எமது நாட்டைபொறுத்தவரை பல அபிவிருத்திச் செயற்பாடுகளில் மத்தியவங்கியானது பல வகையிலும் முக்கிய வகிபாகத்தினை வகித்து வருகின்றது. அவைசார்ந்த பல விடயங்களை நாம் இக்கட்டுரை மூலமாக பார்க்கலாம். இது மாணவர்களுக்கும் மற்றும் வங்கித்துறைசார்ந்தவர்களுக்கும் பயனுள்ள முறையில் இருக்கும்.
1. இறுதிக் கடன் ஈவோன் (Lender of last resort)
வர்த்தக வங்கிகளுக்கு நிதிப் பிரச்சனைகள் ஏற்படுகின்ற வேளையில் இறுதியாக கடன் கொடுக்கும் பொறுப்பு மத்திய வங்கியே பொறுப்பெடுத்துள்ளது. எதிர்பாராத விதமாக ஒரு வர்த்தக வங்கிக்கு நிதிப் பிரச்சனை ஏற்படுகின்ற போது அதனை கொடுத்து உதவும் பொறுப்பு மத்திய வங்கியே கொண்டுள்ளது. இத் தொழிற்பாட்டினை மத்திய வங்கி ஆற்றும் போது ஏற்கனவே வர்த்தக வங்கிகளினால் கழிவு செய்யப்பட்ட உண்டியல்களை மறுகழிவுடன மாற்றிக் கொடுக்கின்றது. இதனால் வர்த்தக வங்கிகளுக்கும் திரவத்தன்மை குறைந்த சொத்துகளில் முதலீடு செய்து இலாபம் உழைக்கும் சந்தர்ப்பத்தினை பெறும் வாய்ப்பு இருக்கின்றது.