புதிய தலைமைத்துவத்தின் கீழ் ஒழிந்துவிட்டது என நினைத்த காலங்காலமாக செயல்படும் மார்க்கெட் மாஃபியா இந்த நாட்களில் மீண்டும் சுறுசுறுப்பாகி வருவதாக தெரிகிறது. ஒவ்வொரு பருவத்திலும் வௌ;வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது.
இன்றைய சந்தையை அவதானிக்கும் போது அரிசி விடயத்திலும் இதே போன்ற வர்த்தக மாபியா செயற்படுவது தெளிவாகின்றது. குறிப்பாக நாட்டு அரிசி (புழுங்கல்), சிவப்புப் பச்சை மற்றும் சிவப்பு புழுங்கல் (நாடு) அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதால், சந்தையில் நாட்டு அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த அரிசி நெருக்கடியைக் கருத்தில் கொண்டால், இந்த நாட்டில் விவசாயக் கொள்கையின் சீத்துமம் என்ன என்பதை கற்பனை செய்து பார்க்க முடியும். கீரி சம்பா அரிசி விலையினை கடந்த சில வருடங்களில் வைத்து பார்க்கும்போது மிக அதிகமாக இருந்தது. இதனால், பல விவசாயிகள் நாம் சாதாரணமாக விரும்பி உண்ணும் நாடு மற்றும் சம்பா சாகுபடியை கைவிட்டு, கீரி சம்பா விளைவித்தனர்;.