ADS 468x60

11 September 2022

விளையாட்டு வீரர்களின் சாதனை சோதனையில் வாடும் மக்களுக்கு ஊக்கமருந்து.

கடந்த ஞாயிற்றுக் கிழமை முழு இலங்கை சமூகத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய போதிலும், நாட்டின் நான்கு திசைகளிலிருந்தும் பட்டாசுகளின் சத்தம் மற்றும் ஆரவாரம் கேட்கத் தொடங்கியது. இந்த நேரத்தில் குதூகலமும், பெருமையும், உற்சாகமும் பொதிந்து கிடக்கும் அற்புதமான சந்தர்ப்பமாகக் கருதுவது மிகவும் சரியானது.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒருபுறம் இலங்கை அணி மீண்டும் ஆசிய வலைப்பந்து கிண்ணத்தை கைப்பற்றியது. மறுபுறம் இலங்கை அணி ஆசியக் கிண்ண கிரிக்கெட் மகுடத்தை வென்றது. அந்த அணிகளுக்கு நாட்டில் உள்ள பலர் நம்மட பொடியணுகள், எங்கள் பெண்கள் என்று வாழ்த்தத் தொடங்கினர்.

முதலில், இரு அணிகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அணிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்திற்கே கிடைத்த வெற்றியாகக் நாம் கருதுவது மிகவும் சரியானது. இந்த வெற்றிகள் எதுவும் எளிதானவை அல்ல. தோல்விக்கு பிறகு எங்கள் அணிகள் மீண்டும் எழுந்து பொறுமையாக விளையாடி வெற்றி இலக்கை எட்டி இரக்கின்றனர். அர்ப்பணிப்பு, அதிகபட்ச பங்களிப்பு, கூட்டு உணர்வு மற்றும் சரியான முடிவுகளை எடுக்கும் திறன் ஆகியவை எங்கள் அணிகளிடமிருந்து சுதந்திரமாக காணப்படுகின்றன. இந்த இக்கட்டான நேரத்தில் எங்களுக்கு ஆறுதலாக இருந்த விளையாட்டு அணிகளுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் அறிக்கையை நினைவுபடுத்த விரும்புகிறோம். சூப்பர் போர் சுற்றில் இந்திய அணி இலங்கையிடம் தோல்வியடைந்தது. அந்த வேளையில் எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என அவர் கூறியிருந்தார்.

ஆகவே இந்த விளையாட்டுக்களில் சில மனநிறைவைக் காட்டும் ஒரு அணி ஒரே நேரத்தில் முன்னேற முடியும். கிரிக்கெட்டின் இயல்பும் அதுதான். மிக முக்கியமான விடயம் நன்றாக விளையாட வேண்டும். இது ஒவ்வொருவரின்; நாட்டிற்கும் செய்ய வேண்டிய கடமை என்று அழைக்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கியது. அங்கு இலங்கை அணி கடும் தோல்வியை தழுவியது. சிலர் இதை வெட்கக்கேடான தோல்வி என்று கூறினர். 

இதனால் எங்கள் கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டு அவர்களில் சிலர் போட்டியை கைவிட்டனர். அதன் பின் எங்கள் அணி வங்கதேச அணியை இரண்டாவது முறையாக எதிர்கொள்கிறது. இலங்கையை இலகுவாக வீழ்த்த முடியும் என அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் போட்டிக்கு முன்னர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பங்களாதேஷ; அணி வெற்றி மனப்பான்மையுடன் களமிறங்கிய போதிலும் இலங்கையிடம் தோற்றது. அன்றிலிருந்து இலங்கை அணி மெதுவாகவும் நுட்பமாகவும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

இறுதிப் போட்டியில் டொஸில் இலங்கை தோல்வியடைந்தது. ஆனால் எங்கள் அணி அதை பொய்யாக்க முடிந்தது. பாகிஸ்தான் அணியை இருபத்து மூன்று ஓட்டங்களால் இலங்கை அணி தோற்கடித்தது. பாகிஸ்தான் 171 ரன் இலக்கை துரத்திய போதிலும், அவர்களால் 147 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை ஆறு விக்கெட்டுக்கு நூற்று எழுபது ரன்கள் எடுத்திருந்தது. ஆகவே எங்கள் அணியில் இரண்டு குறிப்பிடத்தக்க பண்புகள் இருந்தன. முதலில் ஓல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தும் ஒரு ஆற்றல். இரண்டாவது சமூக மற்றும் நாட்டுப்பற்று உணர்வுடன் விளையாடுவது.

நமது தேசிய வலைப்பந்து அணியையும், கிரிக்கெட் அணியையும் திரும்பிப் பார்க்கும்போது, இப்போது அவர்கள் தேசியப் பொறுப்புடன் நாட்டுக்காக விளையாட முன்வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

இந்தக் அணிகளின் தலைமை, பயிற்சி, பொறுமை மற்றும் உத்திகள் வெற்றிகரமான அளவில் உள்ளன. எங்கள் வலைப்பந்து அணி சிங்கப்பூர் வலைப்பந்து அணியை அறுபத்து மூன்று முதல் ஐம்பத்து மூன்று என தோற்கடிக்க முடிந்தது. இது ஒரு நல்ல சூழ்நிலை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். 

1996ஆம் ஆண்டு நாம் கொண்டிருந்த கிரிக்கெட் வசந்தத்தைப் போன்றதொரு நிலைமையை இன்றய கிரிக்கெட் அணியும் உருவாக்கி வருவதைக் காணமுடிகிறது. இது மகிழ்ச்சிக்குரிய விடயம்.

எனவே விளையாட்டு என்பது வெற்றி தோல்வி இரண்டையும் சகித்துக்கொள்ள வேண்டிய ஒரு துறை. இரண்டு சூழ்நிலைகளுக்கும் நாம் நம்மை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் அவர்கள் மிகவும் நன்றாகவும் அவர்களின்; திறமைக்கு ஏற்றவாறும் விளையாட வேண்டும். இதனால் இரசிகர்களிடமிருந்து அணிகள் பெறும் ஊக்கம் அபாரமானது. அதே நேரம் அதிக இரசிகர்கள் அணியை விட்டு ஏமாற்றத்தில் வெளியேறும்போது, விளையாட்டு வீரர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இந்த நிலையில் நெட்வோல் அணிக்கும் கிரிக்கெட் அணிக்கும் ஜனாதிபதி தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது ஒரு நல்ல முன்னேற்றம். அதுபோல விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றி தோல்விகளில் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். 

இறுதியாக ஒன்றை கூறவிரும்புகின்றேன் அதாவது இந்த விளையாட்டுக்களில் இலங்கையர் என்ற பெருமையை நாம் இன்னும் பன்முகப்படுத்த அனைத்து இனக்குழுமம் சார்ந்த வீரர்கள் கருத்தில் கொள்ளவேண்டியது மிக முக்கியமானது. அவ்வாறு இல்லாமல் தொடர்சியாகப் புறக்கணித்தால் அது இந்த அணிகளுக்கு வலுச்சேர்காது என்பது எமது கருத்து. எனவே அவற்றை எதிர்காலத்தில் கருத்தில்கொண்டால் நிஜமான இலங்கையர் என்ற நாமத்தினை தக்கவைக்கலாம் என்பது எனது ஆதங்கம். 

0 comments:

Post a Comment