ADS 468x60

16 October 2022

நாம் வசதிபடைத்தவர்களா அல்லது வருமானம் குறைந்தவர்களா?

இன்று பொருளாதாரம் கற்பிக்கின்ற, பல பட்டங்களை பெற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கானர்கள் நம்மத்தியில் எப்படியோ மலிந்துவிட்டார்கள். ஆனால் அவர்களால் எமது சிறிய நாட்டின் பொருளாதாரச் சிக்கலைக்கூட விளங்காத மக்களுக்கு சொல்லிக்கொடுக்க முடியாத கல்வியால் வீட்டில் மாத்திரமல்ல நாட்டிலும் பல பிரச்சினைகள்! அது நாம் வசதியானவர்களா இல்லையா என்பதுதான் அந்தப்பிரச்சினை.

இலங்கையை நடுத்தர வருமான நிலையிலிருந்து நீக்குவதற்கு சந்தர்ப்பம் கோரி உலக வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது. 

அதாவது, இலங்கை இப்போது இருக்கும் இடத்திலிருந்து கீழே இறங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. மற்றவர்களின் பணத்தில் வாழும் பொய்யான பொய்யர்கள் மற்றும் திருடர்கள் இந்த சூழ்நிலையை விரும்பவில்லை என்பதையே இதிலிருந்து நாம் உணரலாம்.

மிக எளிமையான உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். பொருளாதார பணவீக்கம் தொடங்கும் முன் நீங்கள் ரூ.50,000 மாத வாடகைக்கு ஒரு வீட்டில் வசிக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம். பொருளாதார நெருக்கடி தொடங்கும் போது அந்த ரூ.50,000 கொடுக்க முடியாத நிலை தோன்றுகின்றது. 

ஏனெனில் பணவீக்கத்தால் 150 ரூபாய் விற்பனை செய்த ஒரு கிலோ பருப்பு,  350 ரூபாயாகவும், சுமார் 80 ரூபாயாக இருந்த ஒரு ரொட்டி 200 ரூபாயாகவும், 350 ரூபாயாக இருந்த பால் பவுடர் பக்கெட் 1160 ரூபாயாகவும், பெட்ரோல் மூன்று மடங்காகவும், அதுபோல் மின்சாரக் கட்டணமும் உயர்ந்துள்ளது. அனைத்து அத்தியாவசிப் பொருட்களின் விலையும் இன்று ஆகாசம் வரை உயர்ந்துள்ளது.

இன்று அனைத்து நுகர்வுப் பொருட்களும் மூன்று முதல் நான்கு மடங்கு விலை உயர்வு காரணமாக, 50,000 ரூபாய் வீட்டு வாடகையினை நாம் வளழைமபோல செலுத்த முடியாது. 

ஆகவே உங்கள் பணத்தில் நீங்கள் வாங்கக்கூடிய வாடகை வீட்டைக் கண்டுபிடிப்பதே இங்கு நீங்கள் செய்ய வேண்டிய சிறந்த விடயம். ஒரு வேளை அந்த வீடு கீழ் நடுத்தர அல்லது ஏழை மக்கள் வசிக்கும் பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள சிறிய மட்ட வீடாகக்கூட இருக்கலாம். 

ஐம்பது ஆயிரம் ரூபா பெறுமதியான வசதியான வீட்டை விட்டுவிட்டு குறைந்த வாடகைக்கு வசதி குறைந்த வீட்டைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கௌரவமான பணி. ஏனென்றால், ஐம்பதாயிரம் வாடகை கொடுக்க முடியாவிட்டால், வீட்டு வாடகைதாரர் தொடர்ந்து வந்து தொந்தரவுதர வாய்ப்புள்ளது. அப்படி இல்லரிடின் இவை நீதிமன்ற காவல்துறை ஆகியோர் மட்டும் கொண்டு செல்லும். எனவே, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து கீழே இறங்கக்கூடிய வசதி குறைந்த ஒரு வாழ்வை தேர்தெடுப்பதே மிகவும் பொருத்தமான சூழ்நிலை என்று நாங்கள் மீண்டும் கூறுகிறோம்.

இலங்கை தன்னால் அதனது இயலுமைக்கு முடியாத காரியங்களைச் செய்வதால் பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் இந்த நெருக்கடி நிலையில் எங்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் நாட்டில் நாங்கள் நெடுஞ்சாலையை அமைக்க வேண்டியிருந்தது. 

இன்று இந்த நெடுஞ்சாலை வெறுமனே வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் அவர்களால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போயுள்ளது. 

இது ஒரு நேர்மறையான அபிவிருத்திச் செயலாக இருந்தாலும், மத்தள விமான நிலையம் ஐந்து சதத்துக்கும் மதிப்பிலான வேலை அல்ல. இருப்பினும் இன்று, விமான நிலையம் ஒரு வெறிச்சோடிய களமாக உள்ளது.

உலகின் பல நாடுகளில் இவ்வாறு கைவிடப்பட்ட புத்தம் புதிய விமான நிலையங்கள் உள்ளன. எனவே, நடுத்தர வருமான மட்டத்திலிருந்து கீழ் வருமான நிலைக்குச் செல்வது எந்த வகையிலும் வெட்கப்பட வேண்டிய விடயம் அல்ல. நமக்கு சாப்பாடு போதவில்லை என்றால் மற்றவரிடம் சொல்லும் போது ஒரு துண்டு ரொட்டியாவது கிடைக்கும். ஆனால் அப்படிச் சொல்லாதபோது வெறும் பட்டினி கிடக்க வாய்ப்பிருக்கிறது. 

ஒரு நாடு தனது வறுமை நிலையை அறிவித்து, குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற விரும்பினால், அது சர்வதேச சமூகத்திலிருந்து பல நன்மைகளைப் பெற முடியும். அதைப் பற்றி விளக்குவதற்கு முன், குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை ஆராய வேண்டியது அவசியம்.

உலகில் வளர்ந்து வரும் நாடுகள் என்று ஒரு பொருளாதார முறமை; இருக்கின்றன. அத்தகைய நாடுகள் நிரந்தரமாக இறையாண்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த நாட்டின் தொழில்துறை அடித்தளம் மிகவும் வளர்ச்சியடையாததாகவும். மேலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அந்த நாட்டில் மனித வளர்ச்சி குறைவாகவும் இருக்கும். இது ஒரு அடிப்படைக் கருத்து என்பதால் சில சொற்பொருளை சில அறிஞர்கள் இதை ஏற்கத் தயங்குகிறார்கள். சில அறிஞர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். 

ஒரு நாட்டின் தனிநபர் மொத்த தேசிய வருமானத்தின் அளவின்படி, நான்கு பிரிவுகள் உள்ளன: உயர் பொருளாதாரம் கொண்ட நாடுகள், மேல் நடுத்தர பொருளாதாரம் கொண்ட நாடுகள், குறைந்த நடுத்தர பொருளாதாரம் கொண்ட நாடுகள் மற்றும் குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடுகள். சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அளவுகோல்களின்படி, இலங்கை ஒரு வளரும் அல்லது வளர்ந்துவரும் நாடு.

கொரோனா, நிதி மோசடி, ஊழல் இல்லாத ஒரே அரசாங்கத்தின் கீழ் இந்த நாட்டை பத்து வருடங்கள் முன்னோக்கி கொண்டு செல்ல முடிந்தால், இந்த நாடு அமெரிக்கா, கனடா, ஜப்பான் அல்லது ஆஸ்திரேலியா போன்று வளர்ந்த நாடாக மாறியிருக்கும். 

ஆனால் நமது பூர்வ கர்மம் இல்லாத காரணத்தினாலோ அல்லது வேறு சில ரகசிய விடயங்களினாலோ நம் நாடு அந்தப் பயணத்தினை நோக்கிச் செல்ல முடியவில்லை. 

கோவிட் -19 பரவல் மற்றும் அரசாங்கத்தில் நீண்டகால ஊழல் மோசடி, கோவிட் -19 க்குப் பின்னரான நாட்டின் சுற்றுலா மற்றும் ஆடைத் தொழில் வீழ்ச்சி, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் வேலை இழப்பு மற்றும் அங்கு வேலை செய்பவர்கள் கூட டொலர்களை அனுப்பாத நிலை காரணமாக நாம் படிப்படியாக வளர்ந்துவரும் நாடு என்ற அந்தஸ்த்தில் இருந்து படிப்படியாகக் குறையத் தொடங்குகிறோம். 

வெளிநாட்டில் வாங்கிய கடனுக்கான தவணை மற்றும் வட்டியைக் கூட கட்ட முடியாமல் இன்னும் கீழே இறங்கினோம். எனவே, அமைச்சரவை அறிவித்ததோ இல்லையோ, நடுத்தர வருமானம் பெறும் நாட்டிலிருந்து குறைந்த வருமானம் பெறும் நாடாக தரம் குறைந்துள்ளோம்;. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நடுத்தர வருமானம் பெறும் சூழ்நிலையில் அரை ஏழ்மையான நாடாக ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கிடைத்தால், குறைந்த வட்டியில் கடன் பெறலாம். வளர்ச்சிக்காக வெளிநாடுகளில் இருந்து மானியம் பெறலாம். கல்வி மற்றும் உணவுக்காக வெளிநாட்டில் இருந்து உதவி கிடைக்கும். 

இந்த நிலையில் சிறிது காலம் கழித்து, ஊழலில் இருந்து விலகி, நேர்மையான நோக்கத்துடன் செயல்பட்டால், மீண்டும் நடுத்தர வருமானம் பெறும் நாடாக பதிவு செய்ய முடியும். பிச்சைக்காரனாக இருப்பது சில நேரங்களில் அவமானகரமான விடயம்தான். சில சமயம் அது உதவியாகவும் அமையும்;. ஏனெனில் பிச்சைக்காரனுக்கு வாடகை இல்லை. அவர் பிச்சைக்காக தனக்கான உணவைப் பெறுகிறார். அவர் ஒரு நாளைக்கு ஏழாயிரம் அல்லது எட்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார், ஆனால் முறையான ஊதியம் பெறுபவர்களைப் போல தேவையற்ற செலவு செய்வதில்லை. இதனால், பிச்சைக்காரன் சுகமான நிலையில் வாழ முடியும்;. ஆனால் ஒரு நாடு தொடர்ந்து பிச்சைக்காரனாக இருக்க முடியாது இல்லைதானே.

சில அரசியல் இலாபங்களுக்காக தமது சமுகத்தை அபிவிருத்திநோக்கி வழிகாட்டாத தலைவர்களை நாம் இந்த இடங்களில் அடையாளங் காணவேண்டும். குறிப்பாக எமது தமிழ் சமுகம் பல காலம் இந்த நிலையிலேயே இருப்பது, நாம் மகிழ்ச்சிப்படும் ஒரு விடயமல்ல, அவமானப்படும் ஒன்று. நமது பல சகோதரர்கள் மேலைத்தேய நாடுகளில் கல்வி, வர்த்தகத்தில் மிகச் சிறந்து விளங்கி இன்று உலகத்துக்கு உதாரணங்களாக திகழவில்லையா. அத்தனை வீரியம்வாய்ந்த மனித வளங்கள் நாம். நமக்கு அந்தச் சந்தர்ப்பத்தினையும், வசதிகளையும் மற்றும் தொடர்புகளையும் பெற்றுக்கொடுக்க தவறியமையே அதற்கான காரணம். மாற்றிக்கொள்வோம் மாற்றுவோம். 


0 comments:

Post a Comment