ADS 468x60

11 September 2022

சர்வதேச உறவுகளை நாம் வளர்துக்கொள்வது நாட்டு வளர்சிக்கு தூண்டுகோலாகும்.

  • இலங்கையின் வீழ்ச்சிக்கு இந்த நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் தமது உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேட முயற்சித்தமையே பிரதான காரணம் 
  • நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் இலங்கைக்கு ஸ்வீப் டிக்கெட்டுகள் விழத் தொடங்கியுள்ளன.
  • அமெரிக்கா சம்பாதித்த பணத்தில் குறிப்பிட்ட பகுதி சர்வதேச சமூகத்தின் முன்னேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டது

நமக்கு முன்னேறக் கிடைத்த பல சந்தர்பங்களை சில அரசியல் முதலைகளின் நன்மைக்காகத் தட்டிக்கழித்த கதைகள் ஒன்றும் புதியதல்ல. இவற்றால், இந்நாட்டின் பொருளாதாரம் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்து கிடக்கும் வேளையில் USAID அமைப்பின் தலைவராக இருந்த திருமதி சமந்தா பவர் இலங்கை வந்தடைந்தார். நல்ல காலம் இந்த கிணற்றில் தண்ணீர் இல்லை அதனால் நமது பொருளாதாரம் மூழ்கவில்லை. ஆனால் கிணற்றின் அடியில் மூழ்குவதற்குப் பதிலாக பொருளாதாரத்தின் பின்பகுதி கிணற்றில் விழுந்து உடைந்தது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இந்த முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டது என்பது உண்மை கதை. 

இதற்கான வலிநிவாரண மருந்துகளை தற்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் உட்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் USAID  உட்பட பல சர்வதேச அனர்த்த நிவாரண நிறுவனங்கள் இவர்களின் பாராமுகம் காரணமாக இலங்கையை கைவிட்டன. ஆனால் இன்று புதிய அரசாங்கம் நாட்டைச் மீளக்கொண்டுவரும் முயற்சியினைச் செய்துகொண்டிருக்கும் இவ்வேளையில் அந்த நிறுவனம் இலங்கையை மீண்டும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருப்பது நாட்டு மக்களின் அதிரஷ;டம். 

சுமார் 4 அல்லது 5 மாதங்களுக்கு முன்னர், சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் எந்தவொரு உடன்பாட்டினையும்  செய்யத் தயாராக இருக்கவில்லை. ஆனால் இன்று அது இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த அனைத்து உதவிகளையும் கொண்டு, இந்நாட்டு மக்களின் பசியைப் போக்கவும், அவர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் முடிந்தால் அது மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும் எம் அனைவரின் அவா.

இலங்கைக்கு வந்து நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்த சமந்தா பவர் எதிர்பார்த்த கடன் தொகையை விட மேலும் 6 மில்லியன் டாலர்களை வழங்க ஒப்புக்கொண்டார். நாங்கள் நினைப்பது போல், நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் இலங்கைக்கு ஸ்வீப் டிக்கெட்டுகள் விழத் தொடங்கியுள்ளன. அவை ஆறுதல் பரிசுகளாக இல்லாமல் முதல் பரிசாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

USAID முற்றிலும் அமெரிக்க நிறுவனம். இது ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிலிருந்து சுயாதீனமாக இயங்குகிறது. 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி அமெரிக்க காங்கிரஸ் வெளிநாட்டு உதவிச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. 

அந்தச் செயலால் என்ன நடந்தது என்றால், அமெரிக்கா சம்பாதித்த பணத்தில் குறிப்பிட்ட பகுதி சர்வதேச சமூகத்தின் முன்னேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டது. இந்த நாட்டில் உள்ள சில இடதுசாரி கும்பல்கள் தாங்கள் சொல்லும் உண்மை ஏகாதிபத்திய அல்லது முதலாளித்துவ விளக்கம் என்று கூறலாம். ஆனால், இடதுசாரி கும்பல் ஒரு அரசியல் கைக்கூலி என்பது நமது விளங்கிக்கெர்ளல்.  இலங்கைக்கான தனது இரண்டு நாள் பயணத்தின் முடிவில் சமந்தா பவர் அமெரிக்க தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இலங்கையின் வீழ்ச்சிக்கு இந்த நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் தமது உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேட முயற்சித்தமையே பிரதான காரணம் என அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

அதிக கடன் சுமை, மோசடி மற்றும் ஊழல், இரசாயன உரப் பாவனைக்கு தடை விதித்தமையும் இலங்கையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாக சமந்த பவார் குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக இலங்கையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இலங்கையை கொள்ளையடிப்போர்;; இராச்சியம் என்று கூறுவதற்கு சர்வதேச சமூகம் இப்போது போதுமான உண்மைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இந்த நாட்டிற்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு 15வீதம் அல்லது 20வீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்பதும் கூடுதலாக பல மில்லியன் டொலர்களை இடைத்தரகர்களுக்கு செலவிடுவதும் சர்வதேச அளவில் பரவி வருகிறது. இந்த கமிஷன் கதை இன்று நேற்றல்ல 40 வருடங்களுக்கு முந்தைய கதை. 1977 ஜே. ஆர். ஜனாதிபதி ஜயவர்தன இந்நாட்டின் ஜனாதிபதியானதன் மூலம் நாடு திறந்த பொருளாதாரமாக மாறியதன் பின்னர் சில அரசியல்வாதிகள் எதிலும் கமிஷன் வாங்க ஆரம்பித்தார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சில அரசியல்வாதிகள் மற்றும் சில அரசியல்வாதிகளின் அதிகாரிகள் வெளிநாட்டுத் திட்டங்களிலிருந்து மட்டுமல்ல, உள்ளூர் திட்டங்களிலிருந்தும் கமிஷன் பெறுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

பொதுவாக வெளிநாட்டில் இருந்து வரும் முதலீட்டாளர் 100 மில்லியன் டொலர்கள் செலவு செய்து லாபகரமான தொழில் தொடங்கும்போது, தேவையான ஆவணங்கள் மற்றும் இதர வசதிகளை வழங்க சில மில்லியன் ரூபாய்கள் லஞ்சம் வாங்கும்போது, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும அங்கே  முட்டி மோதும் நேரங்கள் நாம் கண்டவை. இத்தகைய வேலைகள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும், ஆனால் நாம் ஒரு தேசமாக வளர முடியாத நிலையினைத் தோற்றுவிக்கும். 


0 comments:

Post a Comment