10 January 2011
வெள்ளம் அபிவிருத்தியை புறந்தள்ளும் அனர்த்தமாகினால்...
04 January 2011
ஆசியாவை வறுமைக்கோட்டின் கீழ் இழுத்துச் செல்லும் உலக பொருளாதார நெருக்கடி.
இன்று தலையின் மேல் கை வைத்து வியக்கும் அளவுக்கு ஆசியாவின் வறுமை நிலைமை உலக அளவில் ஏற்ப்பட்டிருக்கும் பொருளாதார மந்தத்தினால் (Global economic slowdown) அதளபாதாளத்துக்கு சென்றுகொண்டிருக்கின்றது என பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இன்று ஆசியாவில் சுமார் ஒரு பில்லியன் மக்கள் மீழமுடியாத வறுமைக்குட்பட்டுள்ளதோடு(Abject poverty), ஏற்றுமதி நோக்கிய வளர்சியில்;(Export-led growth) ஏற்ப்பட்ட பெரும் சரிவு காரணமாக இந்நாடுகளில் பலர் தங்களது வேலையை இழந்து பரிதவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறு இருப்பினும் இன்று உலகலாவிய ரீதியில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடிகளின் விளைவாக ஆசியாவில் நலிவுற்றவர்களே குறிப்பிடத்தக்க அளவு வறுமையின் பிடியில் தள்ளப்பட்டுள்ளனர்.
வறுமைப் பொறிக்குள் போகும் அபாயம்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையின்படி ஆசியாவில் 1997-1998 காலப்பகுதியில் ஏற்ப்பட்ட நிதி நெருக்கடியினால் மொத்த ஆசியாவின் வளர்ச்சிப்போக்கு எதிப்பார்க்காதபடி 3மூ தொடங்கி 3.4% அளவுக்குள் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது எனக் குறிப்பிப்படுகிறது. இருப்பினும் இவற்றில் இருந்தான மீட்சி ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்ப்பட்ட நெருக்கடிகளின் ஆழ, அகலத்தினைப் பொறுத்தும், ஆசியாவின் ஏற்றுமதிச்சந்தையின் 60% இலுமே இது தங்கி உள்ளது.
உன்மையில் ஆசியாவில் மெதுவான பொருளாதார வளர்ச்சி என்பது, இங்கு 60 மில்லியன் மக்ககள் தொடர்சியாக வறுமைப் பொறிக்குள் (Poverty Trap) தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதனைக் குறிக்கின்றது. இதிலிருந்து நாம் ஒன்றை விளங்கிக்கொள்ளலாம் அதாவது ஆசியாவின் பொருளாதாரம் தொடர்சியாக ஆரம்பத்தில் ஒரு நெருக்கடியான நிலையில் இருந்து வந்துள்ளது, காரணம் இவ்வறுமை அவர்களுக்கு தெரியாமலேயே பொறிக்குள் சிக்கவைத்துள்ளது என ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டுகின்றது.
இன்னும் ஒரு அதிர்ச்சிதரும் தகவலை ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்டிருந்தது அதாவது தெற்காசியாவில் வறியவர்களின் எண்ணிக்கை மற்றும் வறுமையின் அளவு இவை இரண்டும் மிக வேகமாக இன்னும் ஒரு தொகை நலிவுற்ரோர் வர்க்கத்தினை உருவாக்கிவிடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்காசியாவின் பொருளாதார வளர்சியை மந்த கதியிலேயே வைத்திருக்கும் என்றும் என்றும் எதிர்வு கூறியிருக்கிறது.
இன்றய நிலையில் உலகலாவிய பொருளாதார வீழ்ச்சி (Global economic downturn) குறிப்பாக மிகமோசமாக வறியவர்களையே குறிவைத்து தாக்கி இருக்கின்றது. 2007 இல் உணவுப் பொருட்களின் விலை, பெற்றோலியப் பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் குறைந்திருந்தாலும் அது வறிய மக்ககின் வாழ்கைத்தரத்தில் எதுவித மாற்றத்தினையும் தோற்றுவிக்கவில்லை என்றே கூறவேண்டும்.
வாழ்கைத்தர மாற்றம்..
இலண்டனில் உள்ள அபிவிருத்தி கற்கைகளுக்கான அமையம் (Institution of development studies) தெரிவு செய்யப்பட்ட, குறிப்பாக வங்களாதேஸ் மற்றும் இந்தோனேசியா உள்ளடங்கலாக 5 நாடுகளிடையே வறிய கிராமப் புறங்களில் மற்றும் நகரப்புற சமுகங்களிடையே நடத்தப்பட்ட கள ஆய்வில் கிராமப் புறங்களில் வாழுகின்ற மக்கள் அடிக்கடி மிகக் குறைவான உணவினையே உட்கொள்கின்றனர் அத்துடன் குறைவான சத்துள்ள மற்றும் வேறுவகையான உணவுகளையே உண்ணுகின்றனர்; எனவும் கண்டுள்ளனர். மேலும் அனேகமானவர்கள் தாங்கள் சுயமாக தயார் செய்கின்ற மருந்து வகைகளையே பாவிப்பதாயும் உயர்வான நல்ல மருந்துப் பொருட்கள் அவர்கள் பாவிப்பதற்கு வசதியற்றுள்ளனர் என்றும் அறியப்பட்டுள்ளது. இவர்களத பிள்ளைகளில் அனேகமானவர்கள் பாடசாலையை இடைநடுவில் விட்டுச் செல்கின்றவர்களாகவும் ஏனையோர் அவர்களது வசதிக்கு ஏற்ப்ப மதரசா (Madarasa School) சமயப் பள்ளிகளில் கற்று வருகின்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலக பொருளாதாரத்தினில் ஆசியாவின் தொழில்துறைப்போக்கு.
குறைந்துவரும் கைத்தொழிற்துறை ஏற்றுமதி வர்த்தகத்தினால் பல கம்பனிகள் மூடிவிடுகின்ற நிலையில் காணப்படுவதோடு, திடீh எனப் பலதொழிலாளர்கள் தங்களத தொழிலினையும் படிப்படியாக இழந்துவருகின்றனர் (Layoff), அத்துடன் வழங்கல் செயற்ப்பாட்டில் (Supply chain) பல இடர்பாடுகளும் ஏற்ப்பட்டு வருகின்றது. இவற்றில் தங்கி இருக்கும் உள்நாட்டு வியாபாரம் சிதைவடைந்து வருகின்றது. இவை வளர்சியடைந்துள்ள நாடுகளின் மந்த நிலையை மேலும் அதிகரித்து வருகின்றது.
2008 கடைசிப்பகுதிகளில் இருந்து தங்களது வேலைக்கான உடன்படிக்கை புதுப்பிக்காமை காரணமாக இடம்பெயர்ந்த ஏற்றுமதித்துறை ஊழியர்கள் குறிப்பாக ஜகார்த்தா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அவர்களது வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். ஏனையோரது வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சுட்டப்படி இயங்கும் கம்பனிகள் போலல்லாது யகார்த்தா போன்ற நகரங்களில் புதிய வேலைவாய்ப்புகள் இருந்தன ஆனால் அவை தரம் குறைந்தனவாகவும், தொழில் பாதுகாப்பு இல்லாததாகவும் இருந்தன என டாக்கா தொழிலாளர்கள் முறையிட்டிருந்தனர்.
இந்த நிலமை களிமண்டன், இந்தோனேசியா போன்ற நாட்டில் உள்ளவர்களிடம் சட்டவிரோதமாக கடத்தல், தங்கம் அகழ்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரிக்க காரணமாகியது. ஆண்மையில் சைனாவின் அறிக்கைப்படி ஏற்றுமதியில் ஏற்ப்பட்ட தொடர் சரிவு காரணமாக சங்காய், குவான்கோ போன்ற நகரங்களில் ஏற்றுமதி சார்ந்த( Export Oriented) நிறுவனங்கள் 1000க்கு 10 மூடிவிடப்பட்டதாகவும், இதனால் 20 மில்லியன் பேர் தங்கள் தொழிலை இழந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக பொருளாதார நெருக்கடியும் இடப்பெயர்வும்.
ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் குடிபெயர்ந்துவாழ்வபர்களின் பிளைப்பு மட்டம் பொருளாதார நெருக்கடி காரணமாக 2008 உடன் ஒப்பிடும்பொழுது 2009 இல் குறைவடைந்துள்ளது. குறிப்பாக உள்நாட்டு மொத்த வருமானத்தின் பெரும் புகுதி வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் மூலமே அன்னிய வருவாயாகக் கிடைக்கின்றது. ஆனால் இவை குறைவடைந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் IBON இன் அறிக்கைப்படி 20 நாடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் 11 நாடுகளின் வருமானம் மிகமோசமாகக் குறைவடைந்துள்ளது, இது அன்னியச் செலாவணிவருவாயில் 96% ஆகும் என்றும் கூறுகின்றது.
இன்னொரு பக்கம் தெற்காசிய நாடுகளில் இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்த்தான் போன்ற நாடுகளில் அன்னியச் செலாவணி வருவாய் 2008 இல் 16 விகிதமாய் இருந்து 2009 நடுப்பகுதியில் பூச்சியமாக குறைவடைந்துள்ளது. இத்துடன் சர்வதேச ஊழியச் சந்தையில் (International labor market) ஏற்ப்பட்ட அழுத்தம் வங்காளதேசினால் உணரப்பட்டது. இதன் காரணமாக வெளிநாடுகளில் தொழில் புரிந்த 400,000 தொழிலாளர்களில் 200,000 ஊழியர்கள் தொழில் இழந்து நாடு திரும்பும் ஒரு நிலையை உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்ப்படுத்தி இருந்தது என லொவி நிலையம் குறிப்பிடுகின்றது.
இந்நெருக்கடி குறைந்த வருமானத்தில் வேலைபுரிபவர்களின் அளவினை 2007 இலிருந்து 2009க்கு இடையில் 50 மில்லியனில் இருந்து 120 மில்லியனாக உயர்த்தி உள்ளது என ILO சுட்டிக்காட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக ஆடைக்கைத்தொழில் துறை, மின் பொருட்கள் உற்ப்பத்தி செய்யதல் என்பனவற்றில் தொழில்புரியும் பெண்கள் மிகமோசமாகப் பாதிப்படைந்துள்ளனர்.
IDS இன் ஆய்வறிக்கையின் பிரகாரம் அநேகமான குடும்பங்களிடையே மன அழுத்தம், வீட்டு வன்முறை (Domestic Violence) மற்றும் உள்ழூர் குழுக்களுக்கிடையிலான கலவரம் என்பன அதிகரித்து இருக்கிறது. தவிரவும் சிறு அளவிலான வன்முறை, அல்ககோல் பாவனை, போதைவஸ்த்து பாவனை, கைவிடப்பட்ட சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் என்பன அதிகரித்து காணப்படுவதாக சுட்டிக்காட்டுகிறது. இந்நெருக்கடியில் வறியமக்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை சாதாரண பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே உன்மையில் நடைமுறையில் உள்ள உலக பொருளாதார நெருக்கடி ஒன்றை எங்களுக்கு கோடிட்டுக் காட்டுகின்றது. அதாவது அதிகரித்து வரும் நாடுகளுக்கிடையேயான தங்கி இருக்கின்ற நிலமை (ஐவெநசனநிநனெயnஉந), பெற்றோலியப் பொருட்களின் பாவனை என்பனவற்றின் மீதான கட்டாயமான ஈடுபாடு என்பன பொருளாதார நெருக்கடியில் இருந்தான மீட்சியை குறுக்கிவிடுகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. இருப்பினும் அச்சப்படவேண்டியது என்னவெனில் இந்த பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக பூதாகரமாக வளர்ந்து வரும் வறுமையை ஒளிக்க இவ்வாசிய நாடுகளிடம் முன்னாயத்த திட்டங்கள் சரியாக இல்லை என்பதுதான்.
கிளிமாஞ்சாரோ மலைக்கனி மாஞ்சாரோ
உலகம் அழகிய போர்வையினால் போர்த்தப்பட்டுள்ளது, இங்கு விசித்திரமான, அதிசயமான பல இடங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் நாம் காணாவிட்டாலும் கலைஞர்களின், கவிஞ்ஞர்களின் மனக்கண்ணில் படத்தவறுவதில்லை.
எடுததுக்காட்டாக சங்கரின் 'எந்திரன்' படப்பாடலில் வருகின்ற 'கிளிமாஞ்சாரோ' மிகவும் அழகிய அதிசயமான, மிகப் பெரிய நகரும் பனிமலை. அது இற்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றுப்பதிவுகளை கொண்ட பழமைவாய்ந்த ஒன்றாகும்.
இது எங்கு அமைந்திருக்கின்றதென்றால், புவிமத்திய கோட்டுக்கு அண்மையில், தான்சான்யா மற்றும் கென்யாவின் தேசிய பூங்காவாக வெண்ணிற வானத்தை உருக்கி வார்த்த பளிங்கு கண்ணாடிபோல் அழகாகக் காட்சி தருகின்றது. அதனால்தான் கவிப்பேரசு ஐஸ்வரிராய்கே ஐஸ் வைச்சிட்டாராக்கும். இதில் இன்னொரு விடயம் என்னவெனில் ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல் இருக்கும் இப்பனிமலை மெது மெதுவாக நகரும் தன்மையுடையது. இதன் உச்சியில் ஏறுகின்றவர்களுக்கு அந்த உணர்வினை அறியக்கூடியதாக இருக்கிறதாம்.
இந்த கிளிமாஞ்சரோவின் வசீகரத்தன்மை ஆறறிவு கொண்ட மனிதர்களை மட்டும் ஈர்க்கவில்லை, மேலாக ஐந்தறிவு கொண்ட ஜீவன்களையும் கொள்ளை கொண்டுள்ளது. அதனால்தான் இங்கு பலலெட்சக்கணக்கான வனஜீவராசிகள் நிறையவே சந்தோசமாக உலவித்திரியும் சுதந்திர பூங்காவும் கூட இருக்கிறதாம்.
இருப்பினும் நம்ம ஆளுகள் சூழலுக்கு செய்கின்ற அநியாயங்கள் மீண்டும் விட்டெறியும் பந்துவோல் நம்மையே வந்து சேருகின்றன. காலநிலையில் ஏற்ப்படடுவரும் மிகப்பாரிய மாற்றங்கள் காரணமாக இந்த அழகிய கிளிமாஞ்சாரோ மலைக்கனி மாஞ்சாரோ உருகி குறையத் தொடங்கி வருகிதாம். அப்படியானால் இவற்றை அண்டி வாழ்கின்ற தொல்லை கொடுக்காத ஐந்தறிவு ஜீவன்களின் நிலை என்னவாகும்? அழகு அழகாக இருக்கும்வரை ஒன்னுமில்லை, அது ஆபத்தாக மாறினால் எல்லாம் கேள்விக்குறிதான்.
03 January 2011
பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஒரு பொக்கிசம்..
உலகத்தமிழர் மத்தியில பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை என்னைக்கவர்ந்த ஒரு சிறந்த பேராற்றல் படைத்தவர்;. அவர் ஆரம்பத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு சாதாரண விரிவுரையாளராக இருந்து, தனது இலக்குகளையும் தாண்டி முதுநிலை விரிவுரையாளர், தலைவர், பீடாதுபதி, உபவேந்தர் இன்னும் எத்தனை எத்தனையோ பதவிகளில் ஜொலித்து, 102 பல்கலைக்கழளங்களில் வருகை விரிவுரையாளராக தனது பிளிந்த ஞானத்தை உலகறியச் செய்யும் தமிழ் மகன் என்றால் அது மிகையல்ல. அவரிடம் எனக்கு உரையாடி படிக்க கிடைத்ததை இட்டு நான் பெருமைப்படாமல் இருக்கமுடியவில்லை.
கிழக்குப் பல்கலைக்கழகம் ஒழுங்குபண்ணி இருந்த சர்வதேச ரீதியான மூன்று நாள் பயிற்சிப்பட்டறையில் மின்னும் பொன்னாக, அறிவுச்சுடராக பிரகாசித்தவர் மதிப்புக்கும், அன்புக்கும் உரிய பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளையவர்களாவார்.
பயிற்சிப்பட்டறை “Revitalization the Management Practices” எனும் தலைப்பில் கி.ப.க.கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அறிவுப்பசிக்கு தீனிபோடுவதுபோல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான கலாநிகள் மற்றும் பேராசிரியர்கள் விரிவுரைகள் அமைந்திருந்தன.
இருந்த போதும் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் ஒரு வினோதமான, புதுமையான ஒரு விடயத்தினை கூறி இருந்தது அனைவரையும் வியக்கவைத்தது. அதுதான் 'ஆறுமுகம் கெண்செப்ற்' (Arumugam Concept)…. ஆகா என்னடா இது என்று எண்ணிவிடாதீர்கள் ஆமாம் ஒரு முகாமையாளர் தான் கொண்டிருக்கவேண்டிய ஆறு வகை தகுதிகளை அருனகிரிநாதரின் திருப்புகளில் இருந்து பிளிந்ந்து தந்தது அவரின் புலமைக்கு எடுத்துக்காட்டானதுங்க.
அந்த திருப்புகள் எல்லோர்க்கும் தெரிந்த ஒன்னுதான்.
1.'ஏறுமயில் ஏறுவிளையாடு முகம் ஒன்று' முருகன் மயில் ஏறி விளையாடுவதில் படு கில்லாடி, இதை முகாமையாளர் ஒருவருடன் ஒப்பிடுவோம் என்றால் அவர்; தனது துறையில் அத்துப்படியாக இருக்கவேனும். உதாரணத்துக்கு ஒரு விற்பனை முகாமையாளர் விற்பனைத்துறை சார்ந்த அனைத்தும் தெரிந்து இருக்கனும்.
2.'ஈசருடன் ஞான மொழிபேசு முகம் ஒன்று' முருகன் சிறுவனாய் இருந்தாலும் தகப்பன் சாமி என்று பேரெடுத்தவர் அல்லவா. அதுபோல முகாமையாளர் தான் அனைத்து தரப்பினருடனும் பேசும் வான்மை கொண்டிருக்கவேணும். அது தனது நிறுவனத்தின் லாபத்தினை நல்ல முறையில் நடத்தவல்லது.
3.'கூறுமடியார்கள் வினைதீர்த்த முகம்ஒன்று' முருகன் தன்னை நாடிவருகின்றவர் எவராயினும் அருள்கூர்ந்து அரவணைப்பவர். அதுபோலவே முகாமையாளர் தன்னை நாடிவருகின்ற சக ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேணும்.
4.'குண்டுருக வேல்வாங்கி நின்றமுகமொன்று' தான் பிரச்சினைகள் வருகின்றபோது சத்திவேல் கையில் ஏந்தி அவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் சத்தி படைத்தவர் என்று போற்றப்படுகிறார். அதுபோலவே ஒரு முகாமையாளர் தனக்கு எழுகின்ற பிரச்சினைக்கு அஞ்சாமல் எதிர்துநிற்கும் செல்வாக்கு அவரிடம் இருக்கவேண்டும்.
5.'மாறுபடு சூரரை வதைத்தமுகமொன்று' தனக்கும், தன்னை சூழ உள்ள அடியவர்களுக்கும் துன்பம் விளைத்த அசுரர்களை துவம்சம் செய்யும் முகமும் முருகனுக்கு இருக்கிறது, என்று அருனகிரியார் சொல்லுவதுபோல், ஒரு பணியகத்தினில். ஒரு முகாமையாளர் பிரச்சினைகளைக்கண்டு அஞ்சி விலகி ஓடக்கூடாது அவற்றை தனது திறமையால் வென்று பிரச்சினைக்குரியவர்களை களையெடுக்கும் ஆற்றலும் அவருக்கு இருக்கவேணும்..
6.'வள்ளியை மணம்புரிய வந்தமுகம் ஒன்று' முருகன் ஒரு திருவிளையாடல் செய்யும் தமிழ்க்கடவுள்.. அவர் தான் சந்தோசமாக இருக்கவும் பிறரை சந்தோசமாக வைத்திருக்கவும் தவறியதில்லை. இது போன்றே ஒரு முகாமையாளர் எந்த நேரமும் வேலை வேலை என்று இருந்தால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சரியான வெளியீட்டினைக் காட்டமாட்டார்கள். ஆதனால் சுற்றுப்பிரயாணங்கள், ஒன்றுகூடல்கள் போன்ற களிப்பூட்டும் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யவும் தெரிந்து இருக்கனுமாம்.
அப்பப்பா என்ன விளக்கம், எல்லோரும் வியப்போடும் விருப்போடும் கேட்டுக்கொண்டு இருந்தனர். ஆறுமுகம் ஒரு முகாமையாளர்கு தேவைதான் என்றும் தானும் அதனைத்தனது வாழ்வில் கடைப்பிடித்துத்தான் ஜெயித்து வருவதாகவும்.. பிராந்திய அபிவிருத்திக்கு இவ்வாறு தேர்சி பெற்ற தலைவர்களின் பங்களிப்பே உதவும் எனவும் கூறியமை புதுமையிலும் புதுமையே..
கொல்லும் சுழிகாற்று
அனர்த்தம்,
இயற்கையால்,
செயற்கையால்,
பெண்ணால்...
இயற்கை அனர்த்தம்,
முன்னாயத்த கோபுரம் எச்சரிக்கும்,
ஓரிடம் இருந்து இன்னோர்
இடம் மாறலாம்..,
உயிர் வாழ
நிவாரணம் பெறலாம்,
பெண்ணனர்த்தம்,
எச்சரிக்கை கோபுரங்கள் இல்லை...
இடம் விட்டு இடமில்லை,
உயிர் சாக
நிவாரணம் பெறலாம்..,
இதுகள் உயிரை
மெதுவாகக்
கொல்லும் சுழிகாற்று...
.
இயற்கையால்,
செயற்கையால்,
பெண்ணால்...
இயற்கை அனர்த்தம்,
முன்னாயத்த கோபுரம் எச்சரிக்கும்,
ஓரிடம் இருந்து இன்னோர்
இடம் மாறலாம்..,
உயிர் வாழ
நிவாரணம் பெறலாம்,
பெண்ணனர்த்தம்,
எச்சரிக்கை கோபுரங்கள் இல்லை...
இடம் விட்டு இடமில்லை,
உயிர் சாக
நிவாரணம் பெறலாம்..,
இதுகள் உயிரை
மெதுவாகக்
கொல்லும் சுழிகாற்று...
.
காதல் ஆறுமா
காயம் ஆறலாம் காதல் ஆறுமா
மாய உலகிது மாற்றம் நியதியோ!
இன்று என்னுடையது
நாளை வேறொருவனுக்கோ!
எது நடங்ததோ, நடக்கிறதோ!
நடக்கப்போகுதோ....
எல்லாம் ஏமாற்றமே!!!........
மாற்றம் ஏதடா?
வாழ்கை வீணடா!..
பொய்யே மேலடா!...
மாய உலகிது மாற்றம் நியதியோ!
இன்று என்னுடையது
நாளை வேறொருவனுக்கோ!
எது நடங்ததோ, நடக்கிறதோ!
நடக்கப்போகுதோ....
எல்லாம் ஏமாற்றமே!!!........
மாற்றம் ஏதடா?
வாழ்கை வீணடா!..
பொய்யே மேலடா!...
01 January 2011
இணையத்தில் சிறுவர்களை பாதுகாப்போம்.
அனைவர்க்கும் இனிக்கும் இனிய 2011 புத்தாண்டு வாழ்துக்களுடன் ஒருவிடயத்தினை பதிவிடலாம் என்று நினைக்கிறேன். புத்தாண்டுப் பொலிவுடன் நல்லதை செய்ய நினைப்போம் என்றால் நம்ம சின்னஞ்சிறுசிகள்தான் வருதுகள்..ஏனா அவங்கதான் நம்ம எதிர்கால சொத்து இல்லயா..அதால அவங்கள இந்த மோசமான இன்ரர்நெற் பாவனையில் இருந்து பாதுகாப்பது நமது கடமை அல்லவா!
இணையம் என்பது உலகலாவில் பரந்துபட்ட ஓர் வலையமைப்பு ஆகும். இணையத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் காணக்கிடைத்தாலும் அதற்கு நிகராக தீய விடயங்களும் காணப்படத்தான் செய்கின்றன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாக சிறுவர்கள் காணப்படுகின்றனர். இணையத்தின் உண்மைத்தன்மையை புரியக்கூடிய வயது அவர்களுக்கு இல்லாத பட்சத்தில் தற்போது சமூக வலையமைப்புக்கள் மற்றும் அரட்டை அறைகள் போன்றவற்றிலே அதிகமான தவறுகள் நடக்குமிடமாக காணப்படுகின்றது.
கட்டிளமைப்பருவத்தில் அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என புரிந்து கொள்வது கடினமாகவிருக்கும், ஆனால் இதுவே அவர்களின் வாழ்க்கையை பாதாளத்துக்கு இட்டுச்சென்று விடும். பெற்றோர் இது தொடர்பாக கவனமெடுக்கவேண்டும்.சிறுவர்களை இணைய செயற்பாடுகளில் இருந்து பாதுகாப்பதற்கு மேலத்தேய நாடுகளில் கடினமான சட்டங்கள் அமுலில் உள்ளது. எனினும் பாதிக்கப்படுபவர்கள் பாதிக்கப்பட்டுக கொண்டுதான் இருக்கின்றனர்.
சரி நாம் இனி இவற்றில் இருந்து எப்படி சிறுவர்களை பாதுகாக்கலாம் என பார்ப்போம்.வீடுகளில் சிறுவர்கள் இணையத்திளை பாவிக்கும் சந்தர்ப்பங்களில் பில்டர்களினை (Cyper patrol) உபயோகிக்கலாம். உதாரணமாக தேடுபொறிகள் அதிகமாக ஆபாசத் தளங்களையே முன்னிலைப்படுத்திக்’ காட்டும் ஏனெனில் அதுதான் அவர்களின் விளம்பர உத்தி.
நாம் இவ் பில்டர்களை பாவிக்கும் போது நாம் குறிப்பிட்ட சொற்களை இணையத்தில் காட்டாத பிரசுரிக்காத வண்ணம் நாம் செய்து கொள்ளலாம். மற்றும் சிறுவர்களின் நடவடிக்கைகளினை இணையத்தில் கண்காணிப்பதற்கு கீலெக்கர்களினை (Key logger) உபயோகிக்கலாம். இவை கணணியை இயக்கியதில் இருந்து அவர் கணணியில் என்ன செய்கிறார் என்கின்ற அனைத்து தரவுகளையும் அவருக்குத் தெரியமால் இவை சேமிக்கும். தேவையெனில் நிமிடத்துக்கொரு தரம் கணணியில் என்ன செய்கிறார் என்னபதனை Screen Shot மூலமாக பிடித்து சேமித்தும் வைக்கக் கூடியவை இந்த கீ nyhக்கர்கள்.
இவற்றினை உபயோகிப்தன் மூலம் சிறார்களுக்கு தெரியமாலே அவர்களினை நாம் பாதுகாக்கலாம். குறித்த மென் பொருட்களை தரவிறக்கம் செய்ய கீழ் உள்ளவற்றை பார்க்கவும்.
Actualspy Keylogger
Cyper patrol