ADS 468x60

03 September 2022

நாட்டின் சில பொருளாதாரச் சீர்திருத்தம் மாற்றத்துக்கான பச்சை சமிக்ஞை!

அனைவரும் எதிர்பார்த்த வகையில் இன்று சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க அனுமதி வழங்கவுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதால் இந்த கடன் தொகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாம் பார்க்கலாம், பொருளாதார நெருக்கடியை கடன்களை பெற்றுக் கொண்டு முடிவுக்கு கொண்டுவர முடியாது பதிலாக ஏற்றுமதி பொருளாதாரத்தை உறுதியாக்கி தேசிய வருமானத்தை அதிகரிக்க வேண்டும். பேச்சளவிலும் செயலளவிலும் அரச தலைவரின் பொருளாதாரப் பார்வையும் கொள்கையும் மிகவும் சரியானது மற்றும் நம்பகமானது என்றே கூற வேண்டும். கடன் வாங்குவது நெருக்கடிக்கு ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும். பொருளாதாரத்தை நிலையான நிலையில் பராமரிக்க, ஏற்றுமதி மூலம் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதனை நாம் மறந்துவிடமுடியாது.

இலங்கைபோன்ற வளரும் நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அந்நாடுகளின் ஏற்றுமதித் துறையின் வீழ்ச்சியும், நிதி நிர்வாகத்தின் பலவீனமும்தான் முக்கியக் காரணம். இவற்றுக்கு மேலாக சக்தி வாய்ந்த நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கும் உலகப் பொருளாதார முறையும் அதை பாதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு தொடர்பான மாநாடு பல ஆண்டுகளாக இந்த நிலைமையை தொடர்ந்து சுட்டிக்காட்டியுள்ளது. ஏழை நாடுகள் மூலப் பொருட்களின் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன, அந்த நாடுகள் அதற்கான சரியான பெறுமதியினை சேர்த்து முடிவுப்பொருளாக்குவதில் கருசனை செலுத்துவதில்லை. இதற்கு தீர்வாக, மூலப் பொருட்களுக்கு பதிலாக, பெறுமதி சேர்த்து முடிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என, பரிந்துரைக்க விரும்புகின்றேன். ஆனால் இலங்கை போன்ற நாடுகளால் அதனை சரியாக நிர்வகிக்க முடியவில்லை.

இந்த நாட்டின் மூன்று பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக இருந்த தேயிலை, இறப்பர், தேங்காய் ஆகியன இந்த நிலைமையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தேயிலை சந்தையில் நம்பர் வண் இடத்தை இழந்துள்ளோம். தற்போது, கென்யா மற்றும் இந்தியாவிலிருந்து தேயிலை ஏற்றுமதி நம்மை விட முன்னிலையில் உள்ளது. சில காலமாக, நமது தேயிலை ஏற்றுமதி பின்தங்கியுள்ளது. ரப்பருக்கும் தென்னைக்கும் இதே நிலைதான். சமீபகாலமாக ஆடைத் துறையில்; தாரித்த ஆடைகள் போன்ற சிறு ஏற்றுமதி காரணமாக நமது ஏற்றுமதித் துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது ஆடைத் துறையும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஏனெனில் இன்று ஏற்றுமதி பொருளாதாரத்திற்காக அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இன்று நாம் அனைவரும் அறிந்தவகையில், இலங்கை கடன் வலையில் சிக்கியுள்ளதாக பலர் சுட்டிக்காட்டுகின்றனர். இது முழுவதுமாக ஒதுக்கித் தள்ளக்கூடிய சொல்லல்ல. 1950 களில் இலங்கைக்கு கடன் மற்றும் உதவி தேவையாக இருக்கில்லை. 1960களில் கொழும்பு பிளானிங் மற்றும் உலக வங்கி மூலம் கடன்களும் உதவிகளும் பெறப்பட்டன. ஆனால் அவை மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படுத்தப்படவில்லை. அந்தக் காலத்திலும் அரசாங்கத்திடம் இறக்குமதிக்கு போதுமான அந்நியச் செலாவணி இருந்தது. ஆனால் எழுபதுகளின் இறுதியில் இருந்து, நாட்டின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் தொடர்ச்சியாக அந்நிய தேசத்தில் இருநது கடன்கள் கோரப்பட்டு வருகின்றன. இதனால் தான் 1970 இனைத் தொடர்ந்து கடனில் வாழ்ந்த நாடாக இலங்கை அறியப்படுகிறது. ஆகவேதான் இன்று இந்த கொடிய நெருக்கடியிலிருந்து மீள, வளமையான இந்நிலையில் மாற்றம் வேண்டும்.

உண்மையில் இவற்றுக்கு பரிகாரமாக பொருளாதார சீர்திருத்தங்களை எச்சரிக்கையுடனும் தொலைநோக்குடனும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் உலக நாடுகளுடன் கையாளக்கூடிய தேசிய பொருளாதார வேலைத்திட்டத்தை தயாரிக்க முடியும் என்பதை ஜனாதிபதி இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் மூலம் காட்டியுள்ளார். இடைக்கால வரவு செலவுத் திட்டம் அரசியல் விமர்சனங்களைப் பெற்றிருந்த போதிலும், பொருளாதார நிபுணர்கள் அவ்வாறு செய்யவில்லை. கடனைத் தேடும் நாடு முன்வைக்க வேண்டிய வேலைத்திட்டம் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொருளாதார நிபுணராகக் கருதப்படும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அதன் பிரேரணைகளுக்கு தாம் எதிர்க்கவில்லை என்றும், எதிர்க்கட்சிகளின் சில முன்மொழிவுகளும் அதில் உள்ளடங்குவதாகவும் கூறுகிறார்.

எனவே இந்த நிலையில், பொருளாதார சீர்திருத்தங்களில், பல அம்சங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒருபுறம், அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான உத்திகளை நாட வேண்டும். மறுபுறம், இறக்குமதி செலவுகள் குறைக்கப்பட வேண்டும். மறுபுறம், ஏழை சமூகத்தை வாழ வைக்க நிவாரண திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இது சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலாக பல உதவும் அமைப்புக்கள் கூட எதிர்பார்க்கும் ஒன்று. 61,000 குடும்பங்கள் ஏழைகளாகக் கருதப்படுகின்றன. அதில் 30,000 குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மக்களின் நலனுக்காக 300 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாம் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அவை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் பொருளியளாளர்கள்; நம்புகிறார்கள். அவற்றைக் கண்காணிப்புக்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளமை வரவேற்கத்தக்கது அதுவும் அரசியல் சாயம் இல்pலாததாக இருக்கவேண்டும். ஐ எம் எப் சுட்டிக்காட்டும் முக்கியமான விடயம் அரச துறையை ஊழல் மற்றும் விரயம் இல்லாத இடமாக மாற்றுவது கட்டாயம் என்பது அவர்களின் நிபந்தனை.


0 comments:

Post a Comment