தந்தத் தகிடத் தகிடதா திந்தா திகிட திகிடத்தெய்
தந்தத் தகிடத் தகிடதா திந்தா திகிட திகிடத்தெய்
பொங்கலோ பொங்கலு
புதிய ஆண்டு பொங்கலு
பொங்கலோ பொங்கலு
புதிய ஆண்டு பொங்கலு
பரிதி ஒளி பாரில் பெற்ற
நன்றிக்கு ஒரு பொங்கலு
ஒன்று கூடிப் பொங்குவோம்
பொங்கலோ பொங்கலு
புதிய ஆண்டு பொங்கலு
என்றும் ஆடி பொங்குவோம்
வென்று மகிழ பொங்குவோம்
வெற்றிக் களிப்பில் பொங்குவோம்
பொங்கலோ பொங்கலு
பொங்கலோ பொங்கலு
சேனை எல்லாம் விளைச்சல் எடுத்து
பானை நிறைய படையல் செய்து
பானை நிறைய படையல் செய்து
செல்வம் ஓங்க செய்த உழவர்
பொங்கலோ பொங்கலு
புதிய ஆண்டு பொங்கலு
ஆடு மாடு அன்னமிட்ட
அன்னை பூமா தேவி போற்றி
கூடி மாந்தர் குரவை போட்டு
கொண்டு நன்றி கூறி மகிழ
பொங்கலோ பொங்கலு
புதிய ஆண்டு பொங்கலு
ஓடி ஓடி உழைத்த கால்கள்
ஓய்வெடுத்து உண்டு மகிழ
தேடித் தேடிப் புதிய கதிரில்
பாடி ஆடி படையல் செய்து
பொங்கலோ பொங்கலு
புதிய ஆண்டு பொங்கலு
வேட்டி கட்டி ஆடை அணிந்து
வட்டமிட்டுப் பெண்கள் சேர
சேட்டை செய்து மையல் கொண்டு
பூட்டை உடைக்கும் மனங்கள் இணையும்
பொங்கலோ பொங்கலு
புதிய ஆண்டு பொங்கலு
அறுவடைகள் முடிந்த வேளை
அஞ்சி ஆறு காசு சேர்த்து
தெருக் கடையில் புடவை வேண்டி
திருப்படையல் செய்து மகிழும்
பொங்கலோ பொங்கலு
புதிய ஆண்டு பொங்கலு
என்றும் தமிழன் அறத்தை சொல்லும்
ஒன்றிணைந்த பண்பு காட்டும்
இன்பம் வாழ்வில் என்றும் ஓங்க
ஒன்றிணைந்த பண்பு காட்டும்
பொங்கலோ பொங்கலு
புதிய ஆண்டு பொங்கலு
சீனி சக்கர கரும்பு வெல்லம்
சின்னச் சின்னப் பழங்கள் சேர்த்து
பச்சை அரிசை பாலில் இட்டு
பானைபொங்கப் போட்டு மகிழும்
பொங்கலோ பொங்கலு
புதிய ஆண்டு பொங்கலு
தந்தத் தகிடத் தகிடதா திந்தா திகிட திகிடத்தெய்
தந்தத் தகிடத் தகிடதா திந்தா திகிட திகிடத்தெய்


0 comments:
Post a Comment