ADS 468x60

08 October 2022

விவசாயிகளுக்கு யார்தான் முக்கியம் கொடுக்கிறான்?

இன்றைக்கு எல்லோரும் டாக்டராகனும், எஞ்சினியராகனும், வக்கீலாகனும், ஐரி ஒப்பிசராகனும் அப்புறம் உழைக்கிற காச கடையில கொண்டு கொடுத்தா ப்ரசா உணவு வேண்டிச் சாப்பிடலாம். 

ஐயா இந்தச் சாப்பாட்ட என்னுடைய விவசாயப் பெருங்குடி மக்கள் எங்கயோ ஒரு காட்டில மழையிலும் வெயிலிலும் கண்ணுமுழி பிதுங்க, கன்னச் சதை தொங்க உடலில் வேர்வை உப்பா பூக்க உடலால வெம்பாடுபட்டு விளைய வைத்தால்தான் இங்க ப்றசா உணவு வரும். 

ஒரு கவிஞ்ஞன் எழுதுகிறான் ' கடைசி மரமும் வெட்டப்பட்ட பிறகு, கடைசி மீனும் பிடிபட்ட பிறகு கடைசி நதியும் நஞ்சான பிறகுதான் மனிதன் உணருவான் பணத்தைச் சாப்பிட முடியாதென்று'. 

அன்று நம் நாட்டில் பணத்தை உருவாக்கியதே விவசாயம்தான் ஆனால் இன்று விவசாயத்தை உருவாக்குவதே பணமாகிற்று. உழைப்பு??? 

உலகில் உழைக்கும் ஏழைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாயத்தில் வேலை செய்கிறார்கள். விவசாயம் அதிக வேலைகளை உருவாக்குகிறது, விவசாயிகளிடமிருந்து தொடங்கி, விவசாய உபகரணங்கள் தயாரிப்பாளர்கள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி ஆகியவற்றைத் தொடர்கிறது.

எமது நாட்டில் எதிலும் வரி, எதற்கும் வரி, உரத்துக்குத் தடை, உட்பொருள் விலை, இயந்திர இறக்குமதித்தடை, ஏற்றுமதி வரி, எரிபொருள் விலையேற்றம், விவசாயம் வீழ்ச்சி போதாககுறைக்கு இயற்கையின் சீற்றம்! அடேயப்பா இதெல்லாம் நம்ம விவசாயிகளுக்கு மாத்திரம்தானாப்பா?

மனம் தளரவேண்டாம்! இந்த விவசாயத்தை மாத்தியோசிப்போம் வாருங்கள்!

விளைச்சல் கூடிய பயிர்ச்செய்கை,

மூலிகைத் தோட்டம்,

விவசாயச் சுற்றுலா, 

உணவுப் பதனிடல்

கலாசார உணவுச் சுற்றுரா

நஞ்சற்ற உணவு உற்பத்தி

புதிய பயிர்வகைக் கண்டுபிடிப்பு

விவசாயப் பண்ணையில் சுற்றுலாவாசிகளைத் தங்க வைத்து, அவர்களுக்கு உணவளித்து, விவசாயப் பணிகளில் ஈடுபட வைத்து, விவசாயத்துக்கு மேன்மையூட்டச் சொல்கிறது. இந்தியாவில் விவசாயச் சுற்றுலா மிகப் பெரும் வெற்றியடைவதற்கான சாத்தியம் கொண்டுள்ளதனை நாம் அவதானிக்கலாம். 

இது எல்லாத் தரப்பினரையும் கவரும் திட்டமும்கூட. விவசாய அறுவடையைக் கொண்டாடுவது, தோட்டத்தில் விளைந்தவற்றை சுற்றுலாவாசிகளே அறுவடை செய்வது, விவசாயக் குளம் குட்டைகளில் மீன் பிடிப்பது, கிராம விவசாயச் சந்தையைப் பார்வையிடுவது, கிராமப்புறக் கைவினைக் கலைஞர்களிடம் பொருட்கள் வாங்குவது, மாட்டுவண்டியில் சவாரி செய்வது, மாணவர்களுக்கு வேளாண்மை சார்ந்த வகுப்புகளைக் கற்றுக்கொடுப்பது எனப் பலவற்றையும் உள்ளடக்கிய திட்டம் நாம் இத்துறையை விரிவுபடுத்த சிந்திக்கலாம் இல்லையா? இன்னும் பல திட்டங்கள் என்னிடம் உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் மிகப்பெரும் சவாலாகக் கருதப்படுவது

தண்ணீர் பற்றாக்குறை

விவசாயக் கூலியாட்கள் பற்றாக்குறை

விவசாய விளை பொருட்களுக்குக் கட்டுபடி ஆகக்கூடிய விலை இல்லாமை

உர மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு

இந்தச் சவால்களை, நவீன விவசாயத்தின் (தொழில்நுட்பத்தின்) மூலம் சமாளிக்க இயலும். ஆனால் இவைகளுக்கு அதிக முதலீடு தேவைப்படும். அரசியல் ஸ்த்திரத்தன்மையாலும் இதனை சாதிக்க முடியும் ஆனால் அங்கு ஊழலற்ற ஆட்சி அமையப் பெறனும்.

மற்றை நாடுகளில் விவசாயம் நாட்டின் பாதுகாப்புக் கொள்கையோடு இணைக்கப்பட்டிருக்கிறது. ஆயுதங்களை நவீனப்படுத்துவதும் விவசாயத்தை நவீனப்படுத்துவதும் ஒரே தொனியைக் கொண்டிருக்கும். நாம்; இன்னும் அந்த நிலையை பெரிதாக எட்டிப்பிடிக்கவில்லை. 

பல பிறநாடுகளில் அதனால் சில விவசாய உற்பத்திகளை இறக்குமதி செய்வது தடை செய்யப் பட்டிருக்கிறது. வேறு சிலவற்றுக்கு ஆகக் குறைந்த விலை என்று ஒன்று நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. அந்த விலைக்குக் கீழ் யாருமே அந்தப் பொருட்களை விற்க முடியாது. இன்னும் சில பொருட்கள் உள்நாட்டு விவசாய உற்பத்திகளுடன் போட்டி போடாமல் இருக்கும் படியாக விலை நிர்ணயம் செய்யப்ப்ட்டிருக்கும். நமது நாட்டில் இந்த இரண்டும் கொள்கைகளாகக் கொண்டுவரப்படனும் இல்லையா?

இந்தியாவில் விவசாயிகளுக்கான பொருட்களான உரங்கள், மின்சாரம், நீர் விநியோகம் போன்றவற்றுக்கு ஒரு இரு தட்டு விலை நிர்ணயத்தின் கீழ் கட்டணம் வேறு விதமாக இருக்கும். விவசாய உற்பத்திக்கு அதற்கான காப்பீடு கட்டாயமாக அமுல் நடத்தப்படும். கல்விக் கடன்களைப்போல விவசாயக் கடன்களுக்கும் வட்டிவிகித்தில் அரசாங்க மானியம் உண்டு. ஆனால் அவை காலத்துக்குக் காலம் கொண்டுவரப்பட்டாலும் இன்னும் அவை உறுதியானதாக இல்லை.

இவை எல்லாவற்றுக்கும் காரணம் உலகின் எங்கோ ஒரு கோடியில் யுத்தம் ஒன்று மூண்டால் எமது மக்கள் பட்டினி கிடக்கக் கூடாது. உலகின் எங்கோ ஒரு கோடியில் பஞ்சம் ஒன்று உருவானால் எமது மக்கள் பட்டினி கிடக்கக் கூடாது. உலகின் எங்கோ ஒரு கோடியில் வெட்டுக்கிளிகள் பயிர்களைத் துவம்சம் செய்தால் எமது மக்கள் பட்டினி கிடக்கக் கூடாது. போன்ற எண்ணங்கள் தான். ஆனால் யுத்தபூகம்பத்தில், கொரோணா ஆக்கிரமிப்பில், அரசியல் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், மழை பொய்த்தால் பஞ்சம் நிச்சயம் என்றிருக்கும், வெட்டுகிளி ஆபத்து பாகிஸ்தானைக் கடந்தால் எமக்குத்தான் என்று இருக்கும் இலங்கையில்; மட்டும் விவசாயிகளைக் கவனிக்கும் பாங்கு கொஞ்சமும் போதாது என்று தான் சொல்லவேண்டும்.

உண்மையில் நமது விவசாயிகளும் நவீன் முறைகளையோ நவீன பயிர்களையோ கையாளக் கூடிய அறிவுத்திறன் வாய்ந்தவர்களாக இல்லை. காரணம் நமது பல்கலைக்கழகம் சமுகத்திடம், விவசாயிகளிடம் இருந்து அவ்வளவு ஒட்டுறவில்லாமல் இருப்பதும், அரசியல் அநாதைகளாக இருப்பதும் அவற்றில் சிலவாக் கொள்ளலாம். உலகெங்கும் பசி பட்டினியைப் போக்கிக்கொண்டிருப்பதும், ஏக்கர் ஒன்றுக்கான உற்பத்திச்செலவு குறைந்ததும் ஆதாயம் அதிகமாகக் கிடைக்கக்கூடியதுமான பயிர்களைப் பயிரிடுவதென்றால் இந்தப் பைத்தியக்கார அரசியல் ஞானம் அவர்களைச் சிந்திக்க விடாது தடுத்து வைத்திருக்கிறது. 

எமது மண்ணில் விவாசாயம் விவசாயிகளை வாழ்வைக்கும் நாள் வருமா வராதா என்று இப்போது நீங்களே சொல்லுங்கள்.

0 comments:

Post a Comment