ADS 468x60

16 October 2022

எமது பாடசாலைக் குழந்தைகளின் எதிர்காலம் இப்படியாகிவிடக்கூடாது!

பாடசாலைக் கல்வி முறை, ஒழுக்க முறைகள் என்பன காலத்துக்குக் காலம் வேகமாக மாறி வருகின்றன. ஆந்த வகையில், ஹலவத்த பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் தனது பாடசாலை பையில் மது போத்தலை மறைத்து வைத்திருந்த போது மாணவர் தலைவர்களால் பிடிக்கப்பட்டார். ஒன்பதாம் ஆண்டு படிக்கும் குறித்த மாணவி, பாடசாலைக்குள் விஸ்கி போத்தலைக்; கொண்டு வந்துள்ளார். சந்தேகத்துக்குரிய மாணவி, தனது தந்தை விஸ்கி போத்தலை வீட்டிற்கு கொண்டு வந்து தனது நண்பருடன் குடித்த மிகுதியை பாடசாலைக்கு கொண்டு வந்ததாக கூறினார். இது தொடர்பில் மாணவி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோருக்கு அதிபர் அறிவித்துள்ளார். ஒன்பதாம் ஆண்டு மாணவர் என்பவர் தனது எதிர்காலத்திற்காகத் தயாராகும் மாணவர். ஜி.இ.சி. சா. துரர் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் உயர்தரப் பரீட்சையின் ஊடாக பல்கலைக்கழகம் செல்வதே அவருக்கு இயல்பான பாதை. 

அதையும் மீறி அதிபர் மேற்படி மாணவியின் கழுத்தை பிடித்து பாடசாலையை விட்டு வெளியேறச் சொல்லி துரத்தியிருப்பின் அது பெரிய விபரீதமாக அமைந்திருக்கும். எனவே, அந்த அளவுக்குச் செல்லாமல் மனிதாபிமான மட்டத்தில் பணியாற்றிய இந்த அதிபருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். சில பாடசாலைகளில்; பாரம்பரிய அதிபர்கள் காதல் கடிதம் என்ற சம்பவத்திற்காக மாணவர்களை பாடசாலையிலிருந்து வெளியேற்றும் நேரங்களும் உண்டு. அப்படிப் பண்ணியிருப்பின் அந்த மாணவர்களின் எதிர்காலம் முற்றிலும் அந்த இடத்திலிருந்தே இருளாகிவிடும்.

இலங்கையில் பாடசாலை முறை மிகவும் மாறிவிட்டது. 1977ஆம் ஆண்டு வரை இந்நாட்டில் இருந்த பாடசாலை முறை பாரம்பரிய முறைமையாகும். ஆனால் 1977 இல், திறந்த பொருளாதாரம் மற்றும் உலகமயமாக்கல் மூலம் உலகப் படையெடுப்புடன், ஐரோப்பாவின் பாடசாலைகளில்; மட்டுமல்ல, ஆசியாவின் பாடசாலைகளிலும் ஒரு பெரிய கருத்தியல் மாற்றம் ஏற்பட்டது. ஆசியாவில் உள்ள பாடசாலைகள் தேசிய அல்லது மதக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதை மேலும் குறைத்தன. குறிப்பாக இலங்கையில் இந்த நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. 

இதற்கிடையில், 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த நாடு இணையம் மற்றும் மொபைல் போன் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டது. இணையம் என்பது நீலப் படங்களின் கடல். ஸ்மார்ட்போன்களின் வருகையால், எந்தப் பாடசாலைக் குழந்தையும் தாராளமாக நீலப் படங்களைப் பார்க்க முடிந்தது. இணையத்தில் நிறைய காட்டப்படுகிறது. சில சமயங்களில் எப்படி வெடிகுண்டுகள் தயாரிப்பது, மதுபானம் காய்ச்சுவது எப்படி என்று இணையத்தில் பார்க்கலாம். இதன் காரணமாக, பாடசாலைக் குழந்தைகள் உலகம் முழுவதும் நல்லது கெட்டது இரண்டையும் கிரகிக்க முடிந்தது. கடந்த காலங்களில் இந்த நாட்டில் பரவிய குற்றங்களும் பாரிய ஊழல்களும் இணையத்தில் கிடைக்கும் தரவுகளால் செல்வாக்குச் செலுத்தப்பட்டமை நாம் அறிந்ததே. ஆதனால் இன்று எந்தக் குழந்தையும் இணையத்தைப் பார்த்து எதையும் செய்ய முடியும். 

இணையம் மோசமானது என்று நாம் மட்டும் சொல்லவில்லை. இது ஒரு அறிவுக்கடல். அதுபோல் அசிங்கமும் ஒரு கடல்தான். அறிவுக்கும் அறியாமைக்கும் உள்ள வித்தியாசத்தை குழந்தைகளால் அறிய முடியாது. குழந்தைகள் அறிவை விட அசிங்கத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்றார்கள், ஏனெனில் அசிங்கம் மிகவும் தூண்டுகிறது. இது நம்மத்தில் சிறுவர்களிடையே மிகவும் பொதுவான நிலை. சாணக் குவியலையும், சோற்றுக்குவியலையும்; அடுத்தடுத்து வைக்கும் போது, சாணக் குவியலுக்கு அதிக ஈக்கள் வரும், அரிசிச் சோற்றுக்கல்ல.

உலகம் எப்படி மாறிவிட்டது என்பதை மேலே குறிப்பிட்டவற்றிலிருந்து நாம் அறியலாம். மாற்றப்பட்ட இந்த உலகத்தை உருவாக்குவதை விட நிர்வகிப்பது எளிது. உலகத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமானால், உலகம் அழிக்கப்பட வேண்டும், எல்லாவற்றையும் புதிதாக தொடங்க வேண்டும். ஆனால் உலகை நிர்வகித்தால், கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி அதனை முகாமை செய்ய மட்டும் முடியும்.

இன்று நவீன பாடசாலைகள் ஆபத்தான இடமாக மாறிவிட்டது. அங்கே ஆசிரியர்களால் மாணவர்களை துஷ;பிரயோகம் செய்யும் நிகழ்வுகள் பாடசாலை அமைப்பில் ஏராளமாக உள்ளன. இந்நிலையை மாற்றுவது சாத்தியமற்றது இதனை தடுக்க அனைவரும் விழிப்புடன் இருப்பது மட்டும் அவசியம். ஹலவத்தை பாடசாலை மாணவர் தலைவர்களின் கவனத்திற்கு விஸ்கி போத்தல் சிக்கியதால்;, அதனை பாடசாலைக்கு கொண்டு வந்த மாணவியின் எதிர்காலமும் உறுதியானது. இவைபோல் பலவற்றை நாம் சமுகம், நலன்விரும்பிகள், ரியூட்டறிகள், ஆலயம், கழகங்கள் என அனைவரும் கருசனையுடன் எமது எதிர்காலத்தை பாதுகாக்க முன்வரவேண்டும். 


0 comments:

Post a Comment