ADS 468x60

14 September 2022

கிழக்கில் ஒருபோக விவசாயம் செய்ய 5 இலட்சம் தொழிலாளர்கள் தேவை: மீண்டும் மம்பட்டி தூக்கவேண்டும்!

  • சுமார் 40 வகையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • நமக்கு மூலப்பொருட்கள் கிடைத்தால் இங்கு முடிவுப் பொருட்களை தயாரிக்கலாம்?
  • எத்தனை மூலப்பொருட்கள் கொண்டு வந்தாலும் பெட்ரோல் இன்ஜின், டீசல் என்ஜின்களை இந்த நாட்டில் தயாரிக்க முடியுமா?
  • ஒரு நாளைக்கு ஒருவருக்கு குறைந்தது 3500 ரூபாய் இல்லாமல் இருமக் கூட மாட்டார்.
  • கிழக்கு மாகாணத்தில் ஒரு பருவத்தில் அறுவடை செய்வதற்கு குறைந்த பட்சம் நான்கிலிருந்து ஐந்து இலட்சம் பேர் தொழிலானர்கள் தேவைப்படுகின்றனர்.

வரலாறு முக்கியம் நமக்கு, நமது விவசாயிகள் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளனர். அந்தவகையில் 1900 ஆம் ஆண்டில், இலங்கை விவசாயிகள் முட்செடிகளைப் பயன்படுத்தி நெல் வயல்களைப் பயிரிட்டனர். இது ஒரு இயற்கைக் கரிம உரம். அதேபோல பூச்சிக்களை மற்றும் ஈக்களை விரட்ட பாரம்பரிய இரசாயன முறைகளையும் உள்ளூர் மூலிகைகளையும் பயன்படுத்தினர். 1910ல் கூட இந்நாட்டு மக்களும் அவ்வாறே பயிரிடப்பட்டனர்.

 ஆனால் 1950 இல் இலங்கையின் மக்கள் தொகை ஒரு மில்லியனைத் தாண்டியது. எனவே, நுகர்வோர் எண்ணிக்கையும் ஒரு மில்லியனைத் தாண்டியது. ஒரு கோடிக்கு உணவளிப்பதற்கு இயற்கை எருவுடன் நெல் பயிரிட முடியாது. எனவே இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரசாயன உரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. அடுத்த 50 வருடங்களாக ரசாயன உரங்களுக்குப் பழகிவிட்டோம். ஆந்த நிலையில், திடீரென்று இயற்கை உரங்களுக்கு மாறி நாம் செய்த தவறை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா? பாரம்பரிய இயற்கை உரங்களுக்கு எதிரான போராட்டத்துடன் தொடங்கிய மக்கள் அலையால் முந்தைய அரசாங்கம் கவிழ்ந்தது. இப்போது இந்த நாட்டில் நிலையான அரசாங்கம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டு உதவிகளும் வரத் தொடங்கியுள்ளன. அங்கிருந்து கதை இப்படி போகிறது...

நமக்குத் தெரிந்த வகையில் கடந்த மாதம், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பெருமளவிலான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்தது. இது முற்றிலும் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் ஏற்பட்ட பிரச்சனை. வாசனை திரவியங்கள், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஆடைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள், கத்திகள், சவரன் உபகரணங்கள், மெல்லிய பலகைகள், வாகன வற்றிகள்;, வற்றரிகள், படுக்கை விரிப்புகள், பெட்ரோல் என்ஜின்கள் மற்றும் டீசல் என்ஜின்கள், கணினிகள், அறுவடை உபகரணங்கள் உட்பட சுமார் 40 வகையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது இதனால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையில் ஒருவித நியாயம் உள்ளது. படுக்கை விரிப்புகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை. 

ஏனெனில் அவை இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படலாம். இந்த நாட்டில் வற்றரிகள் தயாரிக்கப்படுகின்றன. மெல்லிய பலகைகளும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்த நாட்டில் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் காலணிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. மேற்கூறிய பொருட்களின் உற்பத்திக்குத் தேவையான அனைத்து மூலப் பொருட்களும், நூல் வகை முதல் துணித் துண்டு வரை அனைத்தும் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படாமல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்ற உண்மையை ஒரு கணம் மறந்து விடுவோம். 

அதாவது நமக்கு மூலப்பொருட்கள் கிடைத்தால் இங்கு முடிவுப் பொருட்களை தயாரிக்கலாம் என்று அர்த்தம். ஆனால் இந்த நாட்டில் கைக்கடிகாரங்கள், ரேசர்கள், சேவிங் கருவிகள் தயாரிக்கும் தொழில்நுட்பம் இல்லை. எனவே அவற்றை கொள்கலன்களில் இங்கு கொண்டு வர வேண்டும். சேவிங் சவரன் இறக்குமதியை எந்த அரசாங்கமும் நிரந்தரமாகத் தடை செய்யுமானால், இந்நாட்டு மக்கள் இரண்டு நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்று முடியைக் கட்டிக்கொண்டு தாடி வளர்க்க வேண்டியிருக்கும். இது கதையின் ஒரு பக்கம் மட்டும்தான். 

கதையின் மறுபக்கம் பின்வருமாறு இருக்கின்றது, எத்தனை மூலப்பொருட்கள் கொண்டு வந்தாலும் பெட்ரோல் இன்ஜின், டீசல் என்ஜின்களை இந்த நாட்டில் தயாரிக்க முடியாது. கணினிகளையும் உருவாக்க முடியாது. மனித உழைப்பின் மூலம் தன்னிறைவு பெற்ற நாடு இலங்கை என்று கூறப்படுகிறது. இது முற்றிலும் ஒரு பல்லவி. கையால் தோண்டும், மண்வெட்டியைக் கொண்டு வேலை செய்யச் சென்றால், அதற்கு வேலையாட்கள் இன்றில்லை மறுக்க முடியுமா?

எமது கிழக்கு மாகாணத்தில் இலட்சக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் உள்ளன. வயல்களை தோண்டுவது முதல் மரக்கன்றுகளை வெட்டுவது வரை அனைத்து பணிகளும் இயந்திரங்கள் மூலம் செய்யப்படுகிறது. உழவு இயந்திரம் வேலை செய்ய வெட்டுமெசின் மற்றும் சுனாமி என்று இரண்டு ராட்சத இயந்திரங்கள் அறுவடைக்கு உள்ளன. இந்த இரண்டு இயந்திரங்களும் சீனா அல்லது வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இந்த உழவுக் கருவிகளை அரசு தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்த்ததில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

எமது கிழக்கு மாகாணத்தில் ஒரு பருவத்தில் அறுவடை செய்வதற்கு குறைந்த பட்சம் நான்கிலிருந்து ஐந்து இலட்சம் பேர் தொழிலானர்கள் தேவைப்படுகின்றனர். இன்று இந்த நாட்டில் எந்த ஒரு தொழிலாளியும் குறைந்தது ஒரு நாளைக்கு 3500 ரூபாய் இல்லாமல் இருமக் கூட மாட்டார். அந்தச் சூழ்நிலையில் இயங்கும் இயந்திரங்களைத் தொடர்ந்து தடை செய்தால், நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரைப் பயன்படுத்தித்தான் அவற்றை செய்யவேண்டிவரும்;. டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின்களை இறக்குமதி செய்ய தடை விதித்ததால் பல வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டது. உண்மையில், நாம் முன்பு கூறியது போல், அந்நியச் செலாவணி முற்றிலும் குறைந்துவிட்டதால், இந்த பொருட்களை அரசாங்கம் தடை செய்தது. அதற்காக நாங்கள் அரசைக் குறை கூறவில்லை. எங்கிருந்தோ பணத்தைக் கண்டுபிடித்து இந்தப் பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலம் அரசாங்கம் முற்போக்கான மற்றும் பொறுப்பான முறையில் நடந்து கொள்கிறது என்ற எண்ணப்பாங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவேண்டுமல்லவா.

0 comments:

Post a Comment