ADS 468x60

04 September 2022

ஊழல் இல்லாத நாடாகும் வரை உதவி கிடைக்காது!

 நம்மால் வரவேற்கப்படும், நாமறிந்த ஒரு விடயம்தான் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு அண்மையில் இணக்கம் தெரிவித்துள்ளமை. இந்த உடன்படிக்கை தொடர்பான கடனைப் பெறுவதற்கு இலங்கை பல கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும், இது அடுத்த சில ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு உதவும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவற்றுள் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு வலுவான, ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விதித்துள்ள நிபந்தனை அவற்றுள் முக்கியமானதாகும்.

ஆகவே, நாம் கடன் பெறுவதற்கு ஊழலைத் தவிர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததற்காக ஒரு நாடாக நாம் வெட்கப்பட வேண்டும். அதே சமயம் நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுவதாக இந்த இடத்தில் உணரப்படுகிறது. ஒரு நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டியது கடன் பெறுவதற்காக அல்ல, அது நாட்டின் ஒட்டுமொத்த நன்மைக்காகவும்தான். ஆனால், இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசாங்கங்கள் ஊழலைத் தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்காததும், அதனால் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைக்கச் செய்திருப்பதுமே, இலங்கை மீதான சர்வதேச நாணய நிதியத்தின் இந்த அணுகுமுறை என்பதை மேற்கூறிய நிபந்தனை எமக்கு எடுத்துக்காட்டியுள்ளது. . இது அவமானம் மட்டுமல்ல வருத்தமும் கூட என்றுதான் சொல்ல வேண்டும்.

அண்மையில் இலங்கைக்கு கடன் உதவி வழங்குவதற்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய நிபுணர் குழுவின் இணைத்தலைவர் மசாஹிரோ நோசாகி, பலமான பொறிமுறையை தயாரிக்க வேண்டும் என ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை இரகசியமல்ல. ஊழலுக்கு எதிராக போராடுவது என்பது நாட்டின் பொது மக்கள் அன்புடன் அரவணைக்க வேண்டிய நிபந்தனை. ஆனால் நாட்டின் சில அரசியல் சக்திகள் இந்த நிலையை விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. அத்தகைய ஊழல் எதிர்ப்புப் பொறிமுறையை அமைப்பதற்கு அவர்கள் இரகசியமாகப் போராட்டம் நடத்துவார்கள் என்பது நாம் அறியாதவையா?

இதைப் பற்றிய தெளிவான யோசனையைப் பெற கடந்த சில வருடங்களைத் திரும்பிப் பார்த்தால் போதும் என்று நினைக்கிறோம். அந்த காலக்கட்டத்தில் இந்நாட்டின் சில அரசியல்வாதிகள் திடீர் என முளைத்த பணக்காரர்களாகவும் இன்னும் சிலர் படிப்படியாக வியக்கத்தக்க வகையில் பணக்காரர்களாகவும் ஆனார்கள். இவர்களில் எவரும் தங்களுடைய சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த உண்மையான தகவல்களை பொறுப்பான அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை. அப்படி ஒப்படைத்திருந்தால், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் பணக்காரர் ஆனதற்காக லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளால் அவர்கள் இந்நேரம் சிறையில் இருக்க வேண்டியிருக்கும். ஆனால் கடந்த காலத்தில் அப்படி நடக்கவில்லை. தற்போது அது நடப்பதாகத் தெரியவில்லை. அத்தகைய பொறிமுறையானது எதிர்காலத்தில் அல்லது நிதியத்தின் நிபந்தனையின்படி அமைக்கப்படும் என்ற நம்பிக்கை மட்டுமே எமக்கு எஞ்சியுள்ளது. கடந்த ஆண்டுகளில், அரசியல்வாதிகள் அல்லது அதிகாரவர்க்கம் கோடீஸ்வரர்களாக மாறியதால், நீதிமன்றங்களில் சவால் விடப்படும் ஒரு நிலையை திடீரென இழந்துவிட்டதால் நாங்கள் இதைச் சொல்கிறோம். 

இந்த வகையில், நாட்டிற்கு சீனி இறக்குமதியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக வலுவான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை இதற்கு சிறந்த அண்மைக்கால உதாரணம். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அவை மிக மெதுவாகவே நடைபெறுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல. இது போன்ற காரணங்களால்தான் நாட்டின் தேசியச் சொத்தினை எல்லாம் ஊழலின் மூலம் திருடுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து அரசியல் சக்திகளையும் சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கும் பொறிமுறை நம் நாட்டிற்கு மிகவும் அவசியம். சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு கடன் வழங்குவதில் இவ்வாறானதொரு பொறிமுறையின் அவசியத்தை வலுவாக வலியுறுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் அவர்களிடம் உள்ளன என்பதில் சந்தேகமில்லை.

இலங்கைக்கு இன்றியமையாத பல பில்லியன் டொலர் கடன் உதவி தொடர்பில் எதிர்பார்த்ததை விட விரைவில் இணக்கப்பாடு எட்டப்படும் வகையில் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்காக திரு.ரணில் விக்கிரமசிங்கவை பாராட்ட வேண்டும். ஆனால் நிதியத்தின் பேச்சுவார்த்தைக் குழு எதிர்பார்த்தது போன்று ஊழலுக்கு எதிரான வலுவான பொறிமுறையொன்றை அமைக்க ஜனாதிபதிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. பாராளுமன்றத்தினூடாக திரு.ரணிலை ஜனாதிபதி பதவிக்கு ஆதரித்த அமைச்சர்கள் மற்றும் வெளியாட்களை அரசியல் எதிரிகளாகக் கருதி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கி மாற்றாமல் இவ்வாறான பொறிமுறையை அமைப்பது மிகவும் கடினமான செயலாகும்.

ஆகவே, பெரிய அளவிலான ஊழல் மற்றும் மோசடி, விரயம் மற்றும் அதிகார துஸபிரயோகம் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு வலுவான காரணியாக இருந்தன. நாட்டின் பொருளாதாரம் கழுத்தில் மாட்டிக்கொண்டு மரணம் என்று புலம்பும் வரை நாணய நிதியத்துக்கு செல்ல முடியாமல் தவித்ததன் விளைவுதான் இன்று மிகக் கடுமையான சூழ்நிலையில் கடன் உதவி பெற வேண்டிய நிலை. ஆனால் ஒவ்வொரு துன்பத்திற்குப் பின்னும் ஒரு நன்மை கிட்டும் என்பதனால் இதை நாம் ஒரு நேர்மறையான அணுகுமுறையாகப் பார்க்கவேண்டும்.


0 comments:

Post a Comment