ADS 468x60

12 October 2022

அரசியலில் எதற்கு இத்தனைபேர் தேவை? எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்!

நாம் அனைவரும் அறிந்த  நாட்டின் முன் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. ஒன்று பொருளாதார சரிவுஇ மற்றொன்று அரசியல் அமைப்பை பெரும்பான்மை மக்களால் நிராகரிப்படுவது. பொருளாதார வீழ்ச்சிக்கு தற்போதுள்ள அரசியல் அமைப்புதான் காரணம் என்று பலர் கருதத்துவங்கியுள்ளனர்.
உண்மையில் பொருளாதாரத்தை புத்துயிர் பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் விரிவாக விவாதித்ததால்இ அது பற்றி இனி இங்கு பேசி வேலையில்லை. மாறாக அரசியல் வேலைத்திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நாட்டின் அரசியல் அமைப்பு பெரும்பான்மை மக்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதோடு 225 உறுப்பினர்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு கோருகின்றனர். 

கடந்த மார்ச் மாதம் போராட்டங்களை ஆரம்பித்தது அரசியல் கட்சிகள் அல்ல. அரசியல் கட்சிகளின் போராட்டங்களில் மக்கள் பங்கேற்கவில்லை, ஆனால் அவர்கள் சுதந்திரமாக முன் வந்தனர். துரதிஷ;டவசமாக, மே மற்றும் ஜூன் மாதங்களில், வௌ;வேறு அரசியல் அமைப்புகள் இந்த இயக்கத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டன, பின்னர் வன்முறை ஊடுருவியது. வன்முறையுடன் சேர்ந்து அவர்கள் அரசாங்கத்தை அகற்ற முயன்றனர் மற்றும் போராட்டமும் சரிந்தது.

தற்போதுள்ள அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் உள்ளனர். வன்முறையை அனைவரும் நிராகரிக்கின்றனர். நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் இந்த அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டு முன்னேற வேண்டும்.

பிரதேச சபை முறைமை தொடர்பில் பல கேள்விகள் உள்ளன. இதில் பல பிரதேச சபைகள் இலாபம் கூட பெறுவதில்லை. அவர்கள் வரிப்பணத்தில் வாழ்கிறார்கள். பணம் பெறும் மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் அதனை சம்பளம் வழங்க பயன்படுத்துகின்றன. எனவே, இந்த அமைப்பைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

எவ்வாறாயினும் கடந்த முறை பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 இலிருந்து 8000 ஆக உயர்த்தினார்கள். இதை எந்த மக்கள் குழுவும் கேட்கவில்லை. கட்சித் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து இது மேற்கொள்ளப்பட்டது. இப்போது, அடுத்த தேர்தலுக்கு முன்பு இந்த எண்ணிக்கையை மீண்டும் 4000 ஆக குறைக்க வேண்டும் என நாட்டின் ஜனாதிபதி கூறுகின்றார்.

உள்ளூராட்சி சபைகள் மாத்திரமல்ல மாநகர சபைகள் மற்றும் நகர சபைகளுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்த நாட்டில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அப்படி இல்லாத எட்டாயிரம் பிரதேசசபை ஏனைய அரசியல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையுடன் மாகாணசபை உறுப்பினர்களை சேர்க்கும் போது இன்னும் அதிக எண்ணிக்கை காட்டப்படுகிறது. இதற்கு முன்னர் இருந்த உறுப்பினர்களின்; எண்ணிக்கையை எட்டாயிரத்தில் இருந்து நான்காயிரமாக குறைக்க ஜனாதிபதி விக்கிரமசிங்க இலக்கு வைத்துள்ளார். இதேவேளை, ஜனசபை என்ற வேலைத்திட்டத்தை நிறுவுவதையும் ஜனாதிபதி நோக்கமாகக் கொண்டுள்ளார்.

இலங்கையின் சனத்தொகை இருபத்து இரண்டு மில்லியன் மாத்திரமே . அந்த சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருப்பது, இலங்கை தனது உள்நாட்டு உற்பத்தி நடவடிக்கைகளில் எம்.பி.க்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளதைக் காட்டுகிறது. பா.ம.உ என்பது அரசியல் மகிழ்சியின் உச்சக்கட்டம். அதாவது அரசியலில் ஒருவரது மகிழ்ச்சி ஒரு கட்டத்தில் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. 

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர், மாநகர சபை உறுப்பினர், நகரசபை உறுப்பினர், என அனைத்துமே அரசியல் மகிழ்ச்சிக்கான நிகழ்வுகள். பிரதேச சபை உறுப்பினர் பதவி கிடைத்த மகிழ்ச்சியில், அவர் அதன் தவிசாளர்; ஆகும்; எண்ணத்தில் உள்ளார். அவரது அடுத்த இலக்கு மாகாணசபை உறுப்பினராகுவது, அதன் பின் அவரது இறுதி இலக்கு நாடாளுமன்ற உறுப்பினராவது. ஆதன் பின்னர் பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர், அமைச்சர், பிரதமர் ஆகிய பதவிகளின் ஊடாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியாக வர நினைக்கின்றார். ஆக உள்ளூர் சபைக உறுப்பினரின் இறுதி நோக்கமும் இதுதான். எனவே, இந்த நிலைகள் அனைத்தையும் அரசியலின் திருப்தியின் வௌ;வேறு நிலைகளாகக் குறிப்பிடலாம். எனினும், இலங்கை போன்ற ஒரு நாடு 8,000 முதல் 9,000 பிரதேச மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்களை தக்க வைத்துக் கொள்ள முடியாது. எனவே இந்த நாட்டில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000க்கு பதிலாக 500 ஆக குறைத்தால் அது மிகவும் பெறுமதியானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இலங்கையில் அரசியல் என்பது சம்பந்தப்பட்ட பெரும்பாலானோருக்கு ஒரு வேலை. அரசியலால் நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்ற கருத்து பலரிடம் உள்ளது, அது முற்றிலும் உண்மை. பெரும்பாலான அரசியல்வாதிகள், ஆலயம், சங்கங்கள் கழகங்கள், ஆலயங்களின் தலைமைத்துவத்தினை அல்லது கிராம மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் அல்லது செயலாளராக தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இது அரசியலில் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சை போன்றது. இப்போது அரச பதவி, வர்தகர்கள் என முத்திரை குத்தப்பட்டவர்களை தேடித் தேடி இறக்குகின்றார்கள். கடைசியில் அவர்களது முன்னேற்றத்தினை மாத்திரம் பார்த்துவிட்டு மக்களை நடுத்தெருவில் விட்டுச் செல்லும் பல உதாரணங்கள் எம்மத்தியில் உண்டு. 

1970-77 அரசாங்க காலத்தில், கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருப்பது மிகவும் இலாபகரமான வேலை. அப்போது கூப்பன் முறையில் கருவாடு, சர்க்கரை, அரிசி, பருப்பு, வெங்காயம், டின் மீன், பப்ளின் துணி என பல நுகர்பொருள்கள் வழங்கப்பட்டன. சந்தையில் பொருட்கள் குறைவாக இருப்பதால், கூப்பனுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. கூட்டுறவுத் தலைவர் மற்றும் அவரது கைகளில் உள்ள கூட்டுறவு உறுப்பினர்கள் மற்றும் மேலாளர்கள் இந்த பொருட்களை கூட்டுறவு முதல் கருப்புச்சந்தைவரை அதிக விலைக்கு விற்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கூட்டுறவு சங்கங்களுக்கு இன்று அதிக இடம் கிடையாது.

ஒரு அரசியல்வாதி சிறிது தன்னை மக்களிடம் கொண்டுசேர்க்கும் ஒரு அறிமுக விலாசமாகவே இந்த இடத்தினைப் பயன்டுத்திக்கொண்டனர். இந்த நிலையத்தை விட்டு வெளியேறும் கூட்டுறவுத் தலைவர் படிப்படியாக பொது உறுப்பினராக பதவி உயர்வு பெறுகிறார். ஆப்படியான ஒருவர் அன்று அரசியலுக்கு வரும்போது அப்போது அவரிடம் சைக்கிள் மட்டுமே இருந்தது. ஆனால் சுமார் பத்து வருடங்கள் அரசியலில் ஈடுபட்டு, பெரிய வளவளப்பான அளவுக்கு உடலை மேம்படுத்திக் கொள்ளவும், பஜேரோ, மான்டெரோ, விஎம்டபிள்யூ போன்ற வாகனங்களைப் பயன்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும், ஜிம்மிற்குச் செல்லவும், போகவும் வழி கிடைக்கிறது. 

மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு. கையில் பணமில்லாமல் அரசியலுக்கு வந்த தொண்ணூற்றொன்பது வீதமான இலங்கை மக்கள் இவ்வாறு தமது அரசியல் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். இந்த நாட்டில் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தொகுதி பற்றி பெரும்பாலானவர்கள் பேசுகின்றார்கள் ஆனால் மக்கள் மத்தியில் மறைந்துள்ள எண்ணாயிரம் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பற்றி பேசுவதில்லை. இந்தியாவோடு ஒப்பிடுகையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று பலர் கூறுகின்றனர். இது தர்க்கரீதியாக உண்மை. ஆனால், எண்ணாயிரம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் செலவைக் கணக்கிட்டால், மூன்று அல்லது நான்கு நாடாளுமன்றங்களை பராமரிக்கும் செலவும் ஒன்றுதான் என்பதனை இந்த இக்கட்டான நெருக்கடி நிலையில் பலரும் கண்டுகொள்வார்கள்.

 1970 பிரிவினைக்குப் பின்னர், இந்த நாட்டில் அரசியலின் சீரழிந்த சகாப்தம் தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில்தான் மக்கள் பிரதிநிதிகள் பொதுச் சொத்தை அபகரிக்கத் தொடங்குகிறார்கள். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விடுதி அறைகளில் நேர்காணல் நடத்தப்பட்டு 1970ஆம் ஆண்டு ஆரம்பமான அரச காலத்தில் இளம் பெண்களுக்கு ஆசிரியைத் தொழில் வழங்கப்பட்டது. 

1977ல் ஆட்சிக்கு வந்த ஜெ. ஆர். ஜயவர்தனவின் தலைமையில், நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் உலகமும் நாற்றமடிக்கும் சேற்றாக மாறியது. ஜே. ஆர். ஜயவர்தன ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விருப்புரிமை வாக்கு முறையானது இந்நாட்டு அரசியலில் முள்ளாகவே கருதப்படலாம். இந்த நெருப்பு ஒரே நேரத்தில் எரிவதில்லை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எரியும் ஒன்றாக ஆகிவிட்டது. இந்த நாட்டில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. 

அந்த பொதுத்தேர்தலில் தீர்மானகரமான காரணி விருப்பு வாக்கு. மக்களின் விருப்பங்களைப் பெற அரிசிப் பொட்டலங்கள், மதுபானங்கள், பணம், தகர டப்பாக்கள், செங்கல்கள், பட்டுத் துணிகள், பாலியல் லஞ்சம் போன்ற பொருட்களின் முடிவற்ற பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்ற நிலை உருவானது. எந்த நாடும் இப்படி ஒரு ஆட்சியினைத்தொடர முடியாது. எனவே இவ்வாறான அசிங்கமான அரசியல் ஒதுக்கப்பட்டு சிறப்பான மக்கள் தொண்டாண்மையை இலக்காகக்கொண்ட வினைத்திறன்வாய்ந்த சிலர் இருந்தால் போதும். எனவே உள்ளாட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை எட்டாயிரத்தில் இருந்து ஐநூறாக குறைக்க முடியுமானால், அது மிகவும் விரும்பத்தக்கது 

0 comments:

Post a Comment