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆகவே வறுமையை ஒழிக்க உதவி மட்டும் போதாது. உற்பத்திச் செயல்பாட்டில் ஏழை சமூகத்தை ஈடுபடுத்துவதற்கு மேலும் முன்மொழிவுகள் செய்யப்பட வேண்டும்.

வரி மறுசீரமைப்பு மற்றும் பிற பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றிய விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருக்கும் நாட்டை  மீட்க பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் பொருத்தமான பல முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


0 comments:

Post a Comment