ADS 468x60

26 July 2011

நானும் மனிதனாய்...

Myspace Roses Graphics Flowers Clipart 
என் காமத்தின்
இடைவெளிகளை
காதலின் 
படுதோல்விகளை
நீ நெருங்கிப் பழகிய.....
அர்த்தநாரீசம்,
இவையெல்லாம்
இன்னும் 
நானும் நீயுமாய்
இருப்பது போன்று
தோத்தரவாக்குகின்றது.


காலத்தின்
காவல் அறைக்குள்-நான்
வாழவும் சாகவும் -முடியாமல்
வானத்தின் கோலங்களாய்-என் 
வசந்தங்கள் தொலைந்தும்
நீயும் நானும் இருந்த
நினைவுகளின் ..
மாத்திரைகளுடன்
இன்றோ நாளையோ
என்றோ என்று
நானும் மனிதனாய்....

19 July 2011

றோல் மடல்....

Myspace Puppies Graphics Dogs Clipart
றோல் மடல் என்பது ஒரு விதமான மனவியல் அணுகுமுறை என்று கூறலாம். வாழ்க்கையில் சில பாத்திரங்கள் எங்களை வெகுவாகக் கவர்ந்து கொள்ளும், சில வெறுப்பை ஊட்டும். இன்று சினிமா, விளையாட்டு, மொடலிங், தொடர் நாடகங்கள் இவை எல்லாம் இளம் தலைமுறையினரை பலப்படுத்தியுள்ளதா, பலவீனப்படுத்தி உள்ளதா? ஏன்றால் பலவீனப் படுத்தியுள்ளது என்றே விடை வரும்.

குறிப்பாக இளம் பெண்களிடையே தங்களுடைய வாழ்கை துணைவர் எப்படி இருக்க வேணும் என்ற கேள்விக்கு வந்த பதில்களில் அயன் சூரியா, சியான் விக்ரம், கில்லி விஜய் போன்று கொஞ்சம் பசன், கொஞ்சம் வில்லத்தனம், முழு அக்டிவான ஆளா இருக்கும் ஆண்களைத்தான் பிடிக்குமாம்..

12 July 2011

அனர்த்தங்கள் மனிதனை ஆழும் இயற்கையின் எடுத்துக்காட்டு-

யப்பானில் ஏற்ப்பட்ட ஆழிப்பேரலை உலக வரலாற்றின் தொழில் நுட்ப்பம், விஞ்ஞானம் இவற்றுக்கெல்லாம் கட்டுப்படாத சக்தி ஒன்று உண்டு என்பதை கண் மண் தெரியாமல் நாங்கள் தான் தொழில் நுட்ப்பத்தில் பெரியவர்கள், நாங்கள்தான் விஞ்ஞானத்தில் பெரியவர்கள் அதனால் தான் எங்கள் நாடுகளை அனர்த்தங்கள் தாக்குவதில்லை, ஏழை நாடுகளைத்தான் இவை துவம்சம் பண்ணுகின்றது என்ற தலைகள் எல்லாம் மலை சாய்ந்து போன இழப்பில் இருக்கின்ற பெரியவர்கள் உணரத் தொடங்கி விட்டனர் இப்போது.

22 June 2011

இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை.

நான் பார்த்த வரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும,; மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகின்ற கேள்வி, 'ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஸ்ட்டங்களைக் கொடுக்கணும்?' இந்த கேள்வி கேட்க்கப்படும் போதெல்லாம் நான் படித்த கதை ஒன்று ஞாபகம் வருகிறது.

அது ஒரு கிராமம், சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான், அப்போது 'என்னைக் காப்பாற்று காப்பாற்று' என்று ஒரு அலரல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கியிருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்து பரிதாபமாகக் கத்துகிறது. 'உன்னை வலையில் இருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி வீடுவாய்' நான் மாட்டேன் எனறு முதலையை காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன்.

20 June 2011

கன்னியின் மடியில் சாய்வதும் இன்பம்..


இரவின் கண்ணீர்
பனித்துளியாகும்
முகிலின் கண்ணீர்
மழைத்துளியாகும்
இயற்கை அழுதால்
உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால்
இயற்கை சிரிக்கும்.

அன்னையின் கையில்
ஆடுவதின்பம்
கன்னியின் கையில்
சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால்
உன்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால்
பெரும் பேரின்பம்..

19 June 2011

கண்ணகி இலக்கிய விழா.

"மழைக்கு வர்ணன், காற்றுக்க வாயு துன்பத்தில்
திளைக்கும் உலகை காப்பது விஸ்னு

கற்புக்கு அரசி கண்ணகி தானே.....
உலகமே உணரும் வண்ணம் உன்மையை உரைத்த தாயி
ஊரெல்லாம் குடியிருந்து உலகாழ்வது அழகு.
ஊருக்கு உண்மை அழகு
உன்மைக்கு பெண்மை அழகு- அந்தப்
பெண்மைக்கு கண்ணகிதான் அழகு"

கண்ணகி தனிப்பெரும் இலக்கிய, ஒழுக்க, தமிழ் பண்பாடுகளின் ஒட்டுமொத்த வடிவமாகத் திகழும் ஒரு படைப்பாகும். இதனால்தான் இன்றும் குறிப்பாக தமிழர்கள் வாழ் இலங்கையின் எல்லாப்பாகங்களிலும் அவளுக்கு விழா எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இருந்தும் பொதுவாக விழாக்கள், நிகழ்வுகள் அவற்றைப்பாதுகாப்பதற்க்கான முனைப்புகள் இதுவரை எடுக்கப்படவில்லை காரணம் மூன்று தசாப்தகால யுத்தம், அனர்த்தங்கள், அரசியல் பலவீனம் என்பன போன்ற இன்னோரன்ன காரணங்களை சொல்லலாம். இவற்றை உணர்ந்த மட்டக்களப்பு வாழ் அறிஞ்ஞர்கள், கலைஞர்கள் சமுகம் பெருவளவிலான முனைப்பில் இதனை இப்பொழுது அழகாக திட்டமிட்டு நடத்துகின்றனர்.

13 June 2011

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை...

'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, அவள் அடி தொழ மறுப்பவர் மனிதர் இல்லை'  அன்னை வர்ப்பினில்தான் ஒரு பிள்ளையின் இலட்சியம், ஆழுமை, மனப்பாங்கு விருத்தி, தலைமைத்துவம் என்று எல்லாம் அடங்கி இருக்கின்றது என்பதை பறை சாற்றும் வகையில் ஒரு உன்னத பணியை கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட்ட விரிவுரையாளரும் மற்றும் சமுகத்தொண்டனுமான திரு ஞா.தில்லைநாதன் அவர்களின் தலைமையில், 11 யூன் 2011 அன்று கிழக்குப்பல்கலைக்கழக பிரதான மண்டபத்தினில் அன்னையர் கௌரவிப்பு நிகழ்வு, கலைப்பீட சிறப்பு கற்கை மாணவர்களின் உறுதுணையுடன் நடத்தப்பட்டது. அதிதிகளாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் மா.செல்வராசா, சிரேஸ்ட்ட விரிவுரையாளர் ஜெய்சங்கர் மற்றும் பிரதிப்பதிவாளர் மும்தாஜ் ஆகியோருடன் மாணவர்களின் தாய்மார், மாணவர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்...... 

இதில் மானவர்களின் அன்னையர்கள் அவர்களின் முன்னே, இப்பிள்ளைகளை பெற்றெடுத்த பெருமைக்காக நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது எல்லோரயும் மனம் நெகிழ வைக்கும் ஒரு பெறுமதி மிக்க நிகழ்வாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. வாழும்போதே போற்றுதல் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அங்கு அவர்களின் பிள்ளைகளின் செயற்பாடுகள், கல்வி நிலை, அவர்கள் மீது அன்னையர்கள் எடுக்கவேண்டிய கருசனைகள் என்பனவும் சிலாகிக்கப்பட்டதுடன்.  மாணவர்கள் விரிவுரையாளர்களின் கவிதை, பேச்சு, இன்னோரன்ன நிகழ்வுகளும் சேர்த்து அவையை களைகட்ட வைத்தமை சிறப்பு. இதில் பாராட்டுகளும் வாழ்துகளும் அதன் ஒருங்கிணைப்பாளர் தில்லைநாதனுக்கே சேரவேண்டும்.

புத்தக வெளியீடு
அன்னயர் தின சிறப்பு மலர் வெளியீடு ஒன்று இடம்பெற்றது. இதில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்பான ஆக்கங்களை உள்ளடக்கமாக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.. இதன் ஆசிரியராக செல்வி நிஸாந்தினி, 3ம் வருட சமுகவியல் சிறப்பு கற்கை மாணவி இருந்து நெறிப்படுத்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது இம்மலரின் முதல் பிரதியினை சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியரும், கலைப் பீடாதிபதியுமான மா.செல்வராசா அவர்கள் பெற்றுக்கொள்ள அடுத்த பதிவு பிரதிப்பதிவாளர் மும்தாஜ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

ஓளிந்து கிடக்கும் திறமைகளை தோண்டி எடுத்து, மாணவர்களின் இயலுமைகளை அவர்களது தாய்மாரின் முன்னே அறியப்படுத்தி. வாழ்க்கையின் ஒளி பொருந்திய பாதைக்கான வழிகளாக விரியச் செய்யும் ஒரு ஜனரஞ்சக சமுகமயமாக்கல் செயற்பாட்டியின் முதற்க்கட்டமாக இதனை செய்துள்ளதாக விரிவுரையாளர் ஞா.தில்லைநாதன் குறிப்பிட்டிருந்தார்.
நினைவகளின் நிழல்கள்...



10 June 2011

கண்ணகிக்கோர் கவியாரம்....

















மின்னல் ஒளிபரப்ப சென்நெல் கதிர் இசைக்க
சோவெனத் தருக்கள் பூத்து சொரிந்து மணம் வீசிநிற்க்க
ஆவெல்லாம் பால் சொரிந்து அழும் பிள்ளை பசிதீர்க்க
தென்னகத்தே கண்ணகித்தாய் வண்ணமதாய் பிறக்கின்றாள்.

மதுரை மானகரம் மங்களமாய் அருள் பரப்ப
எதிரே நின்றபகை எல்லாம் ஒளிந்துவிட
உதிரும் புன்னகை உதட்டினில் ஜொலிக்க
உதித்தாள் பூம்புகார் மண்ணில் உத்தமி

தெய்வக் குழந்தையாய் உதித்த தேவி மானாக்கன்
கையில் மகளாய் மலர்ந்து நின்றாள்
வையகத்தே ஆயிரங்கண்ணாள் அம்பிகை வடிவில்
உய்யவைக்க வந்துதித்தாள் ஊரெல்லாம் நமக்காக

பத்தியால் கொண்ட சித்தியால் பெற்ற வெற்றியால்
உள்ளத்தால் உயர்ந்த எண்ணத்தால் அழகு வண்ணத்தாள்
மெல்லத்தான் மலர்ந்தாள் அழகால் வளர்ந்தாள்
புன்னகைத்தாள் தெய்வத்தைப் பின்னவைத்தாள்
கண்ணகித்தாய் என்று எண்ணவைத்தாள் நம்மையெல்லாம்.

மெல்லத்தான் அழகை சொல்லத்தான் இடையிலில் மாசாத்தான்
மகனாய் வளர்தான் பக்தியில் உயர்ந்தான் சித்திகள் பெற்றான்
இதை சொல்லத்தான் மனதில் எண்ணித்தான் விரைந்தான் மதுரையை அடைந்தான் கோவலன் தந்தை மாசாத்தான்.

இட்டபடி இறைவன் கட்டளைக்கு ஏற்ப்ப கட்டளகி கண்ணகியாள் கட்டளகன் கோவலனை திட்டமிட்டபடி மதரையில் திருமணம் முடித்தனர்.
சட்டங்கள் தவறாமல் தவமயில் கண்ணகியும்
துதித்தாள் கணவனை மதித்தாள் கொண்ட சிறப்பால்
கோவலனும் எதைத்தான் கொடுக்க மறுத்தான் வாழ்வில் சிறந்தான்.....இந்நாளில்....

நெஞ்சில் பட்டதோ ஊழ்வினை தொட்டதோ வாழ்வினை சுட்டதோ
கோவலனை விட்டதோ இல்லை
மஞ்சம் கொண்டதோ மார்க்கம் மாறியதோ மாதேவி ஆசை தேறியதோ மயிலாள் கண்ணகி மதித்த கணவனுக்கு.

இசையில் இழகியதால் இன்பத்தில் பழகியதால்
பிசகாமல் அழகியவள் பின்தொடர்ந்து சென்றதால்
ஆசையில் ஆபரணங்கள் அத்தனையும் விற்றதால்
வசைமொழி கேட்டதால் வாடி நின்றான் கோவலன்.

ஆங்கே மன்னவன் பாண்டியனின் மனைவியின் சிலம்பமும் தொலைந்து போனதுதான் என்னே என்ன ஆச்சரியம்.....
மன்னவன் பாண்டியன் பிடித்தான் கோவலனை அடித்தான் மன்னவனின் வசைகேட்டுத் துடித்தான் தன்நெஞ்சில் தானே கையால் இடித்தான் எண்ணமெல்லாம் துண்டு துண்டாய் ஒடித்தான் கோவலனும்.

பாண்டிமா மன்னவனின் பாவத்தில் கொன்ற செய்தி கேட்ட காலத்தின் காவல் நாயகி, ஞாலத்தின் கற்ப்புக்கரசி, உன்மையை மட்டும் உரைக்கும் உத்தமி, நன்மையை நலமாய் நல்கிடம் மாது என் செய்தாள் தெரியுமா?

மதுரை மன்னனின் மாளிகை நோக்கி
மற்றோர் சிலம்பை கையில் தூக்கி
சென்றாள் சினத்தை உடலெங்கும் பரவி
போய்முன் நின்றாள் கணவனை
கொன்றவர் யார் என்று வினவி
வழக்கைத் தொடர்ந்தாள்
வாழ்கைக் கேட்டு தன்
பிழைப்பைக் கெடத்த பெருமன்னன் முன்னே.

மன்னவன் பாண்டியன் மறுத்துரைக்க,
கையில் இருந்த சிலம்பமும் மன்னவனால்
களவாடியதென்ற சிலம்பமும்
ஒன்றென மன்னன் பொய்யில் -என்னை
பழித்துரைத்ததை தையல் கண்ணகியாள,;
அங்கம் சிவசிவக்க பொங்கிவரும் கோபம்
தகதகென்று நெருப்பாய் எரிய
எங்கும் இருக்கும் இறைவன் இருப்பதென்றால்
மன்னன் வாயின் வார்தை பொய் என்றால்
நின்றால் இறைவன் முன்றால்
உன்மை கொன்றால் மதுரை மா நகரே
பத்தி எரிக என்றாள் சிலம்பை வீசி.

மழைக்கு வர்ணன், காற்றுக்க வாயு துன்பத்தில்
திளைக்கும் உலகை காப்பது விஸ்னு
கற்புக்கு அரசி கண்ணகி தானே.....
உலகமே உணரும் வண்ணம் உன்மையை உரைத்த தாயி
ஊரெல்லாம் குடியிருந்து உலகாழ்வது அழகு.
ஊருக்கு உண்மை அழகு
உன்மைக்கு பெண்மை அழகு- அந்தப்
பெண்மைக்கு கண்ணகிதான் அழகு.

வங்கக் கடல் மாலையிட சங்கத்தமிழ்
எதிரொலிக்கும் மங்களத் திருநாடாம் இலங்காபுரியில்,
நீர்த்தாய் குளிர்பரப்ப நிலத்தாய் வளங்கொலிக்கும்
பார்த்தால் பசிதீர்க்கும் பசிஞ்சோலைப் பட்டினமாம் -
மீனினம் பாட்டிசைக்க மானினம் துள்ளியோடும்
வானகம் கறுக்கக் கண்டு மயில்கள் கோலாகலிக்கும,;
பசித்தோரின் முகம் பார்த்து பசிதீர்க்கும் பொன்னாடாம்
மட்டக்களப்பதனில்,

தாமரை மலர்கள் எல்லாம் வாவெனக் கையசைக்கும்,
மாமதுரை பூத்து நின்று வாசம் பரப்பிநிற்கும்
செட்டியார் குலமக்கள் செறிந்திலங்கும் செடடியூரில்
வந்தமர்ந்த மாதுக்கு கையில் தீச்சுடரும், மடியில் மடிப்பிச்சையும்,
தோழில் காவடியும், சொண்டில் அலகும் குத்தி, வசந்தன் வைத்து
கும்மி கரகம் ஆடி, பசிந்தாள் இலையில் பசிஆற்றி குளிர்தில் வைத்து கொண்டாடும் வைகாசி இது வரும் போது ஊரெல்லாம் கைராசி...