ADS 468x60

12 September 2022

சுற்றறிக்கைகளும் பொருளாதாரப் பின்னடைவும்: ஒரு ஆய்வுப்பார்வை.

பல வருடங்களாக நான் கோடிட்டுக்காட்டு; ஒரு விடயம் அது நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் சுற்று நிருபங்கள். இதனை இன்று மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்திய உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் பல திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக நடைபெற்ற கலந்துரையாடலில் அரச தலைவர் இந்த ஆலோசனையை வழங்குகிறார். மேற்கூறிய கலந்துரையாடல், அந்தத் திட்டங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த சிக்கல் சூழ்நிலைகளை அகற்ற உதவியது. வெளிநாட்டு உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சரியான இலக்கை நோக்கி நகரவில்லை என்றும் அதனால்தான் வெளிநாட்டு உதவி வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எந்தவொரு சூழ்நிலையிலும், பொது அல்லது அரச ஊழியர்கள் நாட்டின் ஒரு விதிமுறைகளின் கீழ் பணியாற்ற வேண்டும். இதனால் பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் திறன் அரசு ஊழியர்களுக்கு இல்லை. நிறுவனங்களின் நiமுறை மற்றும் நிதி ஒழுங்குமுறை ஆகியவை அரச ஊழியரின் சட்டம் மற்றும் விதியால் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால் இந்த விதிகள் மற்றும் விதிமுறைகள் எதுவும் வளர்ச்சிப் பணிகளைத் தடுக்கவில்லை. மாறாக விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் என்பது விரும்பிய இலக்குகளை அடைவதற்கான முறையான வேலை கட்டமைப்பை உருவாக்குகின்றது என்று கூறலாம். ஆனால், உண்மையில் இவற்றைக் குழப்பி முன்னேற்றத்துக்குத் தடைகளை ஏற்படுத்துவது திறமையற்ற அதிகாரிகளே என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரிந்தவிடயம்.

அரச நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள், அதிகாரிகள் போன்றவை தனித்தனியான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டுள்ளன. நிறுவனங்களின் முக்கிய நோக்கம் மற்றும் நாணய ஒழுங்குமுறை அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் அவை தொகுக்கப்பட்டுள்ளன. இது தவிர, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு காலத்தின் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இலக்குகளை அடைய திட்டமிடும் ஒரு நிறுவனத்திற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. திட்டமிடல், ஒழுங்கமைத்தல், வழிநடத்துதல் மற்றும் தலைமைத்துவத்தை வழங்குதல் போன்ற அடிப்படை காரணிகள் அவற்றுக்குத் தேவை. ஆகவே சில அமைப்புகளின் தலைவர்கள் மாற்றத்திற்கு தயாராக உள்ளனர் மாறாக சில நிறுவனங்களின் தலைவர்கள் மாற்றத்திற்கு தயாராக இல்லை. 

எங்களுக்குத் தெரிந்த ஒரு குறிப்பிட்ட திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தனது தாயாரின் இறுதிச் சடங்குகளில் அரை நாள் கடமைக்குப் பிறகு கலந்து கொண்டார். ஏமக்கு முதலில் தோணுவது, அவர் மிகவும் நேர்மையான ஒரு அரச ஊழியர் என்பது. இன்னொரு பார்வையில், அவர் ஒரு திறமையற்ற மற்றும் இரக்கமற்ற அதிகாரி. அவர் தனது அம்மாவின் இறுதிச் சடங்கிற்காக ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் அவரது நிர்வாகம் மோசமாக இருப்பதால் அதுவும் எடுக்கப்படவில்லை. அல்லது வேறு ஏதேனும் மோசடியான யோசனையால். அரச சேவைக்கு சிறந்த நிர்வாகம் தேவை. எனவே இங்கு நாம் கற்றுக்கொள்ளுவது எமது நிர்வாகம் முன்னோக்கி இருந்தால், சுற்றறிக்கைகள் அவற்றின் எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளையும் தடுக்காது.

ஆரச சேவைக்காக வயதை அதிகபட்சமாக அறுபத்தைந்து வயதாக உயர்த்த வேண்டும் என்ற கருத்து முன்பு இருந்தது. மலேசியாவின் முன்னாள் தலைவர் மகாதீர் முகமதுவும், முதிர்ந்த அரசு ஊழியர் நாட்டுக்கு பயனுள்ளவர் என்று கருதினார். அதன்படி, அரசுப் பணியில் ஓய்வுபெறும் வயதை அறுபத்தைந்து எனக் குறிப்பிடும் சுற்றறிக்கை நம் நாட்டில் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த நாட்டின் வருமானம் குறைந்ததாலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியாலும் அரசு அதை மாற்ற வேண்டியதாயிற்று. இதனால், அரச பணியில் கட்டாய ஓய்வு பெறும் வயதை அறுபது ஆண்டுகள் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந் நாட்டில் மாற்றப்பட வேண்டிய பல சுற்றறிக்கைகள் இருப்பதாக அரச ஊழியர்களே சுட்டிக்காட்டுகின்றனர். அவற்றைக் கேட்பது மிகவும் முக்கியமானது இன்று.

ஏமது நாட்டின் அரச பணி மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள் உள்ளன. முதலாவதாக, அரசு நிறுவனங்கள் தொடர்ந்து நஷ;;டத்தைச் சந்தித்து வருகின்றன. இரண்டாவது, தனியார் துறையுடன் ஒப்பிடும்போது பொது நிறுவனங்கள் மிகவும் திறமையற்றவை. அரசு நிறுவனங்களின் முக்கிய பலவீனம் ஊழல். மக்கள் சில சேவைகளைப் பெற அரசு நிறுவனங்களில் நேரத்தைக் விரயப்படுத்த வேண்டும். சில சுற்றறிக்கைகளுக்கும் அதிகாரிகளின் அயோக்கியத்தனத்திற்கும் தொடர்பு இருக்கலாம். சில அரசு நிறுவனங்களை பராமரிப்பது திறைNசிக்கு சுமையாக மாறியுள்ளது. நஷ;ட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை பராமரிக்க ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிட வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது மாற வேண்டும். இல்லையெனில், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் கிடையவே கிடையாது.

ஜனாதிபதி குறிப்பிடுவது போன்று அரசாங்க சுற்றறிக்கைகளில் மாத்திரமன்றி அரச உத்தியோகத்தர்களது அணுகுமுறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தாமல் நெருக்கடியிலிருந்து மீள்வது கடினம். நஷட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும் என்று ச.நா.நிதியம்; சுட்டிக்காட்டியுள்ளது. நமது வரி விதிப்பு முறை மாற வேண்டும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. உலகை சமாளிக்கும் தேசிய பொருளாதாரத்தை அதன் மூலம்தான் உருவாக்க முடியும். அவற்றை புரிந்து கொண்டு கையாளும் இடத்திற்கு நாம் வர வேண்டும். அதற்கு அர்பணிப்புள்ள கடமையாளர்கள் சுற்றறிக்கைக்கு அப்பால் சென்று அவர்கள் நேர்மறையான முறையில் பணியாற்றவேண்டும்.


0 comments:

Post a Comment