ADS 468x60

10 October 2018

சாரல் மழை ஒரு பக்கம் காரல் மழை மறுபக்கம்


இப்பொழுது மட்டு மண்ணின் கரையோரங்களில் உள்ள கரைவலை பாடுகள் உள்ள ஊர்களில் சிறியரக மீன்கள் அள்ளா கொள்ளையாக பட்டு நிரம்பி வழியத் துவங்கியுள்ளன. மக்கள் அவற்றை  உண்ணுவதற்கு வாய்ப்பாக உள்ளது, ஏனெனில் பெரிய மீன்கள் பட்டால் பொரியலுக்கும் கிடைக்காமல் அவ்வளவு மீன்களையும் மாற்றான் உண்டுமகிழ ஏற்றிவிடும் நடைமுறை, எமது வளத்தைப் பயன்படுத்தி நாம் நிறைவு காணமுன் ஏற்றுமதி செய்யும் நிலை நிறுத்தப்படனும். 

07 October 2018

அனர்த்தங்களில் நலிவுறும் நிலையை முகாமை செய்வதே வறுமைக் குறைப்புக்கான மூலோபாயம்.


Image result for disaster resilience people sri lankaஇன்று எமது நாட்டினைப் பொறுத்தளவில் பொருளாதாரச் சவால்கள் பல காரணங்களால் மிகப்பெரிய அபாயமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கும் பேரனர்த்தங்கள் அவற்றை தாங்கக்கூடிய திறனை பல அனுபவங்களினூடாகவும், விழிப்புணர்வுகள் மூலமாகவும் இன்று எமது மக்கள் வளர்த்துக்கொண்டுள்ளனர்.

உண்மையில் நாட்டின் மக்கள், தங்கள் தங்கள் வருமான உறுதிப்பாட்டினை கொண்டுள்ள தருணத்தினில், ஓர் அனர்த்தம் ஏற்படுமானால் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பலத்தினைக் அவர்கள் கொண்டிருப்பதுடன் ஏனையவர்க்கும் அவற்றைக் கொண்டு நேரத்துக்கு உதவும் ஒரு திறனைக் கொண்டிருப்பர். இந்த திறன் நாட்டின் அபிவிருத்திக்கான உந்து சக்தியாகவும் அதேபோல் வறுமைக்கு எதிராக போராடும் திறனாகவும் பார்க்கப்படுகின்றது.

05 October 2018

மனதுள்ள ஆசான் வழிகாட்டும் ஈசன்


என்னை ஏற்றிய எல்லா குருமாருக்கும் ஆசிாியா் தின வாழ்த்துக்கள்!
-------------------------------------------------------------------
நல்ல வழியை காட்டி வளர்க்கும் தெய்வங்களே! -இந்த
நாட்டில் கல்விச் செல்வம் பெருக நாளும் உழைக்கும் தேவர்களே!
கடல் போன்ற அறிவை- சிறு
குறல் போல புகட்டி
மலை போன்ற திறனை - குறுஞ்
சிலை போல ஊட்டி
ஒளியூட்டும் குருமாரை தெழிவாகப் பணிந்தால்
உருவாகும் நல்ல எதிர்காலம் நமக்கு!

04 October 2018

பேருக்கு ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள் பேராசிரியர்களாக சிலரே இருக்கின்றனர்.

Image result for kids under teacher' salary indiaதன்னம்பிக்கை, பண்பு, ஆற்றல், ஒழுக்கம், ஊக்கம், விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை 'ஆசிரியர் தினமாக' கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளை இந்த நாளில் கொண்டாடுகின்றனர்.

குறைந்து வரும் நாணய மதிப்பும் குழம்பிக்கிடக்கும் குடிமக்களும்- ஒரு சமகால ஆய்வு


Image result for money depreciation sri lankan peopleஇலங்கை நாணயமதிப்பு தேய்வு பற்றி அண்மையில் எழுந்துள்ள சந்தேகங்கள் பற்றி பல அரசியல் பொருளாதார நோக்கர்கள் பலரும் பல கருத்துக்களை ஆதரவாகவும் எதிராகவும் வைத்துவருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி பல சந்தர்பங்களில் குறைவடைந்து வந்துள்ளது. இது யூன் 11ம் திகதி மற்றும் 20ம் திகதிகளில் 161.17 ஆக அதிகரித்து இன்று 170.56 ஆக வேகமாக அதன் பெறுமதி குறைவடைந்து வந்துள்ளதனை அவதானிக்கின்றோம். இவை பொதுமக்களிடையே மற்றும் பொருளாதார, அரசியல் ஆர்வலர்களிடையே ஏற்படுத்திய குழப்பங்கள் அவற்றுக்கான காரணங்கள் என்பன பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது.

30 September 2018

எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையும் முயற்சியாண்மை விஸ்த்தரிப்பின் தேவையும்.


Image result for entrepreneurship sri lankaஇன்றய இலங்கையில், நிதி அமைச்சின் கருத்துக்களின் படி கடந்த காலங்களில் ஏறத்தாள 22,000 வணிக கடன்களை வழங்கியுள்ளதாகவும் இது ஒரு முக்கியமான படியாக இருப்பினும், இளைஞர்களை தொழிற்கயிற்சி சார்ந்து ஈர்ப்பதும் அவர்களிற்கு மாற்று வாழ்வாதாரங்களை கண்டு பிடிக்க உதவுவதும் மிகவும் சவாலானதாக உள்ளது. ஆனால், இது மிகவும் செலவீனமானதும் அதே வேளையில் அவர்கள் வருமானமீட்ட மிக நீண்ட காலம் தேவைப்படும் என்றும் கணிக்கப்படுகிறது.

24 September 2018

மக்களின் பலமே நல்லாட்சிக்கான இதயத்துடிப்பாக இருக்கின்றது

Related imageஜனநாயகத்துக்கான பலம் எப்பொழுதும் மக்களினாலே உருவாக்கப்படுகின்றது. இதுதான் யார் தமக்கான தலைவன் தீர்மானிப்பதுடன், நாம் என்ன வகையான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் அதுபோல் எந்தெந்த கொள்கைகளை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பனவற்றினை நிர்ணயனம் செய்கின்றன. இவையெல்லாம் இருந்தும் ஒரு ஜனநாயக நாட்டில் அந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு பலமான பக்கச்சார்பற்ற நிறுவனம், யாவரையும் உள்வாங்கும் ஒரு நடைமுறை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லையெனில அவை நல்லாட்சியல்ல அது மக்களின் ஒருங்கிணைந்த பலமும் அல்ல. மாறாக  மக்களின் பலமே நல்லாட்சிக்கான இதயத்துடிப்பாக இருக்கின்றது.

23 September 2018

வயது முதிர்ந்த பெற்றோர் தமது பிள்ளைகளின் நிழலில் வாழவே விரும்புகின்றனர்.

உன்னைப்போல் பிறரை நேசி என்பதற்கிணங்க, பிறரால் நேசிக்கப்படாமல் விடப்பட்டவர்களை நோக்கி ஒரு அன்புப் பயணத்தினை எனது மனைவியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மேற்கொண்ட போது!. முதியோர் வாரம் நெருங்கும் இந்த நேரத்தில் இந்த நிகழ்வினை அவர்களுடன் இணைந்து மகிழ்ந்துகொண்ட தருணம் மறக்கமுடியாதது.