இன்று எம்மிடையே யாரிடமாவது தற்போது இலங்கையை ஆளுவதற்கான ஒரு பலமான தலைமை தேவையா? எனக் கேட்டால், ஆம் எனத்தான் பதில் வருகின்றது.
இன்று நாங்கள் சுறுசுறுப்பாக ஓடியாடிக் கொண்டிருக்கும் தலைவர்களைப் பார்த்தால் உற்சாகம் பிறக்கிறது எமக்கு. பல பிரதேசங்களுக்கும் சுற்றி வருபவர்கள் என்றால், 'எல்லாமும் தெரிந்தவர்' என்பது போல் ஒரு மரியாதை பிறக்கிறது. அலுவலகமாக இருந்தாலும் , நாட்டை ஆளும் ஆட்சியாளர்களாக இருந்தாலும், அவர்கள் 'சிறந்த பேச்சாளார்களாக' இருந்து விட்டால் உச்சி மோர்ந்து கொண்டாடத் தொடங்கி விடுகிறோம்.









