ADS 468x60

13 January 2011

வடியாத வெள்ளமும் தாங்க முடியாத வாழ்க்கையும். ...

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழ்நாளில் இல்லாத அளவு பெருமழை பெய்து வெள்ளமாக மாறியுள்ளது> அனர்த்த முமாமைத்துவத்தின் கணிப்பீட்டின்படி 493 நலன்புரி முகாங்களில் பாதிக்கப்ப்ட்ட 954>204 மக்களில் 183>008 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தினில் 1070 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளது. 12.01.2011 இன் மழைவீழ்சியின் அளவு 200 மில்மீற்றருக்கு லோகப் பதிவாகியுள்ளது. இருந்த போதும் பொலநறுவை மாவட்டத்தில் மழையின் வேகம் குறைந்துள்ளது எனவும் ஆனால் மட்டக்களப்பின் நிலமை அவ்வாறு இல்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் திரு கொடுப்புலி அவர்கள் கருதடது வெளியிட்டுள்ளார்.

இதே நேரம் வெறும் பாடசாலை மண்டபங்களில் தஞ்சம் புகுந்திருக்கும் பாதிக்கப்பட்டோர் வீசிவரும் கடும் குளிர்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பெரும் அவதியுறுகின்றனர். இன்னும் சீரான முறையில் எதுவித உதவியும் கிடைக்கப் பெறாத நிலையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

இருந்த போதும் கிழக்கு மாகணத்துக்கு என ஒதுக்கப்பட்ட 49 மில்லியன் ரூபாவில் அதிகமான தொகை மட்டக்களப்புக்கே ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நிவாரணந்களை முன்னெடுப்பதற்கென முப்படையினரையும் அரசு பணித்திருக்கிறது. இதற்க்காக 28>000 படையினர் இலங்கையின் வேறு பாகங்களில் இருந்து கழக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையை அரச தகவல் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்> இது பாரபட்சமற்ற நிவாரண விநியோகத்திற்கு பேருதவியாய் இருக்கும் என நம்பப்படுகிறது.

இறுதி அறிக்கைப்படி 18 உயிர்கள் நாடு முழுதும் பறிக்கப்பட்டுள்ளதுடன் 49 பேர் காயப்பட்டுள்ளனர் என தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விசேட மருத்தவக் குழுக்கள் இம்மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் கடற்படையின் உதவியுடன் மாவட்த்தின் சகல பாகங்களுக்கும் நடமாடும் சேவையை செய்ய பணிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சின் மேலதிகச் செயலாளர் வைத்தியர் மகிபால குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு செய்திகள் வந்து சேர்கின்றதே தவிர இன்னும் உடனடி உதவிகள் தாமதமாகி வருவதனையே காணக்கூடியதாக இருக்கின்றது.

12 January 2011

வெள்ளத்தை கடக்க முற்ப்பட்ட சிறுவன் மண்டடூரில் மரணம்.


கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களே அனேகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, அதில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட லெட்சக்கணக்கான பொதுமக்கள், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று காரைத்தீவு பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்டுச் சொல்லப்போனால் சற்று முன்னுர்வரை 48 மணித்தியாலங்களாக கிழக்கில் பெய்துவரும் அடைமழையினால் மரங்களிலும் மலைகளிலும் பாதுகாப்புடன் இருந்த 31 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.அடை மழையினால் மகா ஓயா ஆறு திடீரென பெருக்கெடுத்தமையால் தத்தம் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் டெம்பிட்டிய பிரதேச மலைகளிலும் மரங்களிலும் ஏறிக்கொண்டனர். எனினும் அடைமழையினால் வெள்ளம் தீவிரமடையவே மகா ஓயா பிரதேச செயலக அதிகாரிகள் பொலிஸார் ஆகியோர் இணைந்து விமானப் படையின் விசேட ஹெலிக்கொப்டர்கள் மூலம் மீட்டெடுத்தனர். இந்த இடத்தில் விமானப்படையினுரின் அர்ப்பணிப்பு பாராட்டுதற்குரியதே.
இன்னும் மண்டூர் தம்பலாவத்தை பாலத்தை கடக்க முற்பட்ட 17 வயது சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் வௌ்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான் என அம்பாறை மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிறுவனின் சடலம் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை.இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் வௌ்ளத்தினால் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பரிதாபகரமான இளப்புகளைத் தவிர்க்க பாதுகாப்பான முறையில் இம்மக்கள் வெளியேற பொநறுப்புவாய்ந்த அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்களோ தெரியவில்லை. மக்கள் அனைவரும் அணை திரண்டுவரும் வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக வர தயவுசெய்து சதுர உதவியாவது செய்ய வாருங்கள்...

மட்டக்களப்பின் வெள்ளத்தில் சிறுமியின் பரிதாப மரணம்


இடம்பெயுர்வுக்கு அப்பால் நாளாந்தம் புரிதாபகரமாக உயிர் இழக்கும் நிலமையை மோசமான வெள்ளம் ஏற்ப்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு தொப்பிகல பகுதியை அண்மித்த ஈராளக்குளம் வேரம் பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி 11 வயதுடைய சிறுமியொருவர் மரணமடைந்துள்ளார்.வேலாயுதம் நந்தினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர். இச்சிறுமியின் சகோதரனான அனுஜன் மலசல கூடக் குழியொன்றில் விழுந்ததையடுத்து அவரைக் காப்பாற்ற முயற்சி செய்த வேளையில் இச்சிறுமி மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சிறுமியின் தாய் வீட்டுப்பாவனைப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சித்தாண்டிப் பிரதேசத்திற்கு வந்துள்ளார். இவர் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நேரத்தில் தொண்டுர்களின் உதவி இவ்வாறான நலிவுற்ற மக்களைக் காப்பாற்ற அவசியம் தேவை.

வெள்ளத்தில் அடித்துப்போன கோடைமேட்டுக் கிராமம்.

அழகிய குட்டித்தீவாய், ஆறுகளும், வயல்களும் மற்றும் குளங்களும் சூழ மண்வாசைன கமழ்ந்த கோடை மேட்டுக் குட்டித்தீவு வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்துச் செல்லப்பட்டிருப்பது சொல்லொண்ணாத் துயரமாகும். இக் குக்கிராமம் எருவிலின் தலை போன்று அதன் மேற்கே சுமார் ஒன்ரரை கிலோ மீற்றருக்கு அப்பால் வத்தளைக் கிழங்கிற்கே பெயரெடுத்த விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் நிறைந்த, அனர்த்தத்தில் நலிவுறக்கூடிய கிராமமாகும்.

மட்டக்களப்பினை சொல்லொணாத் துயரில் ஆழ்த்திவரும் பேய் மழை, பெரு வெள்ளம், பெருங்காற்றுக்கு மத்தியில் சிறுவர்கள் குழந்தைகள், வயோதிபர்கள் என 60 குடும்பங்களைச் சேர்ந்த 300 க்கு மேற்ப்பட்ட மக்கள் யாருடைய உதவியும் இன்றி அம்மக்களது உதவியுடன் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் வழி தெரியாத வெள்ளத்தினிலும் இவர்களை கொண்டு சேர்த்துள்ளனர்.

இவர்கள் தற்போது எருவில் மகாவித்தியாலயத்தினில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு இருக்கும் மாடிக்கட்டிடங்கள் நிரம்பி வழிவதனால் இவர்கள் கீழுள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு படிப்படியாக வெள்ளம் உள்நுழைவதனால் அவர்களின் நிலை அந்தோ பரிதாபம். இவர்களில் உள்ள சிறுவர்கள் வயோதிபர்கள் நோய்வாய்ப்பட்டவுர்களாக சொல்லொண்ணாத் துயருறுகின்றனர். 

இவர்களை பார்வையிட வைத்திய நடமாடும் சோவைகளோ, உணவு கொடுப்பதற்க்கான ஏற்ப்பாடுகளோ செய்யப்படவில்லை என மக்கள் அழுதுகொண்டு முறையிடுகின்றனர். இந்நிலையில் இவர்களது உடனடித்தேவையான பாய், உடு துணிகள், வெற்சீற், குடிநீர், அரிக்கன் விளக்கு, நுளம்பு வலை என்பன வளங்கப்படவில்லை அத்துடன் குறிப்பாக சிறுவர்களுக்கான பால்மா இவர்களுக்கு அவசிய தேவையாய் உள்ளது. இம்மக்கள் ஒரு பாதிக்கப்படாத மக்கள் போன்று புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஐனாதிபதி கூறிய ஒரு நல்ல விடயம் ஞாபகத்துக்கு வருகிறது இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகள் தங்கள் குடும்பம்போல் அல்லும் பகலும் சுற்று நிருபங்களுக்கு அப்பால் அவர்களுக்கு உதவவேண்டும் என்று குறிப்பிட்டது முற்றிலும் உன்மை. சுற்று நிருபத்துக்குள் உதவியிருப்பினும் இம்மக்களது துன்பம் போக்கியிருக்கலாம். ஆனால் இத்தனை கஸ்டத்தினையும் பார்த்துக்கொண்டு இருக்கும் பொறுப்பற்ற அதிகாரிகள் இம்மக்களுக்கு தேவைதானா?

அரசு அரசசார்பற்ற நிறுவனங்கள் பட்டவர்த்தனமாக வழங்கிவருகின்ற நிதி, நிவாரண உதவி ஏன் உன்மையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை?

மக்களுக்குத்தான் அனர்த்தம் இந்த அதிகாரிகள் இப்படி சுருண்டு கிடப்பதற்க்கா இப்பதவிகளை சுமக்கிறார்கள்?

வெட்கக்கேடாகும் இந்த பொறுப்பற்ற அதிகாரிகள் உடனடியாக இம்மக்களுக்கு மனிதாவிமானமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.... 

தகவல்: K.பகிரதன்.

மட்டக்களப்பில் வெள்ள அபாயம் அதிகரிக்கிறது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அபாயம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டு வருகின்றது. 12.01.2011 இன் மழைவீழ்சி 113.09 மில்லி மீற்றர் எனப் பதிவாகியுள்ளது. மறுபுறத்தில் போரதீவுப்பற்று, மன்முனை தென் எருவில்பற்று, ஏறாவூர்ப்பற்று என்பன மக்கள் வீடுகளில் தங்கி இருக்கொணாத அளவு வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

இங்கு கிட்டத்தட்ட 533,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 122,000 பேர் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும். அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. இங்கு அகப்பட்டிருக்கும் பணியில் ஈடுபட்டுவந்த விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலமான மீட்ப்புப் பணி மற்றும் உணவு விநியோகம் என்பன மோசமான காலநிலை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இம்மக்களை நேரடியாக பார்வையிட வந்த ஐனாதிபதி மகிந்த அவர்களால்கூட வரமுடியாத சூழலை இந்த சீரற்ற காலநிலை ஏற்ப்படுத்தியுள்ளது. அவர் பொலநறுவை மாவட்டத்தில் சென்று பார்வையிட்டுத்திரும்பியதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதற்க்கப்பால் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அவர்கள் தற்பொழுது மட்டக்களப்பு மக்களுடன் நேரடியாக நின்று அவர்களின் அவசர தேவைகளை குசனம் விசாரிப்பதாகவும், அவர்கனது தேவைகளை இயன்ற அளவு பூர்த்தி செய்து வருவதாகவும், அவர் பரோபகாரிகளிடம் இருந்து இம்மக்களுக்கு உதவ வருமாறு வேண்டுகோளும் விடுத்திருந்தார். அவர் குமாரவேலியர் கிராமத்து மக்களுடன் இருந்து அவர்களின் தேவைகளை உணர்ந்து உதவி வழங்கி வருவதாகவும் அறியக்கூடியதாய் உள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவி வரும் வெள்ள அபாய வாதந்தி பற்றி ஒரு தகவலை மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் திரு. சீனித்தம்பி. மோகனராசா அவர்கள் தருகையில், மட்டக்களப்பு நீர் தாங்கு குளங்கள் அனைத்தும் அனைத்து உத்தியோகஸ்த்தர்களின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், தற்போதய நிலவரங்களின்படி, அச்சப்பட வேண்டியதில்லை என்றும். அவ்வாறு ஏதும் அபாயம் ஏற்ப்படும் சந்தர்ப்பங்களில் அது முன்னராகவே மக்களுக்கு ஊடகங்கழூடாக அறியத்தரப்படும் என்றும் கூறியுள்ளார். எது எப்படியாயினும் மக்கள் இவற்றுக்கு முன்னாயித்தமாக இருப்பது உசிதமாகும்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என வழங்கப்பட்டு வந்த உலர் உணவுகளை மீண்டும் வளங்குவதற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகளின் உணவுத்திட்டத்திதுர் தேவையான உணவினை வழங்குவதற்கும், அதுபோன்று UNICEF உம் இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கது.

இ களுவாஞ்சிகுடியினையும், படுவான்கரையையும் இணைக்கும் பட்டிருப்பு பாலத்திற்க்கப்பால் மக்கள் வரமுடியாமல் வெள்ளம் பாய்ந்து செல்வதனால் அம்மக்கள் மிகவும் அந்நியப்படுத்தப்பட்டு எதுவித உதவிகளையும் பெறமுடியாத நிற்க்கதிக்குள்ளாகி உள்ளனர். ஆவர்களது வீடுகளெல்லாம் நான்கு அடிகளுக்கு மேல் வெள்ளம் மேவியுள்ளது. இந்நிலையில் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் அவர்களை மீட்டெடுக்கும் பணியில் படகுச் சேவை வளங்கி வருவதனையும் அறியத்தருகிறேன்.

என்னதான் பேசினாலும் ஐந்து நாட்க்களாக தொடந்து பெய்யெனப் பெய்யும் மழை காரணமாக இலங்கையில் 19 உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில், மட்டக்களப்பில் ஓந்தாச்சிமடக் கிராமத்தில் ஒரு இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் மத்தியில் இந்த மக்களின் அவலங்களை எல்லாம் நாங்கள் தெரிவித்தும் உடனடி உதவி வழங்க முடியாத அளவுக்கு, வெள்ளம் வானைப்பிளப்பதனைப் போல் பிரதான பாதைகளையெல்லாம் ஆங்காங்கே உடைத்துள்ளதால், நிவாரண உதவிகளை செய்யும் உள்ளம் இருந்தும் அவர்களால் வழங்க முடியாத துரதிஸ்டம் எம்மக்களுக்கு நேர்ந்துள்ளது.

இதற்க்கப்பால் அம்பாறையில் பாண்டிருப்பு, கல்முனை என்பன முற்றாக நீரில் மூழ்கி வழிவதனையும் காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் கிட்டங்கி பாலம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதனால் அதற்கு அப்பால் வுhழுகின்ற நாவிதன்வெளிப் பிரதேச மக்களும் பாதிப்படைந்துள்ளது.

இதற்குமேல் ஆண்டவன்தான் இவர்களை காப்பாற்றவேண்டும். ஆனாலும் பரோபகாரிகளே தயவு செய்து இம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவாருங்கள் என அழைக்கிறோம்.

11 January 2011

தை பிறந்தால் வழி பிறக்குமா????

மாரி மழை
காட்டு வெள்ளம்,
பட்டினிச்சாவு,
இடி,
மின்னல்..
இவைகள் மட்டும்..
எங்களை சொந்தம்.
கொண்டாட...
சூரியனே- நீ
எங்கு சென்றாய்..

10 January 2011

வெளுத்துக்கட்டும் வெள்ளத்தில் குடிபெயர்ந்திருக்கும் குடியிருப்பு மக்கள்....

 யாரைக்கேட்டாலும் மட்டக்களப்பு வெள்ளத்தை சொல்லும் அளவுக்கு மிகவும் மோசமாக அம்மக்களது வாழ்கை, வாழ்வாதாரம், போக்குவரத்து, மருத்துவம், கல்வி மற்றும் இன்னோரன்ன துறைகளை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது கண்கூடு. நாடு பூராகவும் 16 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது, கிழக்கில் 800,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மட்டக்களப்பு அரசாங்கச் செயலாளரின் அறிக்கைப் பிரகாரம், மட்டக்களப்பின் பிரதேச செயலகங்களில் அதிக பாதிப்பினை எதிர்நோக்கியுள்ள மன்முனைத் தென் எருவில்பற்றும் ஒன்றாகும். 

 கூடுதலாக கரையோரக் கிராமங்களை நிருவகிக்கின்ற இப்பிரதேச செயலகமானது ஒரு பக்கம் ஆற்றுப்பரப்பினையும் மறுபுறம் வங்காள விரிகுடாவினையும் கொண்டமைந்த அழகான அதே நோரம் ஆபத்தான கிராமங்களை அநேகமாக் கொண்டுள்ளது. இங்கு கல்முனை மட்டக்களப்பு பாதை ஊடறுக்கும் இடத்தில் தேத்தாத்தீவின் தெற்கு கிராம சேவர் பிரிவினுள் அமைந்திருக்கும் ஒரு அழகிய குட்டித்தீவே குடியிருப்பாகும்.

குடியிருப்புக் கிராம மக்களும் அனர்த்தங்களும்...
 இது தேத்தாத்தீவுக்கு மேற்குப்புறமாக மட்டு வாவிக்கு அருகில் அமைந்துள்ளது. இதனைச் சூழவும் வயலும் குளங்களும் நாலாபுறமும் அமைந்துள்ளது. இங்குவாழுகின்ற அனைத்து மக்ககும் 2 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள மட்/தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தினுள் தஞ்சமடைந்துள்ளனர். 
இங்கு 33 குடும்பங்கள் மாத்திரம் வசித்துவருகின்றனர். இவர்களது பிரதான ஜீவனோபாயம் கூலித்தொழிலாகும், அத்துடன் ஆடு, மாடு வளர்த்தல், மீன்பிடித் தொழில் என்பனவற்றினையும் மேற்கொள்ளுகின்றனர். இங்குள்ள பிள்ளைகள் பாடசாலைகளுக்கு வருவதற்கோ, அவர்கள் தொழில் செய்யப் போவதற்கோ 2 கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்லவேண்டியிருக்கிறதும் குறிப்பிடத்தக்கது. 

இங்கு வெள்ளம் தாக்குவதற்க்கான பிரதான காரணம், இந்த குட்டித்தீவை சூழவும் உள்ள தாழ்நிலப்பரப்பான வயல் நிலங்களும் மற்றும், பெரிய குளம், வட்டிக்குளம், களுதாவளைக் குளம் போன்ற குளங்களும்தான். இருப்பினும் இம்மக்கள் மிக உயர்ந்த மேட்டுப் பகுதிகளில்தான் வாழ்ந்து வந்தனர். 1956 இல் வந்த வெள்ளம் தவிர 2004 இன் வெள்ளம் போன்ற வெள்ளப் பெருக்குளளில் இடம் பெயர்ந்து, தற்போது 2011 இன் ஆரம்பமே சோகமான வாழ்கையினை அவர்களுக்கு அளித்திருக்கின்றது.
                                         (இது நீரினால் மூடப்பட்டிருக்கும் குடியிருப்புப் பிரதான பாதை)
எதிர்கோக்கும் பிரச்சினைகள்.
தங்கவைக்கப்பட்ட மக்களின் தரவுகள் இப்போது சேமிக்கப்பட்டு வருகின்றது அதன் அடிப்படையில், தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தினுள் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்கள், தங்களது ஆடைகள் மற்றும் பத்திரங்களைத்தவிர ஒன்றும் கொண்டுவராத அளவுக்கு அவசர அவசரமாக இடம் பெயர்ந்துள்ளனர். 

மூன்று அடி உயரம் தண்ணீர் மேவிய நிலையில், 137 பேர் 33 குடும்பத்தினில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் தங்கள் தொழிலை முற்றாக இழந்துள்ளனர், அத்ததுடன் குடிநீர்ப்பிரச்சினைகளை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். இவர்கள் அங்கு வெள்ளத்துக்கு அப்பால் முதலை, பாம்பு போன்றனவற்றின் தொல்லைகளுக்கு மத்தியில் இவர்கள் தஞ்சமடைந்துள்ளனர். 

முற்றாக 35 வீடுகளை வெள்ளம் ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக இங்கு தாங்கொணாத அவதிகளை 42 மேற்ப்பட்ட சிறுவர்களும் 8பேர் அளவில் வயது வந்தவர்களும் எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் வலது குறைந்தவர்களும் காயப்பட்டவர்களும் அடங்கலாக நலிவுற்றவர்களாக மாத்திரம் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுதவிர தேத்தாத்தீவின் அனைத்துப் பாகங்களில் இருந்தம் இன்னும் மக்கள் அல்லோல கல்லோலப்பட்டவர்களாக இங்கு இடம் பெயுர்ந்தவண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதித்தகவலின்படி இன்னும் 31 குடுப்பங்கள் மேலதிகமாக தேத்தாத்தீவின் பல பாகங்களில் இருந்தும் இடம்பெயுர்ந்து தஞ்சமடைந்துள்ளனுர்.

கருனை காட்டும் உள்ளங்கள்.
இத்தனைக்கும் முழுதாக மொத்த தேத்தாத்தீவு மக்களும் பாதிப்படைந்துள்ள வேளையிலும் அவர்கள் மக்களுக்கு உதவி செய்யும் தொண்டான்மை பாராட்டாமல் இருக்க முடியாது. இவர்கள் இவர்களுக்கு உணவு சமைத்தல், தகவல்களைச் சேமித்தல், மற்றும் பொருட்களைவ ளங்குதல் என்பனபோன்ற இன்னோரன்ன வேலைகளையும் செய்துகொண்டிருக்கின்றனர்.
                                                                  (ஊர்தொண்டர்கள் உதவி புரிவதில்)
இவர்களின் பரிதாவ நிலையை அறிந்த எமது பாரளுமன்ற உறுப்பினர் செல்வராசா(நவம்) அவர்கள் இந்த மக்ககைச்சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறுவதை இங்கு காணலாம்.
                                                     (பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுடன்)
அதுபோன்று மன்முனை தென் எருவில்ப்பற்று பிரதேச செயலாளர் இதனைக் கேள்வியுற்று ஓடோடிவந்து பார்வையிடுவதுடன் அவர்களுக்கு சமைத்த உணவினை வாழுங் கலைப்பயிற்சி நிறுவனத்தினரின் உதவியுடன் சட்டத்தரணி சிவநாதன் தலைமையில் வழங்குவதையும் காணலாம். 
                                           (பிரதேச செயலாளர் அவர்கள் சமைத்த உணவு வளங்குகிறார்)
ஓயாத அனர்த்தத்தினை ஓயவைப்பார் யாருளரோ!
தவிரவும் இவர்களுக்கு பாய், வெற்சிற், பாத்திர தளபாடங்கள், மருத்துவ வசதிகள் என்னன வழங்கப்படவில்லை.. அத்துடன் அடிக்கடி மின்சாரம் இல்லாமல் போவதனால் மண்ணெண்னை லாம்புகள் இங்கு தேவையாக இருக்கின்றது, அத்துடன் நுளம்புவலைகள், சுத்தமான குடி நீர் என்பனவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இவர்களின் பரிதாப நிலை சொல்லில் அடக்கவொணாது. அதற்கு மேலாக பாடசாலையை சூழ நீர்நிறைந்த வண்ணம் உள்ளதனால் அங்கு பெண்கள் சிறுவர்கள் வயோதிபர்கள் என மலசலம் களித்தல், குடிநீர் அருந்துதல் என்பனவற்றை பெற சிரமப்படுகின்றனர். இன்னும் சில மணிநேரத்தினுள் பாடசாலையினுள் வெள்ளம் பரவும் அபாயம் இருப்பதனால் இவர்களின் துன்பம் இரட்டிப்பாகும் அபாயமும் இருக்கின்றது.

நான் இக்கட்டுரை எழுதும் வரை என் வீட்டில் ஒரு அடிவரை தண்ணீர் உள்ளது, அத்துடன் மின் வெட்டும் இடம்பெறுவதனால் இனிமேல் மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம். எனவே இவர்களின் துன்பங்களை துடைக்க உதவும் நல்ல உள்ளங்கள் முன்வரலாம்....

வெள்ளத்து அபாயத்தை மெள்ளத்தவிர்த்திடுவோம்.














கைகோர்த்து ஒற்றுமயாய்
காலத்தை வென்றிட நாம்
வையத்தில் ஒன்றுபட்டு
செய்திடுவோம் சிரமதானம்..

வெள்ளத்து நீர் தேங்கும்
வெற்று களிவுகளை
பள்ளத்தில் போட்டிடுவோம்
பரவும் நோய் தவிர்ப்போம்..

வடிகானில் களிவுகளை
வெட்டி எறிந்திடுவோம்
மண்ணரித்துச் செல்லும்
வழியில் மரம் வளர்ப்போம்.

பொன்னான பூமி செய்ய
வேற்றுமையை முடிய வைப்போம்.
வெள்ளத்தை வடியவைப்போம்,