ஒரு புதிய கோவிட்19 சந்தேகநபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு, அமைதியாக இருந்த ஞாயிற்றுக் கிழமையன்று திடுக்கிடும் செய்தி ஒன்று பொதுமக்களால் பெறப்பட்டது. ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளி ஒருவர் கொரோணா வைரஸ் பாதிப்புள்ளதனை பரிசோதித்துக் கண்டறிந்துள்ளனர். இது கோவிட் -19 மீண்டும் எழுச்சி பெற்றால் இலங்கை எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, ஆகவே நாம் ஒவ்வொருவரும் முன்னெச்சரிக்கையினை வலுப்படுத்தவேண்டிய நிலையில் உள்ளோம்.
06 October 2020
13 September 2020
எழுந்து வாடா தம்பி
காலை விடிந்தது உனக்காக- என்று
கத்தும் சேவலும் கணக்காக
கிழக்கில் உதிக்கும் சூரியனை- முந்தி
கிழர்தெழு நாளை நமதாகும்
கதிர்கள் ஆடும் வயல் நிலமும்
கரைகள் தோறும் கடல் வளமும்
காடு மேடுகள் குளங்களென
கொண்டது எமது பூர்வாங்கம்
உழுது வாழ உறுதி கொள்வோம்
ஊரைக் கூட்டி உலகை வெல்வோம்
அழுது வாழும் அவலமெல்லாம்
அறவே நம்முள் விலகச் செய்வோம்
10 September 2020
சமுகநலத்திட்டங்கள் வறுமையை குறைத்து தொழில் வாய்ப்பை உருவாக்கியுள்ளதா?
இன்று இலங்கை மாத்திரமல்ல இந்த உலகமே கொவிட்-19 என்ற பேராபத்தில் சிக்கி நலிவுற்றுள்ளது. யாருக்கு யார் ஆறுதல் சொல்லுவது என்ற நிலையில் அபிவிருத்தியடைந்த அடைந்துவருகின்ற நாடுகள் பாரிய பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித்தவிக்கின்றன. இந்த நிலையில் பல்வேறு சமுக பாதுகாப்பு நடைமுறைகள் நாட்டுக்கு நாடு நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இலங்கையிலும் சமுகப் பாதுகாப்பு நடைமுறைகள் அரசாங்கத்தினால் அந்த மக்களை மீட்டெடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமுர்த்தி அதில் உள்ளடங்கும் ஒரு பெரிய சமுக நலத்திட்டமாகும். இதனை நடைமுறைப்படுத்த நாடு பூராகவும் சுமார் 25,000 சமுர்த்திப் பணியாளர்கள் அந்தச்சேவையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் ஓட்டுமொத்தமாக 2 மில்லியன் மக்கள் சமுர்த்தியினை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு 600,000 மக்களால் சமூர்த்தியை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் சமுர்தி நாட்டின் மிகப்பெரிய சமூக நலத் திட்டமாகும், இது ரூ. 2017 ஆம் ஆண்டில் 43 பில்லியன் மற்றும் ஏற்கனவே 1.4 மில்லியன் குடும்பங்களை அதன் பட்டியலில் வைத்திருந்தது. அனைத்து அரசியல் பிரச்சாரங்களிலும் வறுமை ஒழிப்பு ஒரு முக்கிய செய்தியாக இருந்தாலும், சமுர்தி திட்டம் எவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது குறித்து தெளிவு இல்லை.
06 September 2020
கோழி மேய்பதென்றாலும் கவர்மென்றில் சேரவேண்டுமாம்!
ஓவ்வொருமுறையும் ஒரு புதிய அரசு அமையும் பொழுது பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்புத்தான் அவர்களது அரச வேலைவாய்ப்புக்கான கனவு. ஆதனால் புதிய அரசாங்கம் தங்களுக்கு புதிய மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று நம்புகிற வர்க்கத்தில் வேலையற்ற பட்டதாரிகள் மட்டும் அடங்கவில்லை, மீதமுள்ள தொழிலாளர்களும் அதில் அடக்கம். ஆனால் ஒரு புதிய பொருளாதாரத்தின் வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டுமானால் நிச்சயமாக அதுசார்ந்த புதிய கொள்கை சீர்திருத்தங்கள் தேவை என்பதனை பொருளியலாளர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.
23 August 2020
சமுர்த்தி வறுமைய இல்லாது செய்துள்ளதா?

வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு கடந்த வாரத்தில்; பசில் ராஜபக்ஷ அவர்களை தலைமைதாங்க, நாட்டில் சமூக முன்னேற்றம் மற்றும் அதன் நலத்திட்டங்களின் தாக்கத்தைக் கண்டறிய சிறந்த தரவு சேகரிப்புக்கு அழைப்பு விடுத்தார்.
இது ஒரு நீண்ட கால தாமதமான நடவடிக்கையாகும், இதற்காக அரசியல் கலக்காத தூய்மையான தகவல்களை திரட்டுவதன் மூலமே இதன் உண்மைத்தன்மைகளை அறியக்கூடியதாக இருக்கும்.
இது ஒரு நீண்ட கால தாமதமான நடவடிக்கையாகும், இதற்காக அரசியல் கலக்காத தூய்மையான தகவல்களை திரட்டுவதன் மூலமே இதன் உண்மைத்தன்மைகளை அறியக்கூடியதாக இருக்கும்.
1994 ஆம் ஆண்டில், வறுமையை ஒழிப்பதற்கான ஒரு தேசிய மூலோபாயமாக அன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தால் சமுர்தி (செழிப்பு) திட்டம் தொடங்கப்பட்டது, மேலும் சமுர்தி அமைச்சும் பிரத்தியேகமாக நிறுவப்பட்டது. தற்போதைய அரசாங்கமும் இதேபோல் திட்டத்தின் இலட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களுக்கு உறுதியளித்துள்ளதுடன், அதன் ஆரம்ப அனுபவங்களின் அடிப்படையில் அணுகுமுறையை மேலும் தீவிரப்படுத்தவும் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
27 July 2020
மட்டக்களப்பு வாக்காளர்களின் 2020 பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு அறிக்கை வெளியிட்டு வைப்பு.
கிழக்குப் பல்கலைக்கழகங்கள் பழைய மாணவர் ஒன்றியத்தின் '2020 பொதுத் தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம், மட்டக்கக்களப்பு மாவட்டம்' எனும் கருத்துக்கணிப்பு ஆய்வறிக்கை இன்று ஒன்றியத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாய்வானது 08.07.2020 தொடக்கம் 19.07.2020 வரையான காலப்பகுதியில் இணையம் (Online Survey) மூலமாக நடாத்தப்பட்டதாகும். இது பக்கச்சார்பற்ற முறையில் நடுநிலையாகவும் மற்றும் வெளிப்படைத்தன்மையுடனும் நடாத்தப்பட்ட வரலாற்றில் மட்டக்களப்பின் முதலாவது ஆய்வாகும்.
இவ்வாய்வானது 08.07.2020 தொடக்கம் 19.07.2020 வரையான காலப்பகுதியில் இணையம் (Online Survey) மூலமாக நடாத்தப்பட்டதாகும். இது பக்கச்சார்பற்ற முறையில் நடுநிலையாகவும் மற்றும் வெளிப்படைத்தன்மையுடனும் நடாத்தப்பட்ட வரலாற்றில் மட்டக்களப்பின் முதலாவது ஆய்வாகும்.
இதில் பல அரசியல் மாற்றத்துக்கான விடயங்கள் இக் கருத்துக்கணிப்பு ஆய்வில் கோடிட்டுக் காட்ப்பட்டுள்ளது. இம்முறை எந்தக் கட்சிக்கு அதிக வாக்குக் கிடைக்க இருக்கின்றது என்பதும் இதில் கண்டறியப்பட்டிருப்பது முக்கியமாக "மக்களின் மனதில்" ஏற்பட்டிருக்கும் மாற்றமாகப் பார்க்கப்படுகின்றது.
முழு அறிக்கையின் விபரத்தினைப் பார்க்க கீழுள்ள இணைப்பை அழத்தவும்.
https://drive.google.com/file/d/1SuZAT8n3Hve43EvFiB_Q9XWhajE8HB6A/view?usp=sharing
05 July 2020
ஏன் இலங்கையினை நவீன வியட்நாமாக மாற்ற முடியாது?.
நாம் இன்று நம்மை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஜப்பானுக்கு அடுத்ததாக சுதந்திரம் பெற்ற நேரத்தில் நமது பொருளாதாரம் இரண்டாவது சிறந்த நாடாக இருந்தது என்பதையும், லீ குவான் யூ சிங்கப்பூரை இலங்கையைப் போல உருவாக்க விரும்பினார் என்ற கதையைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கவில்லையா? அதையே எத்தனை நாட்களுக்கு சொல்லிக்கொண்டு திரிவது, அதன் பின் எத்தனை தசாப்தங்கள் கடந்தும் வேறு ன்றை சொல்ல வைக்க நாம் ஏன் முயற்சிக்கவில்லை என்கின்ற கேள்வி எழாமல் இல்லை.
04 July 2020
கொவிட்-19 இக்கு பின்னான பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் நிலை
இன்று இலங்கையில் மாத்திரமல்ல, அது கடந்து உலகம் பூராகவும் பாரிய பொருளாதாரச் சரிவினை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தத்தாக்கம் இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு விழுந்த பேரிடியாகவே பார்க்கப்படுகின்றது. ஆகவே கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால் இன்று இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக உலகப் பொருளாதாரம் ஸ்தம்பித்து நிற்கிறது. பொருட்களுக்கான தேவை குறைதல், சர்வதேச போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளை நிறுத்துதல் உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு பங்களித்திருக்கின்றன.







