ஏரோடும் ஈழ மண்ணில்
நீரோடும் பாரு
நீரோடி விளைந்த மண்ணில்
நெல்லாடும் ஊரு
தையோடு வழி பிறக்கும்
எல்லோருக்கும் வலி பறக்கும்
புத்தாண்டு பிறந்து வந்து
பொன்னான மகிழ்ச்சி பொங்கும்
தை மாசம் பிறந்து விட்டாலே
தமிழில் அது புது வருடமல்லோ
தெய் தெய் என்று பாடியே நாளும்
புதிதாய் நாம் பொங்கிடுவோமே
நான் ஏரெடுத்து உழவி வயல் செய்து முடித்தேன்
அதற்கு உறுதுணையாய் இருந்தவர்க்கு பொங்கிப்
படைத்தேன்
பொங்கலோ பொங்கலு பொங்கலோ பொங்கலு



0 comments:
Post a Comment