#மாறுமா?????
#தியானமும்_தெய்வமும்_தெருவெல்லாம்_கோவிலும்
#திருந்தாத_ஜென்மங்கள்_இருந்தென்ன_இலாபம்?
நாற்றத்தை வைத்து
நறுமணத்தைப் பேசலாமா!
தோற்றம் சிறக்க
நல்ல சுற்றம் அமைக்கவேண்டும்!
காற்றில் பரவும்
கடும் நோய் நொடிகளுக்கும்
ஆற்றலில்
பரப்பும் அழியாத அசிங்கங்களும்
சீற்றங்கொள்ள
வைக்கும் வீதிக் குப்பைகளும்
சாற்றுவதென்ன நமக்கு சற்று நீ சிந்தித்தாயா?
மயானங்கள் மாறுது
குப்பைமேடாய்
மண்கொஞ்சும்
கடற்கரையில் ஏறுது போத்தலோடாய்
பயணங்கள்
கசக்குது பாதை நெடுக
பாதகர்கள்
தெருவெல்லாம் பரப்பிய கழிவுகளில்
தியானமும்
தெய்வமும் தெருவெல்லாம் கோவிலும்
திருந்தாத
ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்?
மெத்தப் படித்த
மேதாவிகள் உள்ளோம் என
சுத்தப்படுத்தாத
ஊரில் வாழுவது சுகமா சொல்
இத்தனைக்கும்
கிலோமீற்ற இரண்டுதான் ஊரு
எத்தனைதான் ஆலம்
பழம் அழகாய் இருந்தாலும்
உத்தமமா என்ன!
உள்ளிருக்கும் உழுத்த பழம்?
அத்தனையும்
அடிமனதின் ஆணிவேரல்லவா நமக்கு
மொத்தமாய்
மாறவேண்டும் மோகமது ஊரில் வேண்டும்
வெட்டி அகற்றி
ஆணிவேரை வேரொடு புடுங்கி
புட்டியாய்
இருக்கும் புழுத்த குப்பையெல்லாம்
பட்டி
தொட்டியெல்லாம் இல்லாமல் செய்ய
எட்டி நடைபோட்டு
எல்லோரும் வாருங்கள்
கத்தி கத்தி
அழைக்கிறேன் கரம் இரண்டு கூப்பி
கத்தி மம்பட்டி கட்டாயம் கொண்டுவாங்க!
மத்தியில்
இருக்கும் மயானம் சுடுகாடாய்
சுத்தியிருக்கும்
சுருங்கிய பாதை என்றெல்லாம்- பார்தால்
சத்தி
வரப்பாக்குது சத்தியமா முடியலங்க
சத்தி
வேண்டுமென்னால் சுத்தம் நமக்குத் தேவை!
குடியிருப்பு
செல்லும் பாதை குடி எழுப்பச் செல்லும் பாதை
அடிவயிற்றைக்
கலக்குது அங்கு செய்த அநியாயம் கண்டு
மக்கள்தானே
வாழுகிறார்கள் மாடும் ஆடுமா வாழுது அங்கு
முட்களும்
கற்களும் முடிச்சுகளும் முருங்கைக் கம்பும்
கோழிக் கழிவும்
குழந்தை மலங்களும் சீழ்படிந்த சோறும்
சிறு பெரு
குப்பைகளும் வாடிக்கையாக தினம்
வந்து வந்து கொட்டுகிறார்கள்
வேடிக்கை மானுடங்கள்!
சிறுவர்களும்
முடியாத முதியவரும் தினம் தினம்
இறுதிவரை
இதனால்தான் என்நாளும் பிரயானம்
இருபுறம் குளம்
நிறைய மருவிவரும் மலர்காற்று
அருவருப்பாய்
ஆனதின்று அகலவில்லை நோய்நொடிகள்
பாவம்
என்றுசொல்லி யாரும் பரிகாரம் சொல்லவில்லை
போவம் நமக்கென்ன
என்று சுயநலமாய் வாழும் மன்று!
குளக்
கட்டுகளெல்லாம் மலக் கட்டுகளாயிற்று
கோயிலும் வயலும்
குளமும் வாவியும்
வளம் பல
நிறைந்தாலும் வருவோரும் செல்வோரும்
வசதியின்றி
தவிக்கிறார்கள் வசதியாக இன்னும்
வடியும் குடியும்
சட்டத்தை மீறும் அடியும் புடியும்
இடிபோல இறங்குது
பார்த்தும் நம்ம சமுகம் பார்காது உறங்குது!
#CleanSriLanka
#CleanThettativu
படங்களில்
இருப்பது தேத்தாத்தீவு குடியிருப்புப் பாதையின் பாதக நிலை!
0 comments:
Post a Comment