புதிய ஜனாதிபதியும் அமைச்சரவையும் அவர்களுக்கு முன் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் , ஏனெனில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் வரையில் அவர்கள் ஒரு சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுகின்றது . அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று, இலங்கை மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வேலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு ILO (ச.தொ.அ) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, வளர்ச்சியடையாத மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் மொத்த வேலைவாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு சிறிய பொருளாதார அலகுகளால் வழங்கப்படுகிறது, அதாவது கொள்கை வகுப்பாளர்கள் இந்த அலகுகளை பொருளாதாரத்தின் மையப் பகுதியாகவும், சமூக மேம்பாட்டு உத்திகளாகவும் கருத வேண்டும்.










