தென்றல் வந்து வீசும்
தேன் கதலி வாசம்
திக்கெட்டும் உன்னைப் பேசும்
தீராத நோய்கள் தீரும்
கொக்கட்டிச் சோலை வந்தவரே தேவா!!
தேன் கதலி வாசம்
திக்கெட்டும் உன்னைப் பேசும்
தீராத நோய்கள் தீரும்
கொக்கட்டிச் சோலை வந்தவரே தேவா!!
தொண்டைக்குள்ள தான் நஞ்சை அடைத்தாய்!
தொல்லை கொடுத்தோர் நெஞ்சை உடைத்தாய்!
எல்லைத் தெய்வமாய் இங்கு உறைந்தாய்!
ஏற்றுத் தொழுவோர் நெஞ்சில் நிறைந்தாய்!
மீன்தோன்றி பாட்டிசைக்கும்
தான்தோன்றி அப்பன் ஊரு
நான்தோன்றி விட்டேனய்யா !!
நாயாக போனேன் பாரு
தெய்வத்துக்கே ஆதி
பார்வதியின் பாதி
உய்ய வழி இல்லாமலே
உந்தன் அடிவந்து சேர்ந்தேன்
தொல்லை கொடுத்தோர் நெஞ்சை உடைத்தாய்!
எல்லைத் தெய்வமாய் இங்கு உறைந்தாய்!
ஏற்றுத் தொழுவோர் நெஞ்சில் நிறைந்தாய்!
மீன்தோன்றி பாட்டிசைக்கும்
தான்தோன்றி அப்பன் ஊரு
நான்தோன்றி விட்டேனய்யா !!
நாயாக போனேன் பாரு
தெய்வத்துக்கே ஆதி
பார்வதியின் பாதி
உய்ய வழி இல்லாமலே
உந்தன் அடிவந்து சேர்ந்தேன்
பன்றிக் குட்டிக்கும் பாசம் ஊட்டினாய்!
பகைவர் முகத்தில் தோசம் காட்டினாய்!
என்னைப் போலவே நீயும் தனியாய்
மண்ணில் தோன்றினாய் தெய்வக் கனியாய்
சாமி என்று உன்னை நம்பி
சரண் புகுந்தேன் உள்ளம் வெம்பி
நெற்றிக் கண்ணை நீ திறந்து
சுற்றிப் பாரு என்னைக் கொஞ்சம்
உன்னைவிட யாரு
ஊருக்குள்ள வேறு
கண்டவங்க கேக்கிறத்துக்கெல்லாம்
நல்ல பதில் ஒன்ற கூறு!!!
பகைவர் முகத்தில் தோசம் காட்டினாய்!
என்னைப் போலவே நீயும் தனியாய்
மண்ணில் தோன்றினாய் தெய்வக் கனியாய்
சாமி என்று உன்னை நம்பி
சரண் புகுந்தேன் உள்ளம் வெம்பி
நெற்றிக் கண்ணை நீ திறந்து
சுற்றிப் பாரு என்னைக் கொஞ்சம்
உன்னைவிட யாரு
ஊருக்குள்ள வேறு
கண்டவங்க கேக்கிறத்துக்கெல்லாம்
நல்ல பதில் ஒன்ற கூறு!!!
0 comments:
Post a Comment