ADS 468x60

31 August 2019

பொருளாதார வளர்ச்சிக்கு கால்கோலாக இருப்பது மத்திய வங்கி

எமது நாட்டைபொறுத்தவரை பல அபிவிருத்திச் செயற்பாடுகளில் மத்தியவங்கியானது பல வகையிலும் முக்கிய வகிபாகத்தினை வகித்து வருகின்றது. அவைசார்ந்த பல விடயங்களை நாம் இக்கட்டுரை மூலமாக பார்க்கலாம். இது மாணவர்களுக்கும் மற்றும் வங்கித்துறைசார்ந்தவர்களுக்கும் பயனுள்ள முறையில் இருக்கும்.

1. இறுதிக் கடன் ஈவோன் (Lender of last resort)

வர்த்தக வங்கிகளுக்கு நிதிப் பிரச்சனைகள் ஏற்படுகின்ற வேளையில் இறுதியாக கடன் கொடுக்கும் பொறுப்பு மத்திய வங்கியே பொறுப்பெடுத்துள்ளது. எதிர்பாராத விதமாக ஒரு வர்த்தக வங்கிக்கு நிதிப் பிரச்சனை ஏற்படுகின்ற போது அதனை கொடுத்து உதவும் பொறுப்பு மத்திய வங்கியே கொண்டுள்ளது. இத் தொழிற்பாட்டினை மத்திய வங்கி ஆற்றும் போது ஏற்கனவே வர்த்தக வங்கிகளினால் கழிவு செய்யப்பட்ட உண்டியல்களை மறுகழிவுடன மாற்றிக் கொடுக்கின்றது. இதனால் வர்த்தக வங்கிகளுக்கும் திரவத்தன்மை குறைந்த சொத்துகளில் முதலீடு செய்து இலாபம் உழைக்கும் சந்தர்ப்பத்தினை பெறும் வாய்ப்பு இருக்கின்றது.


2. அந்நியச் செலவாணி கட்டுப்பாட்டு அதிகாரி.

உண்மையில் இரண்டு விதமாக இந்த தொழிற்பாட்டினை செய்கின்றது. ஒன்று ஒரு நாட்டுக்கு சேர வேண்டி அந்நியச் செலவாணியை திரட்டிக் கொள்வதும், அந்நாடு செலுத்த வேண்டிய அந்நியச் செலவாணியை செலுத்துவதும் மத்திய வங்கியினது முக்கிய கடமையாகும். எமது நாடானது பல ஆண்டுகளாக அந்நியச் செலவாணிப் பிரச்சனையில் அகப்பட்டிருக்கும் ஒரு நாடாகையால் அந்நியச் செலவாணிக் கட்டுப்பாட்டினை கடைப்பிடிக்கும் பொறுப்பு மத்திய வங்கியிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்னுமொரு முக்கிய விடயம் இம்மத்திய வங்கியினூடாகவே ஏற்றுமதி, இறக்குமதிக்கான அந்நியச் செலவாணிக் கொடுக்கல் வாங்கல்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதற்கு மேலாக நிலையான நாணய மாற்று வீதம் கைவிடப்பட்டு மிதக்கும் நாணயமாற்று வீதம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற புதிய அரசாங்கத்தின் விருப்பத்திற்கமைய நடைமுறைபடுத்துவதற்காக, ஒவ்வொரு நாளும் எமது நாணயத்திற்கான கேள்வி நிரம்பலைப் பொறுத்து வெளிநாட்டு நாணயங்களுடன் எமது நாணயத்திற்கான மாற்று வீதத்தினை  கணித்து வெளியிடுகின்றது. இவ்வாறாக மிதக்கும் நாணயமாற்று வீதம் கடைப்பிடிக்கப்படவும், ஏனைய அந்நிய செலவாணிக் கொடுக்கல் வாங்கல்கள் சீராக்கப்படவும்  மத்திய வங்கி உதவி புரிகின்றது.

இவ்வாறு இன்னும் பல தொழிற்பாடுகளையும் மத்திய வங்கியானது செவ்வனே செய்கின்றது. அதில் விசேடமாக,

தீர்க்கும் வீடு
மத்திய வங்கியானது  வர்த்தக வங்கிகளிடையே ஏற்படும் கொடுக்கல் வாங்கல்களை தீர்த்து வைக்கும் தீர்வகமாகவும் தொழிற்படுகின்றது. ஒன்றை நாம் நோக்கலாம், அதாவது ஒரு வர்த்தக வங்கியின் காசோலைகள் வௌ;வேறு வர்த்தக வங்கிகளில் வைப்புச் செய்யப்படுகின்றன.

இவ்வாறு ஒரு வர்த்தக வங்கியின் காசோலை வேறொரு வர்த்தக வங்கியில் வைப்புச் செய்யப்படுவதனால் காசோலைக்குரிய வங்கி மற்றய வங்கிக்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களை வர்த்தக வங்கிகளே தீர்த்துக் கொள்வது கஷ;டமாக இருக்கும் என்ற காரணத்தினால் மத்திய வங்கியே தன்னிடமுள்ள வர்த்தக வங்கிகளின் ஒதுக்கு வீதத்தில் இருந்து இக் கொடுக்கல் வாங்கல்களை தீர்த்து வைக்கின்றது. இத்தொழிற்பாடுகள் தவிர வர்த்தக வங்கிகளின் பண ஒதுக்குகளுக்கான பாதுகாவலனாக (Custodian of the cash reserve of the commercial banks)  இது தவிர ஒரு நாடு தனது ஒதுக்காக வைத்திருக்கின்ற சர்வதேச நாணயங்களுக்கான பாதுகாவலனாகவும் (Custodian of the Nations Reserve of International Currency) இவ் மத்திய வங்கிகள் தொழிற்படுகின்றன.

மத்திய வங்கி தனது குறிக்கோளை அடைந்து கொள்வதற்கான, அதன் நிதிக் கொள்கை கடப்பாடுகள் எமது நாட்டின் நாணயக் கொள்கை திறம்பட அமுல் நடத்தலே இலங்கை மத்திய வங்கியின் முக்கிய குறிக்கோளாகும். உண்மையில் எம் நாட்டின் ரூபாவினுடைய பெறுமதியை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பதனிலேயே நாணயக்  கொள்கையின் வெற்றி தங்கியுள்ளது.

இவ் வங்கியானது முக்கியமாக இரண்டு குறிக்கோள்களை சாதித்து கொள்ளும் நோக்குடனேயே 1950 இல், இலங்கை மத்திய வங்கி ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்திர நிலையை எடுத்து வருதல் மற்றும் அபிவிருத்தியினை முன்னெடுத்தல் என்பனவே அக்குறிக்கோளாகும்.

ஸ்திர நிலையை எடுத்து வருதல்
அதாவது ரூபாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதிப்பினை பாதுகாத்துக் கொள்ளுதல்.

அபிவிருத்தியினை முன்னெடுத்தல்.
அதாவது பொருளாதார வளர்ச்சியியை மேம்படுத்தி வளங்களை அபிவிருத்தி நோக்கி நெறிப்படுத்துவதாகும். இவ்வாறான குறிக்கோள்களை சாதித்துக் கொள்வதற்கான படிமுறைகளை பின்வருமாறு நோக்கலாம்.

மத்திய வங்கிகள் குறிக்கோள்களை சாதித்தல். 
நிதிக் கட்டுப்பாட்டுக் கருவிகள் அளவு ரீதியானவை தர ரீதியானவை.
செயற்பாட்டு இலக்குகள் நிதி ஆதாரம் பன கணிப்பு
நடுத்தர இலக்குகள் பண நிரம்பல் கடன் வழங்கல் வட்டி
இறுதி குறிக்கோள்கள்(இலக்குகள்) ஸ்திர நிலை அபிவிருத்தி

நிதிக் கொள்கை
ஸ்திர நிலை (Sustainability), அபிவிருத்தி (Development) ஆகிய குறிக்கோள்களை சாதித்துக் கொள்ளும் பொருட்டு நாட்டின் பணநிரம்பல், கடன் வழங்கல் மற்றும் வட்டி விகிதங்கள் என்பனவற்றினை நெறிப்படுத்தும் செயன்முறை நிதிக் கொள்கை என அழைக்கப்படுகின்றது.

இவ்வாறான நிதிக்கொள்கையை நெறிப்படுத்திச் செல்லும் பணியும் பொறுப்பும் மத்திய வங்கியினைச் சார்ந்ததாகும். இருப்பினும் எமது நாட்டின் ஒரு உறுதிப்பாடற்ற அரசியல் மாற்றங்கள் காரணமாக நாட்டினுடைய நாணயக் கொள்கை காலத்துக்குக் காலம் வேறுபட்டு வந்துள்ளன.

இவ்வாறு மாறுபட்ட நாணயக் கொள்கையினை நாம் 1950-2000வரை வரையறுத்து இவற்றை நன்கு கட்டமாக பிரித்து இந் நாணயக் கொள்கைகள் நாட்டின் அபிவிருத்தி சார்ந்த சாதனைகளை எட்டுவதில் ஆற்றிய பங்கினையும் நோக்குவோம்.

1950-1959 வரையான காலம்
இக்காலம் மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்ட முதல் தசாப்தமாகும். இக்காலத்தில் இலங்கையினது பொருளாதாரம் எல்லா வகையிலும் திருப்திகரமானதாகவே இருந்து வந்தது. இதற்கான காரணங்கள்,

அதிகளவான வெளிநாட்டு நிதிகளின் உட்பாய்ச்சல்
போதியளவு வெளிநாட்டு ஒதுக்குகள் இருந்தமை
சமநிலை பேணப்பட்ட வரவு செலவுத் திட்டம்
வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை மிகச் சிறியளவில் இருந்து வந்தமை.
குறைந்த வட்டி வீதங்கள் 
குறைந்த மட்டத்திலான ஒதுக்கு விகிதங்கள்
குறைவான பண வீக்கத்தாக்கங்கள்
சென்மதி நிலுவையில் நெருக்குதல் காணப்படாமை.

இவை பொருளாதாரத்தின் உத்தமமான அம்சங்களாக இருந்து வந்தன. இதனால் இக்காலப் பகுதியில் நிதி ஸ்திர நிலைமைக்கு முதன்மை வழங்கப்பட்டிருந்தது. இந் நிலைமையில் இவ் ஸ்திர நிலையை சகித்துக் கொள்வதற்கான நிதிக் கருவி என்ற முறையில் திறந்த சந்தைச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.

உண்மையில் திறந்த சந்தைச் செயற்பாடுளால் கருதப்படுவது சந்தையில் பிணைப் பத்திரங்களை கொள்வனவு செய்வதும் விற்பணை செய்வதுமாகும் ஆகவே மத்திய வங்கி பின் பற்றிய நிதிக்கொள்கை இக்காலப் பிரிவின் பொருளாதார எட்டுகைகளை துரிதப்படுத்தியதென்றே கூறலாம்.

1960-1977 வரையான காலம்
உண்மையில் இக்காலப் பிரிவின் பல கோணங்களில் பிரச்சனைகளை எதிர் நோக்கிய காலமாகும். 1960 களின் இறுதிப்பகுதி அளவில் இலங்கைப் பொருளாதாரத்தில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றியிருந்தன. அவற்றை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

வெளிநாட்டு ஒதுக்குகள் வீழ்ச்சியடைந்தமை.
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு.
இறக்குமதிப் பிரதியீட்டு முறை பின்பற்றப்பட்டமை.
சென்மதி நிலுவை நெருக்கடிகள்.
பணவீக்க வீதம் உயர்ந்து சென்றமை.
வேலையில்லாத் திண்டாட்டம். 


இவை அனைத்தும் பொருளாதாரம் எதிர் கொண்டிருந்த பாரிய பிரச்சனையாகும். இவ்வாறான பாதக விளைவு காரணமாக மத்திய வங்கியின் நிதிக் கொள்கை அபிவிருத்திக் கொள்கை நோக்கி அதிகளவிற்;கு நெறிப்படுத்தப்பட்டது.


இந்த வகையில் ஒரு பொருளாதாரத்தின் பிரபல்யமான துறைகள் தெரிவு செய்யப்பட்டு அவ்வத் துறைகளுக்கு அதிகளவான வளங்கள் நெறிப்படுத்தப்படுவதற்கு வகை செய்யும் விகிதத்தில் பல்வேறு கட்டுப் பாடுகளும் உச்ச வரம்புகளும் அதாவது கடன் கட்டுப்பாடு மற்றும் கடன் உச்ச வரம்புகள் என்பன நெறிப்படுத்தப்பட்டன.


நாம் ஓன்றை நினைக்க வேண்டியவர்களாக உள்ளோம் அதாவது, முன்னுரிமைத் துறைகளுக்கு கடன் வழங்குவதற்கும் 1964 இன் நடுத்தர கால மற்றும் நீண்ட கால கடன் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் கீழ் மத்திய வங்கி மீள் நிதி வசதிகள் வழங்கப்பட்டன.


மற்றுமொரு நிதியியல் நடவடிக்கையிலும்  மத்திய வங்கி புரட்சியை ஏற்படுத்தியது. அதாவது வரி செலுத்தாது வரி வைப்பு செய்பவர்கள் மற்றும் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் ஆகியோரின் பணத்தை வங்கி அமைப்புக்கள் எடுத்து வருவதற்கு வகை செய்யும் விதத்தில் 1970.11.03 இல் 100ரூபா, 50ரூபா தாள்கள் ரத்துச் செய்யப்பட்டன. ஆனால் பிற்காலத்தில் பிணைமுறிகள், மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் போன்ற கருவிகள் மூலம் கறுப்புப் பணத்தை வங்கியமைப்புக்குள் எடுத்து வருவதற்கென நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு பொருளாதாரத்தின் சீர் கேடான நிலையினை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு கட்டுப்பாடுகள் மேற்கொண்டிருந்தமையினை மேல் கண்டோம்.

1977-1989 வரையான காலப்பகுதி

இக்காலப்பகுதியில் பொருளாதார ஸ்திர நிலை பேணப்பட்ட காலமாகும். அதாவது மூடிய பொருளாதார கட்டமைப்பு மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டுக் கொள்கை என்பனவற்றில் எல்லாம் விடுபட்டு ஒரு திறந்த சந்தை நடவடிக்கை சார்ந்த பொருளாதாரம் நோக்கி இக்காலத்தில் முன்னெடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இலங்கை மத்திய வங்கி நேரடிக் கட்டுப்பாடுகளிலிருந்து விலகி பெருமளவிற்கு சந்தை சார்பான நிதிக் கொள்கை ஒன்றை பின்பற்ற தொடங்கியது. இதனால் நிர்வாக அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு வந்த வட்டி விகிதங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு சந்தைச் சக்திகளுக்கு ஏற்ற விதத்தில் வட்டி விகிதத்தினை நிர்ணயிக்கும் முறை எடுத்து வரப்பட்டது. 

இன்னொரு புறத்தில் 1953/1985 காலத்தில் உற்பத்திக்கு ஊக்கமளிப்பதற்கென வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இக்காலப் பிரிவில் பொருளாதார ஸ்திர நிலையை எடுத்து வருவதில் மத்திய வங்கி சில குறிக்கோள்களை நிர்ணயித்தது. குறிப்பாக,

கடண் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை
தேசிய கடன் கொள்கை செயற்படுத்தப்பட்டமை.
மத்திய வங்கி வட்டி விகிதத்தின் உபயோகம் படிப்படியாக கைவிடப்பட்டமை.
திறந்த சந்தை நடவடிக்கைகளை முக்கிய நிதிக் கருவிகளாக ஆக்கியமை.
என்பன இக்காலத்தில் செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களாக இருந்து வந்தன.

மேற்கூறிய குறிக்கோள்களை அடைந்து கொள்வதில் உள்ள கரிசனை காரணமாக, 1980இல் M2 விரிந்த பணநிரம்பல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது, M2 ஆன அர்த்த்தினை நோக்கினால் இது குறுகிய பணநிரம்பல் என அழைக்கப்படுகின்றது. இது பொது மக்களிடம் இருந்து வரும் பழக்கத்தில் உள்ள பணம் மற்றும் பொது மக்களின் கேள்வி வைப்புகள் என்பனவற்றின் கூட்டுத்தொகையாகும். இந்த விரிந்த பண நிரம்பல் முறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டமைக்கான காரணங்கள் பின்வருமாறு,

தன்னியங்கி காசாளும் இயந்திரங்களின் அறிமுகம்.
காசோலைகளை வெளியிடும் வசதியுடன் சேமிப்புக் கணக்குகளின் அறிமுகம்
சேமிப்பு கணக்குகளுக்கும் கேள்வி வைப்புக்களுக்கும் இடையில் நிதிகளை மாற்றிக் கொள்ளக் கூடிய வசதி

போன்ற நிதித்துறை புதுமைப்புனைவுகள் காரணமாகவே விரிந்த பணநிரம்பல் முறை அறிமுகமானது.

1990 க்குப் பின் இன்று வரையான காலப்பகுதி

அண்மையில் மத்திய வங்கியின் குறிக்கோளில் முக்கியமானது, 1940 க்குப் பின் இன்று வரை பொருளாதாரத்தின் ஸ்திர நிலையை எடுத்து வருவதே நிதிக் கொள்கையின் முக்கிய குறிக்கோளாக இருந்து வந்துள்ளது. முன்பு கூறியது போன்று திறந்த சந்தை நடவடிக்கைத் தொகுதியே இதற்கான சக்தி வாய்ந்த ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இதனுள் வரும் முக்கிய கருவிகளாக பின்வருவன அமைந்துள்ளன.

திறைசேறி உண்டியல்கள்
திறைசேறி முறிகள்
மத்திய வங்கி பிணைப்பத்திரங்கள்
இவை முக்கியமானவையாகும்.

திறைசேறி உண்டியல்கள்

இது 1992 இல் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்றாகும். இதில்,
1. 1992 இல் அறிமுகம் செய்யப்பட்ட மீள் கொள்வனவுத்திட்டம்(சுநிழள)
2. 1995 இல் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட மீள் விற்பனை ஒப்பந்தம்

மீள் கொள்வனவுத் திட்டம்

மத்திய வங்கி முன்னரே நிர்ணயிக்கும் ஒரு விலையில் வங்கியினால் மீளக் கொள்வனவு செய்யப்படும் என்ற ஒப்பந்தத்துக்கு அமைவாக திறைசேறி உண்டியல்களை கொள்வனவு செய்வதற்கான குறுங்கால நிதிகளை கொண்டிருக்கும் முதலீட்டாளர்களுடன் செய்து கொள்ளப்படும் ஒரு ஒப்பந்தமாகும். இதன் குறிக்கோளில் மிக முக்கியமானதொன்று,

வங்கிகளுக்கிடையில் குறுங்கால நிதித் தேவைகளை நிறைவு செய்து வைக்கும். சந்தையின் வட்டி விகிதங்கள் மிகவும் குறைந்த மட்டங்களுக்கு வீழ்ச்சியடையாது அவற்றை நிலையாக வைத்துக் கொள்வதே இதன் முக்கியத்துவமாகும்

மீள் விற்பனை ஒப்பந்தம்

மீள் விற்பனை ஒப்பந்தம் ஒரு கணக்காகும். இதன் கீழ் மத்திய வங்கி வர்த்தக வங்கிகளிடமிருந்து திறைசேறி உண்டியல்களை கொள்வனவு செய்கின்றது.

மேலுள்ளது போன்று மத்திய வங்கி நாட்டினை அபிவிருத்தி நோக்கி இட்டுச் செல்லவென 1990 இன் பின் பணநிரம்பலுடன் சம்பந்தப்பட்ட இரு இலக்குகள் அறிமுகமாக்கப்பட்டன.
1. M2B ஒருங்கிணைந்த விரிந்த பணநிரம்பல்
2. M4 M1 பணநிரம்பல்

1. M2B ஒருங்கினைந்த விரிந்த பணநிரம்பல்

இது குறுகிய பணநிரம்பலுக்கு உள்நாட்டு வங்கித் தொழில் அலகுகளில் உள்நாட்டவர்கள வைத்திருக்கும் வைப்புக்களையும் சேர்த்து கணக்கிடப்படும் பண நிரம்பலாகும்.

M4 என்பது M1 பணநிரம்பலுக்கு உள்நாட்டு வங்கித் தொழில் அலகுகள், வெளிநாட்டு வங்கித் தொழில் அலகுகள் சிறப்பு வங்கித் தொழில் அலகுகள் என்பனவற்றை உள்ளடக்கிய வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஒரு  பணநிரம்பல் கருதுகோளாகும்.

இவை தவிர இன்னும் பல கொள்கை முடிவுகள் நிதியியல் துறையில் சாதித்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றில்,

11%  ஒதுக்குத் தேவை அண்மையில் நீக்கப்பட்டமை.
ரூபாவின் வெளிமதிப்பினை சந்தை சக்திகள் நிர்ணயிக்க கூடிய விதத்தில் விரிவாக்கப்பட்டமை.
உள்நாட்டு ரூபா வைப்புக்களாக பராமரிக்கப்பட்டு வரும் வைப்புகள் தொடர்பான சட்ட ரீதியான ஒதுக்கு விகிதம் படிப்படியாக குறைக்கப்பட்டமை என்பன முக்கியமாகும்.

இன்றைய நூற்றாண்டில் மத்திய வங்கி சாதித்துக்  கொள்ளவேண்டிய தேவைகள்

மத்திய வங்கி புதிய நூற்றாண்டுக்கு ஏற்படும் மாற்றங்களை எடுத்து வரவேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் வங்கி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து இடம் பெற்று வரும் உலகமயமாக்கல் சக்தியே இதற்கு காரணமாகும்.

இந்த வகையில்  பல குறிக்கோள்களை தன்னகத்தே சுமந்து கொண்டு முன்னோக்கிச் செல்வதனை விட வளர்ச்சியடைந்த நாடுகளின் வழியில் விலை உறுதிப்பாடு மற்றும் நிதித்துறையின் உறுதிப்பாடு என்பன போன்ற ஒற்றைக்குறிக்கோளுடன் சாதனை ஈட்டுவதே இலகுவான வழி என எண்ணத்தோன்றுகிறது. இதற்கு அப்பால் சில பிரதி குறிக்கோள்களையும் கருத்தில் எடுத்துள்ளது அந்த வகையினில்,

பொருளாதாரஆராய்ச்சி நடவடிக்கைகள்
புதிய சேமிப்புத் திட்டங்கள்
புதிய கடன் திட்டங்கள்

என்பனவற்றினை மேம்படுத்துவதனை குறிக்கோளாக கொண்டுள்ளது இவற்றிற் கூடாக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியான சவால்களை முறியடித்து வெற்றி நடைபோடுவதே இதன் குறிக்கோளாகும்.

மத்திய  வங்கி அபிவிருத்தி நோக்கி கடைப்பிடிக்கும் பணிகள்

இலங்கைப் பொருளாதாரம் சார்ந்து அது நிறைவேற்றவேண்டிய தமது கடமைப் பொறுப்புக்களை மிகச் சிறந்த விதத்தில் நிறைவேற்றும் பொருட்டு மத்திய வங்கியானது 1950 ல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது 250 ஊழியர்கள் மற்றும் 5 திணைக்களங்களை மட்டுமே கொண்டமைந்திருந்தது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட வங்கி படிப்படியாக தனது சேவைகளை நாடு முழுவதிலும் பரவலாக்கி விஸ்திரப்படுத்தியது. இப்போது அது 24 திணைக்களங்களுடன் பாரிய விரிவாக்கலை அதன் முன்னேற்றம் குறித்து மேற்கொண்டு வருகின்றது. எமது நாட்டு பொருளாதாரத்துடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ள மத்திய வங்கி தான் மேற்கொள்ளும் பணிகள் அளப்பெரியனவே அவற்றை சுருக்கி நோக்கலாம். 

ஒரு நாட்டின் பொருளாதார நிலையைப் பராமரிக்கும் பொருட்டு நாட்டின் பண நிரம்பலை உரிய முறையில் நிர்ணயிக்கும் விதத்தில் நாணயக் கொள்கையை நெறிப்படுத்துதல்.

தீர்வக வசதிகளை வழங்கள்
அரசாங்கத்தின் வங்கியாளராக செயற்பட்டு வருதல்
நாட்டின் உள் நாட்டுக்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துக்களை நிர்வகித்தல்.
மக்களின் புழக்கத்தில் உள்ள பணத்தினை வெளியிடும் அமைப்பாக செயற்படுதல்.
செலாவணி தொடர்பான சட்டதிட்டங்களை செயற்படுத்துதல்.
வங்கிகளின் வங்கியாக செயற்படுதல்.
வங்கிகளையும் வங்கியல்லா நிதி நிறுவணங்களையும் மேற்பார்வை செய்தல்.
அரசுக்கு ஆலோசனை கூறுதலும் அதற்காக பொருளாதாரம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளுதலும் பொருளாதாரம் மற்றும் 
அரசாங்கத்தின் பணக் கொடுப்பனவு முறைகளை விருத்தி செய்யும் பொருட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்தல். இதன் கீழ் மத்திய வங்கி மேற்கொள்ளும் புதிய முறைகளாவன,

தன்னியங்கி காசாளும் இயந்திரங்களின் உபபோகம்.
கடன் அட்டைகள்.
பற்று அட்டைகள் உபயோகம்.
இலத்திரனியல் அட்டை உபயோகம்.
தன்னியக்க காசோலை தீர்வை.
வங்கிகளுக்கிடையே கொடுப்பனவு முறை    போன்றவற்றினை குறிப்பிடலாம்.


உள்நாட்டு அபிவிருத்தி தொடர்பான நீதித்துறை சீர்திருத்தங்களும் மத்திய வங்கியும்.

பொதுவாக ஒரு நாட்டினது பொருளாதார ரீதியான முன்னடைவில் மத்திய வங்கி பல பணிகளை ஆற்றி வருகின்றது. அந்த வகையில் தமது நிதிக் கொள்கையை கடைப்பிடிப்பதில் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப பல சீர்திருத்தங்களை காலத்துக்கு காலம் மேற்கொண்டு வந்துள்ளன. அவை பின்வருமாறு.

நிதி தராரளமயமாக்கல்
இலங்கையில் வெளிநாட்டு வங்கிக் கிளைகளை ஆரம்பிக்க இடமளித்தமை.
மிதக்கும் செலவாணி வீத அறிமுகம்.
திறைசேறி உண்டியல்களுக்கென மூன்றாம் நிலை சந்தையை அறிமுகம் செய்து வைத்தமை.
அதிகாரம் பெற்ற முதன்மை பிரதிநிதிகள் கம்பனிகளை உருவாக்கியமை.
வணிக வங்கிகள் மற்றும் தொழில் முனைவு மூலதனக் கம்பனிகள் என்பனவற்றினை ஆரம்பிப்பதற்கு இடமளித்தமை.
கொழும்பு பங்கு பரிவர்த்தனை ஒழுங்குபடுத்தும் குறிக்கோளுடன் பிணைப் பத்திரங்கள் பரிமாற்ற ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கு வழிகோலியமை.
கடண் வகைப்படுத்தல் நிறுவனம், கடண் பணியகம் நிதி மற்றும் வங்கித் தொழில் ஐனாதிபதி ஆணைக்குழு, சர்வதேச நாணய நிதியத்தின் யாப்பு விதியை அங்கீகரித்தமை.
சந்தை சக்திகளுக்கு ஏற்ற விதத்தில் செலவாணி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை பரவலாக்கியமை.
பல்வேறுபட்ட நிதி நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. அத்துடன் அதன் முன்னேற்றத்துக்கும் துனைபுரிந்துள்ளது.


நிதி நிறுவனங்கள் பின்வருமாறு

இலங்கை அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கி
அரச ஈட்டு முதலீட்டு வங்கி.
தேசிய அபிவிருத்தி வங்கி.
பிராந்திய அபிவிருத்தி வங்கி.

போன்றவற்றின் ஸ்தாபிதத்தினை இங்கு குறிப்பிடலாம். இவ்வாறு பல்வேறு நாணயச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் மத்திய வங்கி மேலதிக சேவைகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். அந்த வங்கி கடைப்பிடிக்கும் நாணயக் கொள்கையின் முக்கிய அம்சம் அல்லது குறிக்கோள் என்னவெனில், நாணயத்தின் பெறுமானத்தினைப் பேணுதலாகும். அதாவது ரூபாவின் பெறுமானம் வீழ்ச்சியடையாமல் இருக்க பல்வேறுபட்ட கொடுகடன் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகின்றது. இது இரு வகைப்படும்.

1. மரபுக்கட்டுப்பாடு அல்லது அளவுக்கட்டுப்பாடுஃபண்புக் கட்டுப்பாடு
2. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாடு

இலங்கையை பொறுத்தவரை 1950 ஆம் ஆண்டு வரை இவை இரண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கவில்லை. இதற்கு முன்னதாக  வங்கித் துறையில் கொடுகடன்கள் பெருமளவு வழங்கப்பட்டிருந்தமையால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லாதிருந்தது. ஆனால் 1950 ஆம் ஆண்டுக்கு பின்னர் பொருட்களதும் சேவைகளதும் வளர்ச்சி வேகத்திலும் பார்க்க பண நிரம்பலதும் அதிகரிப்பு வேகம் அதிகமாக இருந்தமையால் கொடுகடன் கட்டுப்பாடுகளை மிகத்தீவிரமாக அமுல் நடத்த வேண்டிய தேவையுடனும் வங்கி காணப்பட்டது.

கொடுகடன் அளவுக்கட்டுபாடுகள்
இங்கு மத்திய வங்கியின் அளவுக்கட்டுப்பாடுகளில் பிரதானமாக காணப்படுவது மூன்று விடயங்களாகும்.

1. வங்கி வீதம்
2. ஒதுக்கு வீதம்.
3. பகிரங்க சந்தை நடவடிக்கை

இங்கு இலங்கையில் பணச் சந்தை மூலதனச் சந்தை ஆகியவற்றின் குறைந்த வளர்ச்சி காரணமாக பகிரங்க சந்தை நடவடிக்கையை மத்திய வங்கியினால் வெற்றி கொள்ள முடியாதிருக்கின்றது. பதிலாக காலத்துக்கு காலம் வங்கி வீதம், ஒதுக்கு வீதம் போன்றவற்றினை மத்திய வங்கி கடைப்பிடித்தது. அவற்றின் மூலம் கொடுகடன்களை கட்டுப்படுத்தி வருவதனை காணக்கூடியதாக உள்ளது.

அ) வங்கி வீதம்
இது மத்திய வங்கி கடைப்பிடிக்கும் ஒரு கடன் கட்டுப்பாட்டு கருவியாகும். வர்த்தக வங்கிகளுக்கு நிதியளிக்கும் போது அவற்றிற்கு மத்திய வங்கி அறவிடும் வட்டி வீதமே வங்கி வீதம் எனப்படும்.

பொதுவாக ஒன்றை நாம் அவதானிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பணவீக்க காலங்களில் அல்லது சென்மதி நிலுவை பிரச்சனை அதிகமாக ஏற்படும் காலங்களில் மத்திய வங்கியின் வங்கி வீதம் உயர்த்தப்படும். இதனால் வர்த்தக வங்கி ஒரு விதமான கட்டுப்பாட்டு சுழற்சிக்குள் ஈடுபடுத்தப்படுகின்றன.

வங்கி வீதம் மூலமான கடன் கட்டுப்பாட்டு முறை
வங்கி வீதம் உயர்த்தப்படல்
வர்த்தக வங்கியின் செலவுகள் மீதான அதிகரிப்பு
வாடிக்கையாளரிடம் அறவிடும் வட்டி உயர்தல்
கொடுகடன்களுக்கான கேள்வி குறைவடைதல்
கொடு கடன் குறைவடைதல்
வங்கி பணவாக்கம் குறைவடைதல்
வட்டி அதிகரிப்பும் இதனால் சேமிப்பு உயர்ச்சியும்

கடன் கட்டுப்பாடு

இன்றய நிலையில் வங்கி வீதம் படிப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது (1994 இல் 7மூ ஆக இருந்தது மத்திய வங்கியானது கொடுகடன்களை கட்டுப்படுத்த வங்கி வீதத்தினை உயர்த்துகின்றது. இதனால் வர்த்தக வங்கி தனது வட்டி வீதத்தினை உயர்த்துகின்றது. அத்துடன் சேமிப்புகளுக்கான வட்டி வீதமும் உயர்த்தப்படுகின்றன. இதன் காரணமாக மக்கள் கடன் பெறுவதனை குறைத்து சேமிப்பதனை கூட்டிக் கொள்வர். இதனால் புழக்கத்தில் உள்ள பணம் குறைவடைந்து பணநிரம்பல் குறைவடைகின்றது. இதனால் இம்முறை மத்திய வங்கியின் ஒரு உறுதி மிக்க கட்டுப்பாட்டு கருவியாக இருந்து வருகின்றது.

ஆ. ஓதுக்கு வீதம்

இலங்கை வர்த்தக வங்கிகளின் ஒதுக்கு வீதங்களை மாற்றுதல் நடைமுறையில் பயன்தரத்தக்கதொரு நாணயக்கருவியாக உள்ளது. உண்மையில் நேரடியாக கட்டுப்படுத்தும் முறையாகவும் இது காணப்படுகின்றது. வங்கிகளின் விதிகளின் அடிப்படையில் வர்த்தக வங்கிகள் தம்மிடமுள்ள வைப்புகளுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கியில் ஒதுக்குகளை வைத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வாறான ஒதுக்கு வீதங்களை நாட்டின் நலன் கருதி கூட்டவோ குறைக்கவோ கூடிய அதிகாரத்தினை மத்திய வங்கி கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வொதுக்கு வீதங்கள் வைப்புகளின் தன்மையை பொருத்து வேறுபடுகின்றது.
நிலையான சேமிப்புக்கு 5-20%
கேள்வி வைப்புகளுக்கு 10-40 %

மத்திய வங்கி தேவைக்கேற்ப ஒதுக்கு வீதத்தினை மாற்றியமைக்கும். ஒதுக்கு வீதமானது உயர்த்தப்படின் வங்கிப் பணவாக்கம் குறைவடையும். இதனால் கடனாக்கம் கட்டுப்படுத்தப்படும். மாறாக ஒதுக்கு வீதம் குறைக்கப்படின் அதன் மூலம் உருவாக்கப்படும் வங்கிப்பண ஆக்கம் கூட்டப்பட்டு கொடுகடன் அதிகரிக்கப்படலாம். இவ்வாறு சிறந்த கடன் கட்டுப்பாட்டுக் கருவி இது என விவரிக்கப்படுகின்றது.

இ) பகிரங்க சந்தை நடவடிக்கை

நாட்டின் பணநிரம்பலினை சீராக்க கொடுகடன்களைக் கட்டுப்படுத்தும் கருவிகளின் ஒன்றாக பகிரங்க சந்தை நடவடிக்கை காணப்படுகின்றது. அரச ஆவணங்களைக் குறிப்பாக திறைசேரி உண்டியல் விற்பனை செய்யும். அதே போல் கொள்வனவு செய்யும் தொழிற்பாட்டினை மத்திய வங்கி கொண்டிருக்கின்றது. பணநிரம்பலை அதிகரிக்க விரும்பினால் அரசாங்கம் ஆவணங்களை இச்சந்தையில் கொள்வனவு செய்யும் இதனால் ஆவணங்களுக்கான பணம் மக்களிடம் சென்றடையும். எனவே புழக்கத்திலுள்ள பணம் அதிகரிக்கின்றது.

இதே போல் மத்திய வங்கி பணநிரம்பலினை குறைப்பதற்கு பகிரங்க சந்தையில் அரசாங்க ஆவணங்களை விற்பனை செய்யும். இதனால் இவ் ஆவணங்கள் பொதுமக்களை சென்றடைய பணம் வங்கியிடம் வந்து சேரும். அதனால் பணத்தின் வெளியிலுள்ள அளவு குறைக்கப்படுகின்றது. குறிப்பாக வர்த்தக வங்கிகளின்  வைப்புகளும் குறைக்கப்படுகின்றது. இதனால் பண ஆக்கம் குறைக்கப்படுகின்றது. எனவே மத்திய வங்கி இத்த பகிரங்க சந்தை நடவடிக்கைகள் மூலம் கடன்கட்டுப்பாட்டில் ஈடுபடுகின்றது.

2. தேர்ந்தெடுக்கப்பட்ட கொடுகடன் கட்டுப்பாடுகள்

விசேடமாக இதில் ஒன்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கொடுகடன்களை  கட்டுப்படுத்த அளவு அல்லது மரபு ரீதியாக கட்டுப்பாட்டு கருவிகளைப் பாவிக்காத சந்தர்ப்பத்தில் மத்திய வங்கியால் கடைப்பிடிக்கப்படும் கொடுகடன் கட்டுப்பாடுகளே தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளாகும். வர்த்தக வங்கிகளுடைய கடன்களை தேர்ந்தெடுத்த முறையில் கட்டுப்படுத்தும் போது எப்படிப்பட்ட முதலீடுகளுக்கு கடன் வழங்கப்பட வேண்டும் என மத்திய வங்கி கட்டளையிடும். இதனால் அப்படிப்பட்ட முதலீட்டுப் பணங்களை வர்த்தக வங்கிகளினால் வழங்கப்படும் இதனால் வர்த்தக வங்கிகளினால் வழங்கப்படும் கொடு கடன்கள் கட்டுப்படுத்தப்படுகின்றது. இதனை முதலீட்டு வரம்பு கட்டுப்பாடு என்பர்.

இதன்படி இலங்கை மத்திய வங்கி இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்தும் மற்றயவற்றிற்கு ஆதரவளிக்காமலும் விட்டு வருகிறது.

மேற்கூறியது போன்று வெற்றிகரமான நாட்டின் பொருளாதார ஸ்திரமான நிலையினை பேனுவதற்கு பல்வேறுபட்ட நாணய நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் மத்திய வங்கியானது நடைமுறைப்படுத்தி வருகின்றது. 

எவ்வாறு இருப்பினும் பல இக்கட்டான சூழலிலும் நெருக்கடியிலும் மத்திய வங்கியானது தனது வரலாற்றுப் பாதையில் சிக்கித் தவித்து இருந்தது. இதனால் பல சவால்கள் மத்தி வங்கிக்கு விடுக்கப்பட்டிருக்கின்றது அவையாவன,

ஆரம்பத்தில் நிலவி வந்த ஊழியர் பற்றாக்குறை
1996 இல் மத்திய வங்கி கட்டிடத்தின் மீது நடத்தப்பட்டு வந்த பயங்கரவாத தாக்குதல்
வங்கி கட்டிடம் நிர்மூலமாக்கப்பட்டமை
1997 இல் கிழக்காசியாவில் ஏற்பட்ட நெருக்கடி

இவ்வாறான மீளமுடியாத பாரிய சவால்களை தனது சமார்த்தியத்தால் வெற்றி கொண்டது. குறிப்பாக ஒன்றை அவதானிக்கலாம்.

மத்திய வங்கியானது, இக்காலப் பிரிவின் போது பல பொருளியல் நிபுணர்களையும் ஏனைய துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களையும் உருவாக்கியதன் ஊடாக மனித வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்தது. நிர்மூலமான கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. அத்துடன் நிதிக் கொள்கையை செயற்றிறனுடன் கூடியவித்தில் அமுல் செய்வதன் ஊடாக உலக கொருளாதாரங்களில் தோன்றும் நிதி நெருக்கடிகளில் வெற்றி கொள்ளும் சக்திகளை அது பெற்றுக் கொண்டுள்ளது.

இவற்றுக்கும் மேலாக 21ம் நூற்றாண்டிலும் மத்திய வங்கி பல சவால்களை தம் முன் தாங்கி நிற்கின்றது. அவற்றுள் உலக மயமாக்கல்(புடழடிடளையவழைn) நிதித் துறையின் நவீனமயமாக்கல்(குiயெnஉயைட அழனநசடணையவழைn) உலக பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகள்(றுழசடன நுஉழழெஅiஉ ஊசiஉள) மற்றும் இன்னும் தீர்த்து வைக்கப்படாத இனப்பிரச்சனைகள் என்பன இன்று எதிர் கொண்டிருக்கும் பாரிய சவால்களாகும்.

எனவே இவற்றை எதிர் கொள்ள சில புதிய பயனுள்ள கொள்கைமுறைகளை கடைப்பிடித்தல் வேண்டும் அத்துடன் புதிய நிதிக் கொள்கை சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும். 

அப்போதுள்ள சவால்களை வென்று வெற்றிகரமான கொருளாதார முன்னேற்றத்துக்கு வழிகோல முடியும் குறிப்பாக நாணயக் கொள்கைகளின் புதுமைப்படுத்தலின் மற்றும் வங்கித்துறை சார்ந்த நவீனமயமாக்கலின் ஊடாக எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி சார்ந்த குறிக்கோளை அடைந்து கொள்ளலாம் என்பதே வாதமாகும். 

0 comments:

Post a Comment