ADS 468x60

04 August 2019

வேலையில்லாப் பட்டதாரி

இன்று கிராமமாகிக் கொண்டிருக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அதனால் சவால்களை விட சந்தர்பங்கள் எம்மத்தியில் கொட்டிக்கிடப்பதனைக் காணுகின்றோம். நாம் ஒருவருடன் அல்லது ஒரு குழுவுடன் தொடர்பைப் பேணுவதற்கான மார்க்கங்கள் இன்று பட்டி தொட்டி எங்கும் பரவிக் கிடக்கின்றது. 

பட்டப்படிப்பு முடிக்காத எவரும், நாம் காணும்படியாக தொழிலுக்காக பாதைகளை நாடி பதாதைகளை தூக்கிய சரித்திரம் எனக்கு தெரிந்த வகையில் இருந்தது கிடையாது. அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தொழிலில் தாமாகவே தேடி ஈடுபட, பட்டதாரிகள் இவ்வளவு கற்றுக்கொண்ட பின்னரும் தாமாகத் தொழிலில் ஈடுபட முடியாத நிலையை பலர் வன்மையாக விமர்சித்து வருகின்றார்கள். மறுபக்கம் எமது மனப்பாங்கில் 'கோழி மேய்ப்பதென்றாலும் கோர்ணமெண்டில் செய்யணும்' என்ற என்ற அகற்ற முடியாத எண்ணத்துடன் நமது சமுகம் இருந்து விட்டதனால் மிகவும் கஸ்ட்டப்பட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் முடிப்பவர்களுக்கு அரச வேலை எடுத்து அரசாங்க ஊழியர்களாக இருப்பதற்கே விரும்புகின்றனர்.


இந்த வருடத்தில் ஆயிரக்கணக்கான வேலையில்லாப் பட்டதாரிகள் பாதையில் இறங்கி அரசை அழுத்தியதால் அவர்கள் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகைகொண்டு விழுத்தியதையும் பார்கின்Nறூம். பொதுவாக தேர்தல் காலங்கள் வருகின்ற வேளையிலேNயு இவ்வாறான வேலைவாய்ப்புக்களை அள்ளி வழங்கி, அவர்கள் வேலைபெறுகின்ற ஸ்த்தலங்களில் இருப்பதற்கும் இ;டமில்லாத நிலையை உருவாக்கி அரசை வீங்கவைத்து விடுதனைக் காணலாம். இது ஒரு பாரிய குளப்ப நிலையாக இலங்கை தொழிற் சந்தையில் பார்க்கப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்க குறிப்பாக தொழில் நுட்பத்துறை, கட்டுமானத்துறை மற்றும் சுற்றுலாத்துறைகளில் தேவையான வேலைவாய்ப்புக்கள் குவிந்து கிடப்பதாகவும், அங்கு அதிகமான வேலையாட்கள் தேவைப்படுவதாகவும் இதற்க்காக வெளிநாடுகளில் இராப்பகலாக சுறுசுறுப்புடன் வேலைசெய்யும் ஊழியர்கள் இந்தியா, சைனா, நேபாள் மற்றும் எமது அண்மைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.

ஆனால் இன்னொரு புறம் உற்பத்திக்குறைவான துறையான விவசாயத்துறையில் இருந்து ஊழியர்களை வெளியேற்றி அதிக வருவாயை ஈட்டித்தரும் துறைகளான இன்டஸ்ரியில் இணைத்து நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் ஆனால் விவசாயத்துறையில் கொடுக்கும் மானியங்களுக்காகவும், சலுகைகளுக்காகவும் அதுபோல் பொதுத்துறையில் அல்லது அரச துறையில் கொடுக்கும் ஓய்வூதியத்துக்காகவும் தொழிலாளர்கள் உற்பத்தித்திறன் அற்ற துறைகளில் தேங்கிக்கிடப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் நஸ்ட்டத்தினையே தருகின்றது என துறைசார்ந்தவர்கள் குறைகூறுகின்றமை ஏனோ உண்மைதான் எனப்படுகின்றதல்லவா.

குறைந்தளவான உற்பத்தியை தந்துகொண்டிருக்கின்ற, புரட்சியில்லாத ஒரு துறையாக இலங்கையில் விவசாயத்துறை காணப்படுகின்றது. இதன் மொத்த உற்பத்திக்கான பங்களிப்பு வெறும் 7 விகிதம் மாத்திரமே. ஆனால் இந்த ஏழு விகித பங்களிப்புக்குமாக இதில் ஈடுபடும் ஊழியர்கள் தொகை இலங்கை ஊழியத்தில் 28 விகிதமாகும் இது அதிகத்திலும் அதிகம். இந்த விவசாயத்தில் வரட்சி, வெள்ளம் காரணமாக நஷ்டம் ஏற்படின் இவர்கள் அருகில் உள்ள நகர்ப்புறங்களுக்கு கட்டிட வேலைகளுக்கு சென்று ஓரளவு குடும்ப வருமானம் தேறியதும் மீண்டும் வீடு திரும்புகின்றனர்.

உண்மையில் வெளிப்படையாக நோக்கினால் இலங்கையில் வாழுகின்ற மக்கள் தொழில் புரிவதனூடாக அதிக சம்பளம் கிடைக்கிற, சமுகத்தினால் ஏற்றுக்கொள்ள மற்றும் மதிப்பளிக்கக்கூடிய வேலையினையே அநேகமானோர்; எதிர்பார்க்கின்றனர். இன்னும் சிலர் பணத்தினைவிட வேலையின் மூலம் மரியாதையினையும், நிரந்தர தொழில் பாதுகாப்பினையுமே விரும்புகின்றனர் இதனால்தான் அரச தொழிலுக்கு இத்தனை கிராக்கி நிலவுகின்றது. எமது கிராமப்புறங்களில் அரச தொழழலில் இல்லாதவர்களை எந்த பொது நிகழ்வுக்கும் அதிதிகளாக எடுக்காமல் இருப்பது, ஒரு உறுதிப்படுத்துதலுக்கு (பரீட்சை விண்ணப்பம்,  வங்கிக்கடன், சிபார்சு) இவர்களையே சமுகத்தில் நாடவேண்டிய நிலமையெல்லாம் அரச தொழிலுக்கான பலமடங்கு கிராக்கி நிலையினைக் காட்டிநிற்கின்றது.

இது போக தனியார் துறையில் இந்த அரச துறையில் வேலை செய்வதனை விட அதிக சம்பளத்தில் வேலைசெய்தாலும் இந்த மாலை மரியாதை அவர்களுக்கு சமுகத்தால் வழங்கப்படுவதில்லை.

இந்த ஒரு மோசமான நிலமை உண்மையான திறனாளிகளின் தேவையை வேலை தேடுகின்றவர்களுடன் இணைக்க முடியவில்லை அத்துடன் இவர்கள் போட்டித்தன்மைவாய்ந்த தனியார் துறையில் இணைந்து வேலை செய்வதற்கான ஏனைய சொப்ற் ஸ்கில் (ஆங்கில அறிறு, தொடர்பாடல், பிறஷன்டேஸஷன் திறன்) இவர்களிடம் இல்லாமை பாரிய சவாலாகப் பார்க்கப்படுகின்றது.
மறுபுறத்தில் இந்த மோசமான மனப்பாங்குக்குள் ஜீவிக்க முடியாத திறன் உள்ள ஊழியர்கள் 'வுளுக் கலர்' தொழில் தேடி வருஷா வருஷம் வெளியேறி வருகின்றமை எமக்கு ஒரு இழப்பாகவே சொல்லப்படுகின்றது.

ஆக இவற்றுக்கு என்ன செய்யலாம் எனப் பார்ப்போமானால், தனியார் துறையிலும் ஓய்வூதியத்தினை ஏற்படுத்தி தொழில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தலாம், அதுபோல் ஏனைய நன்மைகளையும் அரச துறையில் வழங்குவதுபோல் இவர்களுக்கும் சமமாக வழங்கவேண்டும். அப்போது பாரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடலாம்.

ஆக இவ்வாறான ஒரு குழப்பநிலையில் இருந்து மீண்டு கொள்கை ரீதியில் மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டுமெனில் கொள்கை வகுப்பாளர்கள் இந்த உலகமயமாக்கலின் பிரதிபலிப்பை நன்கு புரிந்துகொள்ளவேண்டும். நாளுக்கு நாள் தொழில் நுட்பம் மாறுகின்றது, இதனால் இன்று இருக்கின்ற தொழில் நாளை காணாமற் போய்விடுகின்றது. அதுபோல் தொழிலாழிகளின் பெறுமானமும் மாறுபட்டுக்கொண்டிருக்கின்றது, அதுபோல் இன்னும் பல காரணிகள் தொழில் சந்தையில் மாற்றத்தினை பிரதிபலித்த வண்ணம் உள்ளதனால் இவற்றை நிச்சயம் விளங்கிக்கொள்வதனூடாக மாத்திரம் ஒரு நீண்ட கால தந்திரோபாயத்தினை உருவாக்க முடியும்.

இன்னொரு பக்கம் மேல் மாகாணத்தை மையப்படுத்தியே பல பொதுச்சேவை வேலை வாய்ப்புகள் அதிகம் குவிந்துகிடக்கின்றன. இன்னும் ஒரு சில நகர்ப்புறங்களிலும் இந்த வாய்ப்புக்கள் உள்ளன. இங்கும் அரச துறைக்கு சமானமான வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டாலும் அங்கு பெண்களுக்கான கவனிப்பு மிகக் குறைவாகNவு உள்ளமை சுட்டிக்காட்டப்படவேண்டியதொன்றே. இதற்கு அப்பால் சமுக விஞ்ஞானத்துறையில் வெளியாகும் பட்டதாரிகளே அதிகம் இவ்வாறான வேலையை அதிகம் விரும்புகின்றார்கள் ஏனெனில் அவர்கள் தொழில் நுட்பம் மற்றும் ஏனைய தேவையான போட்டித்திறனை அதிகமானவர்கள் கொண்டிருப்பதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டில் பார்க்கப்படுகின்றனர்.

ஆக அரச நிதியில் பாரிய இழப்பை இந்த நிலை ஏற்படுத்திவிடும் அச்சுறுத்தல் அரசாங்கம் எதிர்நோக்கி வருகின்ற அதே நேரம் இந்த அரச துறைக்கு வெளியே நல்ல கவர்ச்சியான கேள்வியினை ஏற்படுத்துவதன் மூலமும் இந்த பிரச்சினைக்கான தீர்வை காணலாம். இவற்றுக்கு அப்பால் சுயதொழில் வாய்ப்புக்களை பாடசாலை பல்கலைக்கழக மட்டத்தில் இருந்தே ஊட்டிவளர்க்கவேண்டும். அதுவே முழு உற்பத்தியினையும் எமது மனித வளங்களைப்பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்பதே எனது கருதுகோளாகும்.

0 comments:

Post a Comment