எம்மைப் பொறுத்தளவில் உழவுத் தொழில் அல்லது விவசாயம்; என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
16 June 2017
நம்புங்கள் முருகன் நல்லவன் .
நான் சிறு வயதில் அப்பாவுடன் மாரிப்போக வேளாண்மை செய்வதன் நிமித்தம், ஆலயடி முன்மாாிக்குள்ள உழவுவதற்காக கலப்பையை கொழுவி இரண்டு வெள்ளை மாடுகளை விரட்டிக்கொண்டு மதிரங்கேட்டியை மரத்தில் வெட்டி எடுத்து, காலைவேளையில் கட்டோரமாக வில்லுக்குளம் நோக்கி நடந்த நாட்கள் ஞாபகம் வருது.
06 June 2017
நதியாக நான் மாறவேண்டும்
நதியாக நான் மாறவேண்டும்-அதில்
சுதியோடு மீன்பாட அலை பாய வேண்டும்
சுதியோடு மீன்பாட அலை பாய வேண்டும்
கதிராக நான் மாற வேண்டும்-களத்தில்
கவிவந்து செவியோரம் தேன்பாய வேண்டும்
கவிவந்து செவியோரம் தேன்பாய வேண்டும்
கடலாக நான் மாற வேண்டும்-மறவர்
துயில்கொள்ள மடி தந்து தாலாட்ட வேண்டும்..
துயில்கொள்ள மடி தந்து தாலாட்ட வேண்டும்..
04 June 2017
அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- தொடர் 02
என்னதான் இருந்தாலும் '''பழையன கழிதலும், பதியன புகுதலும் வழுவல.'' என்கிறது தொல்காப்பியச் சூத்திரம் சொல்லுவதுபோல் காலத்திற்கும், தேவைக்கும், சூழலுக்கும் பொருந்தாதவற்றை தவிர்த்துவிடுவதும், உகந்தவற்றை புதிதாக உள்வாங்கிக் கொள்வதும் தவறல்ல. ஆக இது பண்பாட்டிற்கும் பொருந்தும். இன்னுமொருபடி சொல்வோமானால் மாற்றம் என்ற சொல் வேண்டுமானால் மாறாமல் இருக்கலாம். ஆனால் மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். என்றார் கால்மாக்ஸ்.
இதைத்தான் மானிட இயங்கியல் என்கிறார்கள். பண்பாடும் இவ் மனிதஇயங்கியல் வயப்பட்டதுவே. இன்றைய காலத்தின் தொழில் நுட்பவளர்ச்சி, உலகமயமாக்கம், மனிதத் தேவைகள், அரசியல், பொருளாதார சமூகவியல் நிலைகள். பண்பாட்டியல் கூறுகளில் மாற்றங்களையும், மருவல்களையும் ஏற்படுத்துவது தவிர்க்கமுடியாதது.
மட்டக்களப்பின் வரலாற்றுப் புத்தகத்தில் புரட்டிப் படிக்கவேண்டிய ஒருவா்.
நெடு நாள் ஆசை ஒன்று, அது மட்டக்களப்பின் முது பெரும் அரசியல், இலக்கிய, கலை ஆர்வமிக்க ஒரு பேராளன் ஒருவரை பார்க்க வேண்டும் என்றுதான். அது தானாகவே எனக்கு கனிந்து வந்தது ஒரு நாள். அவரின் வாழ்க்கை பற்றி அறிய ஆசைப்பட்டேன், நேரில் சந்தித்தேன், நிறையவே பகிர்ந்து கொண்டார், அது வேறு யாருமில்லை சொல்லின் செல்வர், நாவல்லவர் செல்லையா இராசதுரை அவர்கள் தான்.
அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- தொடர் 01
'நாங்கெல்லாம் அந்தக்காலத்தில ஒரு கிணற நாலுபேரு சேந்து தோண்டி முடிப்பம், பக்கத்தில ஒரு கள்ளுக் கொடம் இருக்கும், மரவள்ளிக் கிழங்கு அவியல், கச்சான், கடல இதெல்லாம் வந்தவண்ணம் இருக்கும், கிணறும் முடிய கள்ளுக் கொடமும் முடியும்' என வீர தீரமாய் அப்போ வேலை செய்தாங்களாம் இப்படி ஒருவர் சொன்னார்.
சனத்தொகை குறைந்த காலம், இயந்திர மயமாக்கல் இல்லாதிருந்த காலம் மனித நாகரிகம் வளர்ச்சியின் ஆரம்பத்தில் மனிதாபிமானத்தை மாத்திரம் கொண்டிருந்த காலம், இவன் என்ன செய்யுறான், அவள் என்ன செய்யிறாள் என யாரும் நோட்டமிட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அன்று சிசிரிவி கமறா, கூகுள் மப், ஸ்மாட்போன் என்பன வந்திருக்கவில்லை, ஆனால் இன்று மாறிப்போச்சி உலகமே ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வகையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
02 June 2017
சிலப்பதிகார பாட்டுடைத் தலைவிக்கு மட்டக்களிப்பில் மண்மணக்கும் சடங்கு..
கோடை மழை பெய்ய வேண்டும், கொடும்பாவம் அகல வேண்டும், நாடிவரும் அடியவர்கள் துன்ப துயரம் அறவேண்டும். பாடி ஓடி ஆடி வரும் அடியவர்கள் தேடி தேடி கண்ட பொருள், உன்மை, அறம், ஒழுக்கம் என பல உன்மைகளை இந்த சடங்கு விழாக்களுக்குள் புதைத்து மக்களை ஒன்றுபடுத்தி, சகோதரத்துவம், ஒத்தாசை, விட்டுக்கொடுப்பு, விருந்தோம்பல், கொல்லாமை போன்ற நல்ல பண்புகளை புகட்டும் இந்த பண்பாட்டு மரபுகள் அன்று மட்டமல்ல இன்றும் நின்று நிலைப்பதை மீன் பாடும் தேனாட்டில் எங்கும் காணலாம்.
01 June 2017
மட்டக்களப்பு தமிழ் எல்லைக் கிராமங்களை எடுத்தேத்த என்ன வழி செய்கிறார்கள்!!
