உழைப்பே உயர்வையும், மன நிறைவையும் தரும் - ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன், தளர்வறியா உழைப்பின் மூலம், நம் பிரதேசத்தின்; பெருமையை உயர்த்தியவர், வைத்தியர், சமுக அக்கறையாளர், பேச்சாளர், கவிஞ்ஞர், சிந்தனையாளர், நிருவாகி, எழுத்தாளர், ஒருங்கிணைப்பாளர், நல்ல சாரதி, பாடகர், ஆற்றுப்படுத்துனர் அதற்கும் மேல் ஒரு அரசியலாளர் என பல தொழில் தகமைகளை தன்னகத்தே கொண்ட ஒருவரைப்பற்றி சொல்ல நினைக்கின்றேன். இவரை வைத்திய அத்தியட்சகர் எனத்தான் பலருக்கும் தெரியும் ஆனால் தனது கடின உழைப்பினால் அது தவிர்ந்த ஏனைய திறன்களை தன்னகத்தே வளர்த்துக்கொண்ட ஒரு சாதனையாளன்தான் கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டிருக்கும் வைத்தியர் கு.சுகுணன் எனில் மிகையில்லை.






