ADS 468x60

11 January 2020

அபிவிருத்தியை நிலைகுலைக்கும் வேலையின்மை அதிகரிப்பு

இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னான பொருளாதார இடையூறில் வேலையின்மை வீதமானது 2019 ஆம் ஆண்டில் 5.1மூ ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரித்துவரும் வேலையின்மை நிலைதான் கடந்தவருட ஊதிய வளர்ச்சியின் மந்த நிலைக்கு முக்கிய பங்காக விளங்குகின்றது. 2019 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதமளவில் பணவீக்கமானது குறிப்பிடத்தக்களவு ஊதிய வளர்ச்சியை கட்டுப்படுத்தி நுவர்வோர் செலவு சக்தியை குறைத்து வருகின்ற ஒரு நிலையைக் காட்டி நிற்கின்றது.

01 January 2020

வெள்ளிச்சரத்தின் ஆங்கில புதுவருட நல்வாழ்துகள்!

அனைத்து வெள்ளிச்சர வாசக நெஞ்சங்களுக்கும் எனது அன்பு நிறைந்த ஆங்கில புதுவருட நல்வாழ்துகளை தெரிவிப்பதனில் மனநிறைவடைகின்றேன். நாம் வாசிப்பதனையும் எழுதுவதனையும் இலகுபடுத்த பல தொழில் நுட்ப வசதிகளை உலகத்தில் தருவித்துக்கொண்டே இருக்கின்றனர். இதனை எம்போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளவர்களட அரிதாகவே பயன்படுத்தி வருவது அதிகரிக்கப்படவேண்டும். எமது மாணவர்கள், எழுத்தாளர்கள் தமது ஆக்கபூர்வமான படைப்புக்களை படைக்கவென இலவச தளங்கள் அதிகம் உள்ளன. அவற்றை நாமும் பயன்படுத்தி பிறரினையும் பயன்படுத்த ஊக்கப்படுத்தி புதிய ஆண்டில் எமது சமுகத்தின் அத்தனை சிக்கல்களையும், பிரச்சினைகளையும் அடையாளங் கண்டு அவற்றிற்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதனூடாக நமது சமுகத்தினை வளர்சிபெறச் செய்ய உறுதிகொள்வோம்.

29 December 2019

பொறுப்புக் கூறவேண்டிய அரசியல்வாதிகளும் பொறுமையிழக்கும் மட்டு மக்களும்.

எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலுக்காக எமது நாடு தயாராகிக்கொண்டிருக்கின்றது. அதே நேரம் இந்த நாட்டினை கொண்டு நடாத்த பதிய ஜனாதிபதி தெரிவாகி விட்டார். அவர் ஏற்கனவே செயலில் இறங்கி சேவை செய்ய ஆரம்பித்து விட்டார்.

எமது மக்களுக்கு சேவை செய்ய என ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்ய கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்களை செலவு செய்து உள்ளோம். அத்தனை ரூபாக்களும் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் உழைப்பாளரின் வரிப்பணத்தில் செலவிடப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலுக்காக கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. அந்தப் பணமும் வியர்வை சிந்தி, இரத்தத்தினை சாறாக்கி இராப்பகலாக செய்த வேலையில் கிடைத்த வேதனப் பணம் என்பதை அதைகொடுத்த மக்களே மறந்துவிடுவதுதான் வேதனைக்குரியது. 

22 December 2019

காலநிலைக்கு முகம்கொடுக்கும் அபிவிருத்தி இல்லாமையே அழிவுக்குக் காரணம்.

இந்நாட்களில் பெய்துவரும் அடைமழையானது மக்களுக்கும், பயணிகளுக்கு மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறிவிட்டது. மாலை நேரங்களில் திடீரென பெய்யும் இம்மழையினால் வீதிகளில் வெள்ளம் ஏற்படுவதோடு நீண்ட நேர போக்குவரத்து இடையூறையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறு தடைப்பட்ட வீதிகளானது பயணிகளுக்கு தங்களுடைய வீடுகளுக்கான வழியை கண்டுபிடிப்பதே சாத்தியமற்றதாக மாற்றுகிறது. இலங்கையின் மழைவீழ்ச்சி ஒழுங்கானது மாற்றமடைவதோடு காலநிலையால் பாதிப்படையும் நாடுகளில் ஒன்றாக இலங்கையும் கருதப்பட்டு வருகின்றமயால் இன்று நாம் காலநிலை நெகிழ்திறனுடன் கூடிய உள்கட்டமைப்பு அமைப்பு பற்றிய தீர்வுகளை எடுக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

21 December 2019

ஒற்றுமை வளர்க்கும் கி.ப.க நண்பர்களின் ஒன்றுகூடல்

ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி! 
-ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்

எனும் நல்வாக்கியத்துடன், இன்றய நாளில் நாம் பல விடயங்களுக்காக ஒன்றுகூடவேண்டியிருக்கிறது. 

நமது வாழ்க்கை வட்டத்தில் ஒன்று சேர்ந்து பல்கலைக்கழகத்தில் கற்று இன்று ஒன்றரை தசாப்தம் கடந்து பல அனுபவம், கல்வி, திறன் மேம்பாடுடையவர்களாக ஒன்றுகூடியிருக்கின்றோம். இந்த ஒன்றுகூடல் எம்மை பனியிலும், வெயிலிலும், காட்டிலும், மேட்டிலும் கஷ்ட்டப்பட்டு உழைத்த வரிப்பணத்தில் நாம் இன்று இலவசமாகப் பயின்றவர்கள்.  இன்று நாம் ஊதியத்துக்காக மக்கள் பணியென செய்யும் வேலை தவிர, எமது சமுகத்துக்கு பிரதியுபகாரம் இன்றி எதை நாம் செய்துள்ளோம்? எனச் சிந்திக்க வேண்டிய உன்னத தருணத்தில் சிந்திக்கத் தூண்டியுள்ளது.

05 December 2019

பொருளாதார முன்னகர்வில் புதிய அரசிக்கு இருக்கவேண்டிய கருசனை என்ன?

புதிய ஜனாதிபதியும் அமைச்சரவையும் அவர்களுக்கு முன் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் , ஏனெனில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் வரையில் அவர்கள் ஒரு சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுகின்றது . அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று, இலங்கை மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வேலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு ILO (ச.தொ.அ) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, வளர்ச்சியடையாத மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் மொத்த வேலைவாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு சிறிய பொருளாதார அலகுகளால் வழங்கப்படுகிறது, அதாவது கொள்கை வகுப்பாளர்கள் இந்த அலகுகளை பொருளாதாரத்தின் மையப் பகுதியாகவும், சமூக மேம்பாட்டு உத்திகளாகவும் கருத வேண்டும்.

24 November 2019

கி.ப.க.பழைய மாணவர்கள் -டெங்கு நோய் குறைப்பு விழிப்புணர்வு

இன்று இலங்கை முழுவதும் ஆபத்தான பேசுபொருளாலாக இருப்பது ஆட்கொல்லி நோயாக அடையாளங்காணப்பட்ட 'டெங்கு நோய் தொற்று' பற்றிய பேச்சாகும். 2018 சென்ற வருடத்தின் 12 மாதங்களிலும்; சேர்த்து 51,659 சந்தேகப்படும் டெங்கு நோய்களும்,  தீவு பூராகவுமுள்ள எல்லா நோய்பரவுகை கட்டுப்பாட்டியல் அலகிற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடத்தின் நொவம்பர் மாதத்தில் மாத்திரம் 73601 சந்தேகப்படும் டெங்கு நோயாளிகள் அடையாளங் காணப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆபத்தாக பதிவாகியுள்ளது.

இந்த ஆபத்து மட்டக்களப்பு மற்று கிழக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. பருவகால மழை ஆரம்பித்துள்ள இந்த வேளையில் இதன் பரவல் தீவிரமடைந்து வருகின்றது என அறிக்கை தெரிவிக்கின்றது. 

18 November 2019

புதிய ஜனாதிபதியிடம் மக்களின் நியாயமான வேண்டுதல்!

நாம் இன்று ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து 80 விகித வாக்களிப்பை நாட்டில் வழங்கி ஒரு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த பெருமைக்குரிய குடிமக்களாக இருக்கின்றோம். எனவே புதிதாக பதவியேறறிருக்கும் இருக்கும் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களே உங்கள் செயற்பாடுகளை நாம் நம்புகின்றோம். புதிதாக உங்களை வாழ்த்துகின்றோம். இன்று ஜனாதிபதியாவதற்கு மக்கள் தமது கடமையையை நிறைவேற்றியுள்ள நிலையில் மக்களின் வேண்டுதலை ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றும் நேரமிது. பாமர மக்கள் அவரிடம் எதிர்பார்த்து நிற்கும் வேண்டுதல்களை அவர்களில் ஒருத்தன் என்றவகையில் அவற்றை முன்னுரிமைப்படுத்தி இங்கு வேண்டுதல்களாக முன்வைத்துள்ளேன்.