ADS 468x60

02 August 2019

வறுமை இருக்கும் வரை அடிமைத்தனத்தை அழிக்க முடியாது.

வறுமையானது சிலரது வாழ்நாட்களில் கடந்துபோகும் ஒரு தற்காலிக நோய்மட்டுமே!

உழைப்பாளர் வர்க்கம் என்பது, அரசியல் விடுதலைக்காகவும் பண்ணையடிமை முறையின் எச்சங்களை ஒழித்துக் கட்டவும் விவசாயிகள் அனைவரின் போராட்டத்தை தலைமை தாங்க வல்ல ஓரே சக்தி என்பது மட்டுமல்ல, கிராமப்புற ஏழை மக்களுடன் கூட்டுசேர்ந்து உற்பத்திச் சாதன்ங்களின் மீதான தனியுடைமையை ஒழித்துக் கட்டி, சோஷலிச மாற்றங்களை நிறைவேற்ற வல்ல சக்தியும் இதுதான் என்று அறியமுடிகின்றது. இந்த வர்க்கத்தினை வாக்குக்காக மாத்திரம் பயன்படுத்தி வாக்கை காப்பற்ற விருப்பமில்லாத வர்க்கத்தை வேரறுக்கும் வர்க்கம் நாம். நாம் மிகப்பெரிய சக்தி என்பதை எப்பொழுதும் மனதில் வைக்கவேண்டும்.


வயிராற உணவில்லாமல்
வசிக்கவும் சிறு மனையிலாமல்
வளரும் இந்த எழிய நிலை
என்று மாறுமோ

தயவாய் உள்ளோர் இல்லாரை
அயலார் எனவே எண்ணாது
துயர் தீர்த்திட இரக்கம் கொண்ட

அன்று மாறுமே!

எமது வளமார்ந்த பல நிலங்கள் கையகப்படுத்தப்பட்டும், கன்னிவெடிகள் விதைக்கப்பட்டும் உள்ள சொந்த நிலங்களை இழந்து 'வந்தவனுக்கும் போரவனுக்கும்' கூலிவேலை செய்யும் ஒரு அடிமைப்படையாய் மாறிக்கொண்டிருக்கின்றனர் எம் மக்கள். அரசியல்வாதி இருந்து அதிகாரிகள் வரைக்கும் அடுத்த பரம்பரையை அற்ப சொற்ப ஆசைகளுக்காக, அறிவில்லாது சொந்த எச்சிப் பிழைப்புக்காக மக்களுக்கு கொடுத்த நம்பிக்கையை விற்றுப்பிழைக்கும் இவர்களின் மனநிலை மாறப்போவதில்லை.

மாறாக இவர்களுக்கு தக்க பாடம்படிக்கும் பூரண அதிகாரம் மக்களுக்கு இருக்கிறது. அந்த அதிகாரம் மக்களின் வாக்குப்பலத்தில் உள்ளது.

ஆனால் எல்லாரும் அரசியல் மூலம்தான் ஆற்றுப்படுத்தவேண்டும் என்றில்லை தனிமனித விருப்பம் இருந்தாலே போதுமானது. அதையாவது எம் இளைஞர்கள், அதிகாரிகள் முன்வந்து அவற்றை செய்து மக்களை இடரில் இருந்து எடுத்தேத்த வேண்டும்.

எல்லா மனிதரும் யாராவது ஊக்கப்படுத்தவேணும், தட்டிக்கொடுக்கவேணும் என்று காத்துக்கிடக்கிறார்கள். அந்தப் பொறி எங்க இருந்து கிளம்புது என்பதை பலர் தமது ஈகோவால் அறிய மறுத்து விடுகின்றனர். நான் வழமைபோல கள விஜயம் போனேன், 

1) ஒரு மக்கள் சந்திப்பு அங்கு பாதிக்கப்பட்ட வீதியை செப்பனிடும் மக்களுடன் பல விடயங்களைக் கேட்டறியக் கிடைத்தது.




2) இன்னும் ஒரு பாலர் பாடசாலைக்கு வரச் சொல்லி அங்கு போனேன் அவர்களுடன் பாடினேன் அவர்களுடன் அளவளாவிவிட்டு அங்கு சிறப்பாக நடாத்தும் ஆசிரியர்களையும் பாராட்டினேன்.


3). இன்னும் ஒரு குடும்பம் பல இழப்புகளை சந்தித்த குடும்பம் உரையாடினேன் அவர்களது பிரச்சினைகளை உரிய அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளக்கிடைத்தது.

இவர்கள் எல்லாம் யாராவது ஒருவர் உற்சாகச் சூழலை ஏற்ப்படுத்த மாட்டாரா என தாமரை மலர்கள் சூரியனது வருகையை மலர்வதற்க்காக பார்த்திருப்பதுபோல் ஏங்கிக் கிடக்கின்றனர்.அதிலும் பாதிப்புக்குள்ளாகி நலிவுற்றுள்ள எம்மக்கள்.

இவர்களுக்கு எல்லாவகையிலுமான வழிகாட்டல்கள், ஆற்றுப்படுத்தல்கள் என்பனவற்றை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். இதைத்தான் பல பொதுஜன அதிகாரிகள் மற்றும் சில படித்து பெரும் பதவியில் இருப்போரும், உழைத்து உச்சத்தில் இருப்போரும் செய்யவேண்டி இருக்கிறது. அந்த இடைவெளி எப்போது குறையுமோ அப்போதுதான் இவர்களது பாரமும் குறையும்.

உங்கள மாதிரித்தானேங்க இவங்களும் தட்டிக்கொடுப்பு, உற்சாகத்தை எதிர்பார்ப்பாங்க!! றைபண்ணிப் பாருங்க நம்மளுக்கும் அவங்களுக்கும் நெறய சந்தோசம் கிடைக்குமுங்க! சில அரசியல்வாதிகளும் அந்தப் பரிபாரங்களும் இப்படித்தான் பல நேரங்களில!கிராமத்துப்பக்கம் அந்த வாக்குகள பெற மட்டும் போவாங்க! அப்புறம் மக்கள்தான் அவங்கட்டபோய் காத்துக்கிடக்கணும். மக்கள் பாவமுங்க அவங்களுடன் ஒன்றிணைந்து அவர்களை உற்சாகப்படுத்தலாமே!

0 comments:

Post a Comment