ADS 468x60

08 August 2019

கொள்கை பேசி ஏமாற்றும் கோமளிகளுக்காக!

கொள்கை அது எமது ஒவ்வொரு தமிழ் குடிமகனின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் சார்ந்த நிறைவாக இருக்கணும் முதலில். 'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்' என்பது அனைவருக்கும் தெரியும். எமது மக்கள் அனர்த்தம், வறுமை, வேலைவாய்ப்பின்மை, திறனின்மை, குடும்பச்சுமை, கடன்சுமை, தொழில் இழப்பு காரணமாக நலிவுற்று அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாமல் மாற்றானிடம் அடிமையாக, வேற்றானிடம் வேலையாளாக, வேண்டிய மதத்திற்கு மாற்றப்பட்டு நுண் கடனால் நுடங்கி நிற்கும் இவர்களிடம் ஏன்டா இன்னும் இன்னும் போய் கொள்கை என்று கொடுமைப்படுத்துறீங்க!


நான் தமிழர் சார்ந்த கட்சிகளின் முடிமட்ட கருத்தை துறக்கவும் இல்லை அடிமட்டக்கருத்தை மறக்கவும் இல்லை. எனக்கு முடிமட்ட மக்களுடன் கட்சிசார் எந்த உறவும் அரசியல் ரீதியில் இருந்தது கிடையாது, ஆனால் அடிமட்ட மக்களின் ஆயிரம் ஆயிரம் உறவுகள் எனக்கு ஊரெங்கும் உண்டு என்பதனால் அதை உணர்ந்து இந்த கருத்தினைப் பகிரவிரும்புகின்றேன்.

சும்மா பேசிக்கொண்டு இராதீர்கள். எனக்கு தெரிந்தவரையில் எந்த தமிழர் சார் கட்சியாவது எமது மக்களின் மீட்சி பற்றிய நிலபுலம் பற்றிய, ஆய்வுகள், மகாநாடுகள். கருத்துப் பரிமாற்றங்கள், அறிக்கைகளை எமது மாவட்டத்தில் எடுத்துச் செய்ததாக எந்தக் குறிப்பும் யான் அறியேன். அப்படி இருந்தால் மன்னிக்கவும்.

எது எவ்வாறு இருப்பினும் எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு உண்டு. அதற்கு உதாரணங்களும் உண்டு. குறிப்பாக 1945 இல் முடிவுற்ற இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின் முதலாளித்துவத்தின் பொற்காலம் (புழடனநn யுபந ழக ஊயிவையடளைஅ) என வர்ணிக்கப்பட்டு இருநத்து. இநத் காலங்களில் மேற்கு ஐரோப்பிய மற்றும் கிழக்காசிய நாடுகளில் உலகலாவிய ரீதியிலேயே நிறை வேலைவாய்புடன் கூடிய மிக உயர்நத் பொருளாதார வளர்சி காணப்பட்டது.

அதுபோல் இந்த உள்நாட்டு யுதத்ஙக்ளால் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிறீஸ் (கிறீஸ் பொருளாதார அதிசயம்), மேற்கு ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் மிக உயர்நத் பொருளாதார வளர்சியைக் கொணடிருந்த்ன. பாழடைநத் நிலங்கள் பொன் விளையும் பூமியாகின, கணடுபிடிப்புகள், ஆய்வுகள், வணிக விஸ்தரிப்பு என்பன பல்கிப் பெருகின, இறந்த காலதத்தினை நினைத்து என்ன பயன்? என எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதில் எறும்புபோல் செயற்படலாயினர். இதனால் தான் அன்று வீழ்ச்சி அடைந்த நாடுகள் இன்று வளர்ச்சி அடைநத் நாடுகளின் பட்டியலில் இடம் பிடிதது இருக்கின்றன.

எனவே இங்குள்ள வழங்களைப் பயன்படுத்தி மனப்போராட்டததுக்கு முற்றுப்புள்ளி வைதது, பொருளாதாரப் போராட்டதது;க்கான ஆரம்பமாக மகக்ளை மாற்றுவதலே தற்போதைய குறுங்காலக் கொள்கையாக அமையவேண்டும.; அதில்தான் எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலம் தங்கி இருக்கின்றது. இவற்றுக்கு துறைசார்ந்தவர்களின் தொண்டர்களின் ஒருங்கிணைப்புத்தான் அவசியம்.

கொள்கையை எல்லோரும் மனதில் வைப்போம் அதற்கு மேலாக வேகமான பொருளாதார வளர்ச்சிக்கான சிந்தனையை விதைக்கவேண்டும்.

0 comments:

Post a Comment