ADS 468x60

14 January 2026

வந்தது புத்தாண்டு!


 தந்தன தந்தானா தைப்பொங்கல்

வந்தது இந்நாளா

தந்தன தந்தானா தையுடன்

வந்தது புத்தாண்டு

கொண்டோடி வாருங்கடி

பச்சரிச பானையில் போடுங்கடி

கரும்பை எடுத்தடுப்பில் பக்குவமாய்

காய்சிப் புளிஞ்செடுங்க!


மாவிலை தோரணத்தை

வாசலில வந்தாட வையுங்கடி

பூவெல்லாம் கோத்தெடுத்து

பானையில பக்குவமாய் கட்டுங்க


செங்கலடி ஏராவூர்

வாழைச்சேனை கல்முனை ஈறாக

ஒவ்வொன்றாய் பார்த்தெடுத்த

பானையிது பக்குவமாய் பொங்குங்க


தந்தன தந்தானா

சிந்தெடுத்து கும்மியடியுங்கடி

வந்தனம் என்று சொல்லி

சூரியனை வாழ்த்தி வணங்குங்கடி

0 comments:

Post a Comment